Friday, May 21, 2010

பேசிக் கொண்டிருக்கிறார்கள்


அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
உரக்க ஒலிக்கும் மெளனமே சாட்சியாக
உறங்கி கொண்டிருக்கும்
சில வார்த்தைகளும் அதை
ஆமோதிக்கின்றன

அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
வெறுமையிலிருந்து வெறுமை நோக்கி
செல்லும் வழியில் இடைப்பட்ட இடத்தில்
விரவியிருக்கும்
பிரியங்களின் மேல் நின்று கொண்டு

அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
முதலில் யார் கழட்டுவது முகமூடியை
என்ற யோசனையின் ஊடே

கொஞ்சல்கள் ஒளிந்திருக்கின்றன
இருவரின் நக இடுக்குகளின் உள்ளும்
நீதான் இல்லை நான் தான் இல்லை
நாம்தான் என்பது அவர்களுக்கு
தெரிந்தேயிருக்கிறது
ஏதோ ஒன்று உடைய காத்திருக்கிறார்கள்
அதுவரை பேசிக்கொண்டே இருக்கட்டும்

20 comments:

  1. புரியலை பாஸ்.

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க மணி ஜி !

    ஏதோ ஒன்று உடையத்தானே காத்திருப்பு...

    ReplyDelete
  3. அருமை மணிஜீ.

    புரிந்தவரை ரசித்திடணும் ஆதி:)!

    ReplyDelete
  4. //கொஞ்சல்கள் ஒளிந்திருக்கின்றன
    இருவரின் நக இடுக்குகளின் உள்ளும்
    நீதான் இல்லை நான் தான் இல்லை
    நாம்தான் என்பது அவர்களுக்கு
    தெரிந்தேயிருக்கிறது
    ஏதோ ஒன்று உடைய காத்திருக்கிறார்கள்//

    இந்த வரிகளிலேயே இருக்கிறேன்.

    Excellent Maniji.

    ReplyDelete
  5. //புரியலை பாஸ்.///

    repeatt

    ReplyDelete
  6. இந்த மௌனம் உடைந்தால் பிரளயம்தான்..
    இந்த மௌனம் அடர்த்தியா பயம்மா இருக்குங்க மணிஜி..

    ReplyDelete
  7. நல்லாயிருக்கு மணிஜி.

    ReplyDelete
  8. நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  9. சூப்பர்! :))




    (மெரீனாவுக்கு வரும் ஜோடிகள் சார்பா கமிஷ்னர் அபீஸ்ல, இதையே மனுவா கொடுத்துடலாம் தலைவரே!)

    ReplyDelete
  10. இடைப்பட்ட இடத்தில்
    விரவியிருக்கும்
    பிரியங்களின் மேல் நின்று கொண்டு


    அங்கே இருந்தாலே போதுமே ..முகமூடி திறந்தாலும் பயம் வராது ..
    அருமையான கவிதை மணிஜி

    ReplyDelete
  11. ..//ஆதிமூலகிருஷ்ணன் said...
    புரியலை பாஸ்//..

    ஆதிக்கே புரியலைன்னா
    அந்தத்துக்கு எப்படி புரியும்?

    ReplyDelete
  12. இது கூடவா பிரியலை..

    ReplyDelete
  13. கொஞ்சம் புரியுது .. நிறைய புரியல ..

    ReplyDelete
  14. ம் நல்லா இருக்கு தல...

    ReplyDelete
  15. கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete
  16. கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள் ......

    ReplyDelete