Saturday, March 26, 2011

அர்த்தமில்லாத கதை 26/03/11


என்னதான் சொல்றான் பெரியவன்?

என்னத்தை சொல்றது.அவனுக்கு அந்த கம்பெனி வேலை பிடிக்கலையாம்.தஸ்புஸ்சுனு பேசிக்கறாங்களாம்.மதிக்கறதே இல்லையாம்.போதாத குறைக்கு இந்த புறம் பேசறவங்க வேற தொல்லை.கேள்வி மேல கேள்வி கேக்கறாங்களாம்.அவங்க பேசறது இவனுக்கு புரியலை.இவன் பேசறது அவங்களுக்கு புரியலை

அதனால என்ன பண்ணனும் கிறார் துரை?

அதான் இங்கயே வந்து செட்டிலாயிக்கிறேன்.விவசாயம்,பஞ்சாயத்து எல்லாத்தையும் பாத்துக்கிறேன் அப்படிங்கிறான்.எதாவது செய்யுங்க..

பெரியவர் யோசனையில் ஆழ்ந்தார்.சின்னவன் கிட்ட எல்லாப் பொறுப்பையும் ஒப்படைச்சுட்டு நிம்மதியா இருக்கலாம்னா விட மாட்டாங்க போலிருக்கு.இதுவரைக்கும் குடும்ப சண்டை வெளியே தெரியாம பூசி மறைச்சாச்சு.இனிமே கஷடம்தான்.ஏற்கனவே ஊர் பிரச்சனை நிறைய தீக்காம இருக்கு..யாரும் ஏதும் பேசாதபடிக்கி ஊர்ல இருக்கிற எல்லாத்துக்கும் சோறு,புது துணி எல்லாம் ஓசியில கொடுத்து வாயை மூடி வச்சிருக்கோம்.பட்டணத்து பங்காளியோட இப்ப உரசல் கூடி கிட்டே போகுது.அவன் பிராது கொடுக்கற அளவுக்கு போயிட்டான்.நமக்கு தெரியாம நிறைய நடக்குது.முன்ன மாதிரி குடும்பம்,வேலையாளுங்க எல்லாம் நம்ம பேச்சை கேக்கறதில்லைன்னு நினைக்கும் போது அவருக்கு ஆத்திரமாக வந்தது.பேசாம எல்லாத்தையும் வுட்டுட்டு காசி ,ராமேஸ்வரம் போயிடலாமான்னு கூட நினக்க தோணுது. இதுல நாச்சியாரும் , கரிமேடு கருவாயனும் கூட்டாளியாகிட்டாங்க.. கொஞ்சம் அசந்தா அம்புட்டுதான். அசலுக்கே ஆப்புதான்.. யோசனையில் ஆழ்ந்தவர்
போன் அடிக்க நம்பரை பார்த்தார்..அந்த வீட்டிலிருந்துதான்

அது அடுத்த பிடுங்கல்.என் பொண்ணு மட்டும் என்ன ஏப்ப,சாப்பையா?அக்கா மகன்,பேரன் வரைக்கும் எல்லாருக்கும் வாரி இறைச்சீங்க.சும்ம ஒப்புக்கு சப்பாணியா எங்களுக்கு ஏதோ .. அதோட கடமை முடிஞ்சதுன்னு கையை உதறினா என்ன அர்த்தம்..

இத்தனைக்கும் சமீபத்திய சம்பாத்தியம் முழுக்க இவங்கதான் எடுத்துக்கிட்டாங்க.பட்டணத்துபங்காளி பிராது கொடுக்க காரணமே அதான்.இப்ப நம்ம நிலைமையை அனுசரிச்சு நடந்துக்கணும்னு தோண மாட்டேங்குது யாருக்கும்.வேதனையுடன் கண்ணை மூடி சிந்தனையில் ஆழ்ந்தார்.இவர் செய்யறதும் தப்பு.பட்டணத்து பங்காளியை வீட்டுக்குள்ள சேர்க்கமாட்டார்.திண்ணையிலேயே உக்கார வச்சு அஞ்சோ,பத்தோ கொடுத்து வாசலோட அனுப்பிடுவாரு .அதான் அவன் இப்ப ஆட்டம் காட்டரான்...

