Sunday, January 23, 2011

கால்...




தேவையான இடங்களில் போடுவதே இல்லை.. வேண்டாத இடங்களில் ஒன்றுக்கு இரண்டாக . நாற்காலிகளையையோ , விளக்குகளையோ சொல்லவில்லை . காலை சொல்கிறேன் . கால் மேல் எனக்கு அவ்வளவு பிரியம் .


முதலில் நான் பார்த்தது அம்மாவின் காலாகத்தான் இருக்க வேண்டும் . அப்படித்தான் நினைவு . அப்புறம் அப்பாவின் கால் . “தென்னை மரத்துல ஏறியா ..தேங்காயை பறிக்கிறாயா என்ற அந்த பாட்டும் கூட . சில சமயம் அப்பா , அம்மா இருவரின் கால்களும் கொஞ்சம் குழப்பமாய் தெரிந்ததும் உண்டு அரை தூக்கத்தில்.. அதற்கு பிறகு கொஞ்சம் நாளில் பூரணி குட்டி . தங்கச்சி முகத்தை பாருடா என்று அம்மா சொல்வாள் . நான் பூரணியின் பிஞ்சு கால்களையே வருடிக்கொண்டிருப்பேன் . சில சமயம் கன்னத்தில் வைத்து உரசிக்கொள்வேன் .

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எனக்கும் , சிவகுருவுக்கும்தான் போட்டியாக இருக்கும் . ஆன் யுவர் மார்க் என்றதும் இருவரும் ஏரொடைனமிக் போஸில் இருப்போம் . நான் சிவகுருவின் கால்களை பார்ப்பேன் . நானும் அதே மாதிரிதான் இருப்பதாக குரு சொல்வான் . பந்தயம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் அம்மா சுடுதண்ணியில் கல் உப்பை கரைத்து வாளியில் கொடுப்பாள். காலை உள்ளே விட்டு இருக்கும் சுகமே தனிதான் . ஆதுரத்துடன் பாதங்களை வருடிக்கொண்டே , அதனுடன் மானசீகமாக பேசிக்கொண்டிருப்பேன் . பாதம் பதில் சொல்வதை என் உள்ளங்கையால் உணரமுடியும் தெரியுமா ? அதன் பின் கால்கள் மேலான என் காதல் கன்னா பின்னாவாயிற்று .

உஷா டீச்சரின் கால் விரல்களில் திடீரென்று முளைத்த அந்த வளையங்களின் மீது கோபம் வந்தது . “டீச்சர் “ இதை கழட்டிடுங்க என்று சொல்லி டீச்சரிடம் அடி வாங்கினேன் .ஆனால் கொஞ்ச நாளில் உஷா டீச்சர் கால் விரல்களில் அதை காணவில்லை . டீச்சர் முகத்தில் பழைய களையும் இல்லை . பாவம்டா என்று அம்மா சொன்னாள் .

அப்புறம் புவனா . அவள் பச்சை பாவாடை. லேசாக மஞ்சள் பூசிய பாதங்கள். அதில் சிரிக்கும் கொலுசுகள் . நான் உட்கார்ந்திருக்கும் டெஸ்கிலிருந்து இடது புறம் சற்று அரை கீழாக பார்த்தால்கண்ணை பறிக்கும் .சட்டென்று திரும்புவாள் . சிரிப்பாள் .


“இச்சா ..”இனியா “ .காயா..” பழமா “ பச்சை பாவாடையை இரு கைகளாலும் சற்றே மேலேற்றி கேட்டுக்கொண்டிருந்தாள் புவனா. அப்படியே பென்சிலில் வரைந்து எல்லாம் தானடி என்றேன் . எல்லோர் எதிரிலும் அறைவது போல் பாவனை காட்டியவள் , ரகசியமாக அந்த கொலுசுக்கு கொஞ்சம் தங்க கலர் பண்ணி கொடுறா என்று கேட்டாள் . வைத்திருக்கிறாளோ..இல்லை புருஷனுக்கு பயந்து கிழித்து விட்டாளோ ..


அப்புறம் ஒரு ஸ்கூட்டர்காரனின் கால் மட்டும் தனியே கிடப்பதை பார்த்தேன் . ஸ்கூட்டரின் ஒரு சக்கரமும் தனிநீங்கள் யூகிக்கும்படி எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் நம்புகிறீர்கள் .

