ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியின் பெரும்பாலான பகுதிகளில் பனி உறைந்திருந்தது.அப்போது ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக தாவரங்கள் மூலம் கிடைத்த காய்,கனி,கிழங்குகள் கிடைக்கவில்லை.தாவர உணவுகளையே நம்பி வாழ்ந்த மனிதன் அசைவ உணவுக்கு அப்போதுதான் தாவினான்.மாமிசத்தில் உள்ள புரதமும்,கொழுப்பும் குளிரை சகித்துக் கொள்ள உதவியதுடன் வெகு தூரம் சென்று வேட்டையாட சக்தியையும் கொடுத்தது.
இன்று ஆண்களும்,பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள்,ஆதிகாலத்தில் உணவை சேகரிக்க ஜோடியாகப் போனார்கள்.காலப் போக்கில் வேட்டையாடுவதில் ஆபத்துக்கள் பெருகின.பெண் உயிரோடு இருந்தால்தான் மனித இனம் பெருகும் என்பதால் பெண்கள் வேட்டைக்கு வருவதை குறைத்துக் கொண்டார்கள்.இப்படித்தான் பெண்களை ஒரிடத்தில் நிலையாக தங்க வைக்கும் பழக்கம் தொடங்கியது.
பெண்களைப் போல் தாங்களும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஆதிகால ஆண்களுக்கும் இருந்ததை பாரம்பரிய கலை வடிவங்கள் நிரூபிக்கின்றன.தன் தொடையிலிருந்து மகன் டயோனிஸசை பிரசவிக்கும் கிரேக்க கடவுள் சீயஸ்,தன் விலா எலும்பிலிருந்து ஏவாளை உருவாக்கிய ஆதாம் ஆகியோரை உதாரணமாக கூறலாம்.
மாடு மாதிரி உழைக்கிறாள்" என்று அதிகமாக உழைக்கும் பெண்களை பற்றி சொல்கிறார்கள். உண்மையில் ஆணைக்காட்டிலும் பெண்ணிடம்தான் அதிக சக்தி இருக்கிறது.ஆணின் உடலில் தசை அதிகம்.கொழுப்பு குறைவு.அதாவது 40% தசை.15%கொழுப்பு கொண்டது அவன் உடல்.பெண்ணோ நேர்மாறாக தசை 30%.கொழுப்பு 27%.தசைகள் இயங்க நிறைய எரிபொருள் தேவை.கொழுப்புதான் எரிபொருளை சேகரித்து வைத்திருக்கும்.பெண்கள் உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் ஆண்களை விட கடினமாக உழைக்க முடிகிறது.
ஆண் உடலில் டெஸ்ட்ரோஜன் அவனை உயரமாக,புஷ்டியாக,வழுக்கையாக,வீரம் உள்ளவனாக,உடல் தோலில் அதிக ரோமங்கள் கொண்டவனாக மாற்றுகிறது.ஈஸ்ட் ரோஜன் பெண்னை கொழுக் மொழுக்காக,மார்பு பெரிதாக,இடை சிறிதாக இடுப்பு அகலமாக மாற்றுகிறது.இந்த தோற்றத்தில் பெண்ணை பார்க்கும் ஆண் ஈர்க்கப்படுகிறான்மேலும் இதே ஈஸ்ட் ரோஜன் பெண்களின் நோய் எதிர்ப்பு கேடயமாகவும் விளங்குகிறது.
ஒரு பெண்ணுக்கு முதன் முதலாக மாதாந்திர உதிரப் போக்கு ஏற்படும்போது அவள் பருவம் அடைந்து விட்டதாக கருதப்படுகிறாள்.ஆனால் ஆண்களுக்கு அது போல் இல்லை.அவன் அரும்பு மீசை,உடலில் வளரும் ரோமங்கள் அதற்கு அறிகுறியாகின்றது.ஆதிகால ஆண்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது.ஆணும் வயதுக்கு வந்து விட்டான் என்பதை உணர்த்த அவன் உடலில் கீறி ரத்தத்தை வெளியேற செய்வார்கள்.அந்த வடு அவனை வயதுக்கு வந்தவனாக அடையாளம் காட்டும் இன்றும் ஆப்பிரிக்க பழங்குடியினர் நம்புகின்றனர்.
மனித நாகரீக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்ணை ஆண்களுக்கு பிடிக்கவில்லை.இதனால் அவளை ஒதுக்கினார்கள்.இதைப் புரிந்து கொண்ட பெண்கள் ஆண்கள் எதிரில் அப்பாவி போல் நடிக்கத் தொடங்கினாள்.சீனப் பெண்கள் ஆண்கள் புரிந்து கொள்ளா வண்ணம் உருவாக்கிய எழுத்து வடிவம் "நூஷூ".அப்படியென்றால் "பெண்ணின் எழுத்து"என்ற அர்த்தமாம்.