அம்மா..எத்தனை வாட்டி உனக்கு சொல்றது?அப்பாவை அனாவசியமா தொந்தரவு பண்ணி டென்ஷன் ஏத்தாதேன்னு.இப்ப பாரு காலை டிபனை சாப்பிடுட்டு வெளியில போயிட்டாரு.கிட்ட,தட்ட ரெண்டு மணிநேரம் ஆச்சு..சாப்பிட வராம ஏரிக்கரையாண்ட போய் உட்கார்ந்து அடம் பிடிச்சுகிட்டு இருக்காரு..வா..போய் சமாதானம் பண்ணி கூட்டிகிட்டு வரலாம்.

அண்ணே..திருப்பாச்சி காரங்க எல்லாம் புலம்பறாஙக.தொழிலே நொடிச்சு போச்சாம்.நம்மதான் காரணம்னு திட்டறாங்க.பட்டணத்தை விட்டு வந்துடுங்க அண்ணே..நீங்க இங்க இருந்தப்ப அத்தனை பேரும் பல்லு கூட விளக்காம எந்திரிச்சதும் வந்து உங்களுக்கு வணக்கம் போட்டுட்டு போவனுங்க.அந்த மரியாதை அங்க வருமா?அங்கல்லாம் நீலக்கலர் சட்டை.டை.புல் பேண்ட் இதுக்குதான் மதிப்பு சாஸ்தி.நமக்கு சரிபட்டு வராது..இஙக தம்பியை பாருங்க..ஊரே மெச்சுது.புரோட்டா,கால்,கறி எல்லாம் அவர் இலையிலதான் வக்கிறாங்க.யோசிங்க அண்ணே..

அவர் யோசிக்க ஆரம்பிக்கிறார்.

தம்பி வீட்டுலயயும் இதே பேச்சுதான்.முன்னயே பேசித்தானே பட்டணத்துக்கு போனாரு.இப்ப தீடீர்னு நானும் இங்கய வரேன்னா என்ன அர்த்தம்.உங்களுக்கு சரியா போட்டி போடத்தானே.நீங்க அப்பாகிட்ட கட் அண்ட் ரைட்டா சொல்லிடுங்க.இல்லை நம்ம குடி மூழ்கிடும்.தம்பி யோசிக்க ஆரம்பித்தார்.

அண்ணனின் யோசனையும் வேறு மாதிரிதான் இருந்தது . எதுக்கும் திருவிழா முடியட்டும் . பெண்டிங்ல இருக்கிற பிராதுல அந்த வூட்டுதை ஒழிச்சிட்டா..அப்புறம் உடன்பிறப்புகளுக்குள்ள முடிவு பண்ணிக்கலாம் .

தள்ளாத வயதுதான் ..என்ன ..செய்றது..நாம் போகலைன்னா , உள்ளதும் போயிடுமே...பாவம் பெரியவர் சாமியை கும்பிட்டு, வில் வண்டிக்கு சூறைத்தேங்காய் உடைத்தார் ..

வீட்டுப்பிள்ளைகள் ஊர்த்திருவிழாவில் பயாஸ்கோப் காட்டிக்கொண்டிருந்தார்கள்

ஊர் வழக்கம் போல் வேடிக்கை பார்க்க காத்திருந்தது.

16 comments:

vinthaimanithan said...