நான் மெல்ல என் வீல் சேரினை உருட்டிக் கொண்டு போனேன் . அல்லது போலியோ பாதித்த என் கால்களை பிரத்யோக காலணிக்குள் நுழைத்து , . ஊன்று கோல்களை ஏந்தி ..டக்..டக்.. என்ற கொஞ்சம் , கொஞ்சமாக காற்றில் கரைந்தது . ..அதெல்லாம் இல்லை . ப்ளீஸ் ஸ்டாப்... நான் நன்றாக இருக்கிறேன் . தினம் காலை , மாலை 10 கி.மீட்டர் ஓடுவேன் . உங்களுக்கு தெரியுமா ? நான் 100 மீட்டரில் ஸ்டேட் சாம்பியன் ...

16 comments:

பத்மா said...

class

நையாண்டி நைனா said...

அண்ணே... உங்க காலை கொஞ்சம் காட்டுங்க....

CS. Mohan Kumar said...

அருமைய்யா!!

பா.ராஜாராம் said...

அருமை மணிஜி!

கால் கெளப்பி எங்கும் ஓடி விடாமல் இப்படி ஒரு இடத்தில் இருந்து எழுதும், போதும்! :-)

எல் கே said...

இப்படிலாம் எப்படி எழுதறீங்க? எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்க

நித்யன் said...

சிறப்பான ஓட்டம்.

இன்னும் கொஞ்ச நேரம் ஓடியிருக்கலாமோ....

அன்பு நித்யன்.

பெசொவி said...

//உஷா டீச்சரின் கால் விரல்களில் திடீரென்று முளைத்த அந்த வளையங்களின் மீது கோபம் வந்தது . “டீச்சர் “ இதை கழட்டிடுங்க என்று சொல்லி டீச்சரிடம் அடி வாங்கினேன் .ஆனால் கொஞ்ச நாளில் உஷா டீச்சர் கால் விரல்களில் அதை காணவில்லை . டீச்சர் முகத்தில் பழைய களையும் இல்லை . பாவம்டா என்று அம்மா சொன்னாள் .
//

ஒரு பெண்ணின் திருமணத்தையும், அவள் கைம்பெண் ஆனதையும் இவ்வளவு அருமையாகக் கூட சொல்ல முடியுமா?

great!

Unknown said...

என்ன அவசரம் ஜி...

மணிஜி said...

நண்பர்களே...சும்மா டச் விட்டு போக கூடாதுன்னு எழுதி பார்த்தேன்...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் பெரிதும் வேண்டுகிறேன்..இந்த வருடம் எப்படியாவது நானும் எழுத்தாளனவாவது உங்கள் பொன்னான கைகளில்தான் உள்ளது என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ள அதே நேரத்தில்..இன்னொன்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுவதில் தவறில்லை என்பதில் மாற்று கருத்தும் இருக்க முடியுமா என்பதை....

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

Jerry Eshananda said...

டச்சிங் ..டச்சிங்.

ராகவன் said...

அன்பு மணிஜீ,

ரொம்ப நல்லாயிருக்கு... இன்னும் நீட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது... இது மாதிரி எழுத நீங்க மட்டும் தானே மணிஜீ இருக்கீங்க!

அன்புடன்
ராகவன்

Ganesan said...

ரொம்ப நாள் கழித்து உங்க பதிவு,காலார படிக்கலாம் நினைத்து மனதார படித்தேன்.

இந்த வருடம் உங்க புத்தகமா?

க.பாலாசி said...

அசத்தல்..அசத்தல் தலைவரே...அந்த இச்சா, இனியா மறந்தே போச்சு.. இதுபோல் மீண்டு துளிர்க்கதான் முடிவதில்லை..

யுவா said...

அருமை. வலம்புரிஜான் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் தன் கால்களுக்காக எழுதிய கட்டுரை ஒன்று ஞாபகத்தில் வருகிறது. அப்போது அவர் சர்க்கரை குறைபாட்டால் கால்கள் பதிக்கப் பட்டிருந்ததாக ஒரு நினைவு.

அகநாழிகை said...

மணிஜி, கதை அருமை.

//உஷா டீச்சரின் கால் விரல்களில் திடீரென்று முளைத்த அந்த வளையங்களின் மீது கோபம் வந்தது//

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.