இன்னும் துண்டிக்காத
தமிழ்த் தொப்புள் கொடியில்தான்
சுவாசிக்கின்றார் எங்கள்
தொல்காப்பிய தாத்தா
ஆறாவது முறையாக
அமுதசுரபி வேண்டி
நிதி கேட்டு நடைவண்டி பயணம்
ஏழு தலைமுறைக்கு
இந்திரபுரியை நிர்மாணித்து கொடுத்த
பகுத்தறிவு பெருங்காயம்
நாங்கள் என்னவோ
எப்போதும் ஏழாம் உலகத்தின்
பிரஜைகள்தான்
புரட்சியின் கவர்ச்சி
எச்சம்
மகன் நீதி சோழனின்
காளை மாட்டை காயடிக்க
பச்சை கல்யாணியில்
பட்டினிப்பிரவேசம்
ஆளுக்கொடு ஆடாம்
ஓட்டு ரட்சிக்கணும்
எண்ட கொடநாட்டுக்கு
அம்*மே* விற்கு
அதற்க்கபுறம் கண்ணில் காட்டுவாராம்
புழுக்கைகளை
கிளையில் அமர்ந்து
அடி மரத்தை வெட்டும்
தமிழ்க்குடியின் கோடாரியின்
கைப்பிடியில் சுற்றப்பட்டிருப்பதென்னவோ
பாட்டாளியின் கோவணம்தான்
பட்டு வேட்டி கட்டி
பசுமைப்பொங்கல்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
ப்ரீதிக்கு நான் கேரண்டி
சர்தான் போடி
செளபாக்கியாவையும் சேர்த்துதான்
யார் ஊர்ல வந்து என்ன பேச்சு
எல்லாம் உங்களுக்கு
என்கிறார்கள் எங்கள்
ரட்சகர்கள்..பாவம்
அப்ப உங்களுக்கு
வேறென்ன
திரும்புங்கள்
குப்புறப்படுங்கள்
சுண்ணாம்பு செலவு கூட
கழகங்களின் வளர்ச்சி
நிதியிலிருந்துதானாம்
பொழைக்கத் தெரியாதவங்க
யாரும் யாருடனும்
எதுவும் எதையும்
ஆக ஒன்று நிச்சயம்
நாசமாகப்போகட்டும்
என்கிறான்
கலியுக கவுஜன்
19 comments:
:)))
சூ...ல சுண்ணாம்புதான்
// யாரும் யாருடனும்
எதுவும் எதையும்
ஆக ஒன்று நிச்சயம்
நாசமாகப்போகட்டும்
என்கிறான்
கலியுக கவுஜன் //
அடிபொளி யேட்டா.
படு காரம் மணிஜீ.
உறைக்குமா மக்களுக்கு
உறைச்சுட்டாலும்??
எப்படி?இப்படி?
அய்யோ கொல்றாங்களே
அய்யோ கொல்றாங்களே
அய்யோ கொல்றாங்களே
:)
;-)) ரௌடி! :-)
அய்யா.. சாமி... ஜீ.. நீங்கதான் இனிமே பதிவுலக தாதா :)
கலியுக கவுஜா:))
கவிஞர்களில் ரவுடித்தனம் செய்யும் கபாலி நீதாண்ணே..!
மௌஸ் சுடுது :)
நேசர் கமெண்ட்டோடு என் கம்ப்யூட்டர் எரியுது :)
ஐயோ...கொல்றாங்கோ...
ஐயய்யோ...கொல பண்றாங்கோ...
மணிஜீ,
ரொம்ப நல்லாயிருந்தது... இது மாதிரி எழுத யாரிருக்கா உங்களவிட்டா? தொடர்ந்து எழுதுங்க... மணிஜீ... பஸ்ல போற நேரத்துல...இங்கயும் வந்து ஏதாவது எழுதிட்டு போங்க...
அன்புடன்
ராகவன்
அற்புதம்
நாங்கள் என்னவோ
எப்போதும் ஏழாம் உலகத்தின்
பிரஜைகள்தான்//
Interesting.
//வேறென்ன
திரும்புங்கள்
குப்புறப்படுங்கள்
சுண்ணாம்பு செலவு கூட
கழகங்களின் வளர்ச்சி
நிதியிலிருந்துதானாம்
பொழைக்கத் தெரியாதவங்க//
பளார்...பளார்!
:))
Post a Comment