உலகிலேயே அதிக குழந்தைகள் பெற்றவர் ரஷ்யாவின் "வஸீலியே" 69.எதில் 12 பேர் இரட்டையர்.21 பேர் மூன்று முன்றாக பிறந்தவர்(7 தடவை)16 பேர் நான்கு நான் காய் பிறந்தவர்..(4 தடவை).மீதி 20 பேர் தனியாய் பிறந்தவர்கள்.உலகில் அதிக குழந்தைகளுக்கு அப்பா என்ற பெருமையை தட்டி செல்பவர் மொராக்கோ நாட்டின் மகாராஜா மவுலே இஸ்மாயில்..பல மனைவிகள்(ஹீம் ...) மூலம் 888 பிள்ளைகள்.(சே ..சே )
டிஸ்கி : நான் ஆணாதிக்கவாதி இல்லை
20 comments:
சே! நானும் மணிஜி ஆணாதிக்கவாதியில்லைன்னு நம்பிட்டேன் கடைசி பாரா படிக்கும்வரை.:))
:-)))))))))))))
அப்ப பெண்ணியவாதியா..?
அப்ப என்ன வாதி நீங்க?????
அப்ப நீங்க குதர்க்கவாதி! : )
888 ? !!!!!!!!!!!!
குறிப்புகள் பகிர்ந்தமைக்கு நன்றி!
:)
அண்ணன் தண்டோரா அவர்களே... நான் "ஆணி"யாதிக்கவாதி தான்... இப்ப நான் என்ன செய்ய?
/*உண்மையில் ஆணைக்காட்டிலும் பெண்ணிடம்தான் அதிக சக்தி இருக்கிறது.ஆணின் உடலில் தசை அதிகம்.கொழுப்பு குறைவு.அதாவது 40% தசை.15%கொழுப்பு கொண்டது அவன் உடல்.பெண்ணோ நேர்மாறாக தசை 30%.கொழுப்பு 27%.தசைகள் இயங்க நிறைய எரிபொருள் தேவை.கொழுப்புதான் எரிபொருளை சேகரித்து வைத்திருக்கும்.பெண்கள் உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் ஆண்களை விட கடினமாக உழைக்க முடிகிறது.*/
பெண்களுக்கு கொழுப்பு அதிகம் என்று சொன்ன உங்களை என்ன செய்தால் தகும்?
நீங்க ஆணாதிக்கவாதி தான்....
அருமை.மிக நல்ல பதிவு.
கொஞ்சம் விரிவாக எழுதினால் நல்லாயிருக்கும். தொடராக இருந்தாலும் பரவாயில்ல.
மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது மணிஜீ.
not related to post.
P.Venkatramam mentioned in your old post, was he your botany teacher?
பி. வி. வெங்கட்ராமனை//
you mean PVR botany? my HM? kalyana murungai. aanaa sv sekar maamanaru mattum idikuthu..
நண்பர்களுக்கு நன்றி..குடுகுடுப்பை பி.வி.ஆர் சார் சய்ன்ஸ் டீச்சர்..கல்யாணசுந்தரம் பள்ளி...தஞ்சை... அவர் எஸ்.வி சேகரின் மாமனார்......1981...
//ஆணும் வயதுக்கு வந்து விட்டான் என்பதை உணர்த்த அவன் உடலில் கீறி ரத்தத்தை வெளியேற செய்வார்கள்.அந்த வடு அவனை வயதுக்கு வந்தவனாக அடையாளம் காட்டும் இன்றும் ஆப்பிரிக்க பழங்குடியினர் நம்புகின்றனர்//
நான் பார்த்த/கேட்ட/கவனித்தவரை ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு குறியை முகத்தில் அதுவும் குழந்தை பிறந்ததும் போடுகிறார்கள்.(நேசமித்ரன்,அணிமா,ராகவன் சார் கவனிக்கவும்) இப்பொழுது அந்த வழக்கம் கிட்டத்தட்ட ஒழிந்தேவிட்டது.
//.பெண் உயிரோடு இருந்தால்தான் மனித இனம் பெருகும் என்பதால் பெண்கள் வேட்டைக்கு வருவதை குறைத்துக் கொண்டார்கள்.இப்படித்தான் பெண்களை ஒரிடத்தில் நிலையாக தங்க வைக்கும் பழக்கம் தொடங்கியது.//
adukkatukkaana utharanakaludan nurupiththulleerkal. neenkal eppadi pattavar enbathai kaa. paa vidam kettu pathil sollukiren. aanaa neengkal nalla nanbar. en meethu aathikkam seivathaal aanaathikka vaathi thaan .
நண்பர்களுக்கு நன்றி..குடுகுடுப்பை பி.வி.ஆர் சார் சய்ன்ஸ் டீச்சர்..கல்யாணசுந்தரம் பள்ளி...தஞ்சை... அவர் எஸ்.வி சேகரின் மாமனார்......1981...
//
Hope I am talking about same PVR, but he was my HM, (post Madhava Rao period.) Still I can remember his initials.
:)))
மிக நல்ல பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றி!
Post a Comment