நாளபின்ன நம்ம காலம்போனத்துக்குப் பொறவு பரிவட்டம், மொத மரிவாதியெல்லாம் தம்பிக்குப் போயிரும்னு சொல்லி சாப்பாட்டுல வெசம் வெக்க திட்டம் போடுறான்னு சொல்லி வெரட்டி உட்டமே. அந்த சின்னத்தம்பி கொஞ்சநாளா நாச்சியார்கூட சேந்துதான் சுத்திட்டு இருந்தான். இப்ப அவளுக்கும் அவனுக்கும் ஏதோ கரைச்சல்போல. அவனை எப்டியாவது நம்ம பக்கம் கொண்டாந்துட்டா நாளபொறவு பட்டணத்துக்காரனுவ கூட பஞ்சாயத்து பண்ண கொஞ்சம் வசதியா இருக்கும் ஆன பயபுள்ள இன்னமும் பரிவட்டம் கட்ற ஆசைய மனசுக்குள்ளாற வெச்சிருந்தான்னா தப்பாச்சே. ஏற்கனவே நடுத்தம்பியும் பரிவட்டத்துக்கு ஆசப்பட்டதுக்காவ தென்னந்தோப்பு கணக்குவழக்க மட்டுமருவாதி இல்லாம கேக்குறான்னு வெரட்டிவுட்டு, அவம்பாட்டுக்கு திருவிழாவுல கரகாட்டம் ஆடுற நாச்சியாள சேத்துக்கிட்டு கடேசிவரைக்கிம் தீராத தலைவலிய கொடுத்துட்டு போய்ச் சேந்துட்டான். காலம்போன கடேசில ஏதாச்சும் வேப்பமர நெழலாப்பாத்து கட்டிலைப்போட்டமா, வேளாவேளக்கி சாப்டுட்டு நிம்மதியா இருந்தமான்னு இல்லாம என்னடாது இது சனிப்புடிச்சமாரி?!..... எழவு....

vasu balaji said...

இருந்து இருந்து கோட்டச்சாமி பூமிக்கும் ஆகாசத்துக்குமா ஆடியிருக்கு. ராஜாராம நீங்க உடுக்க வேற அடிக்கிறீயளோ? முடியல ராசாக்களா:))))

க ரா said...

நீங்க என்னதான் சொன்னாலும் தாத்தாதான மணிஜீ......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கண்ணை மூடி சிந்தனையில் ஆழ்ந்தார்.இகண்ணை மூடி சிந்தனையில் ஆழ்ந்தார்.//

அதைப்பார்த்து வேலைக்காரனுக சொல்லியிருப்பாங்களே.. ”பெரியவர் கன்ணை மூடி யோசனை பண்றார். கண்ணத்திறந்தும் பாரு.. எல்லாப்பிரச்ச்னையும் ஊதித்தள்ளிடுவாருன்னு. ஏன்னா.. அவரு பார்க்காத பிரச்சனையானு?”
ஹி..ஹி

காவேரிகணேஷ் said...

எப்படில்லாம் லிங்க் பண்றீங்க..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அர்த்தமுள்ள, அர்த்தமில்லாத கதை..

செ.சரவணக்குமார் said...

வேட்டை ஆரம்பமாயிடுச்சிடோய்..

ரோஸ்விக் said...

ஏன்னா சரக்குண்ணே??? இப்புடி சுத்தி ஏத்தியிருக்கு... :-)

கலக்கல்...

sriram said...

ரோஸ்விக், சரக்கெல்லாம் அதே சரக்குத்தான், இன்னிக்குத்தான் அண்ணனுக்கு மிக்ஸிங் செமையா கை கூடி வந்திருக்கு அதான் கலக்கலோ கலக்கல்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பெசொவி said...

விந்தை மனிதன் எழுதின பிற்சேர்க்கை சூப்பர்!

Unknown said...

அர்த்தமான கதைதான.அருமையா வந்துருக்கு.

'பரிவை' சே.குமார் said...

கலக்கலோ கலக்கல்.

geethappriyan said...

அட்டகாசம்ணே

R.Gopi said...

மணிஜீ....

எங்களின் முதல் குறும்படமான “சித்தம்” பார்த்து விட்டு சொல்லவில்லை... ”விதை - இது இரண்டாவது முயற்சி... இதையாவது பார்த்து விட்டு கருத்து சொல்லுங்களேன் :

"விதை” – குறும்படம் http://jokkiri.blogspot.com/2011/03/blog-post_22.html

----------

“தல” சொத்து கணக்கு தந்ததை பற்றிய பதிவு :

உலகின் ஒரே ஏழை - அட்ராட்ர நாக்க முக்க... http://edakumadaku.blogspot.com/2011/03/blog-post_26.html

மணிஜி said...

நன்றி நண்பர்களே..

கோபி..நிச்சயம் பார்த்து விட்டு பகிர்கிறேன்

கலையரசன் said...

நானும் இதில் ஒருவன்...