Friday, May 14, 2010

கூடையில் என்ன பூ ? குஷ்பூ


சிலரால் சுட்டியும், பலரால் கோயில் கட்டியும் கொண்டாடப்பட்ட முற்போக்கு “பெண்சிங்கம்” முன்னாள் கனவுக்கன்னி இன்னொரு ஜாக்பாட் அடித்தார். அது திருமாவளவனின் பாக்கெட்டிலிருந்து அடிக்கப்பட்டது இன்னும் விசேஷம். பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் ஒரே கட்சி திமுகதான் என்று திருவாய் மலர்ந்தளியவர் சொல்லாமல் விட்டதும் “விழி” மொழி” என்ற பெயரில் முடியும் மாதர்களுக்கு என்பதைதான். சற்குணங்களும். ஜகதீசன்களும் விதிவிலக்கு. தூத்துக்குடி பண்ணையாரினிக்கு அடித்தது ஜாதி யோகம். போதும் . அது. இனி ஓவர் டூ குஷ்பூ. தலைவர் சொன்னது. “முற்போக்கு” சிந்தனை உள்ள குஷ்புவின் ”பணி” கழகத்திற்கு பெரிதும் உதவும் . கோயில் கட்டி கொண்டாடப்பட்ட ஒரு தெய்வத்தை கருவறையிலிருந்து கழகத்துக்கு கொண்டு வந்த பணி ஆஹா...91.9
ஆமாம் ..திருமா என்ன சொல்லுவார்? ஒன்னும் சொல்ல முடியாது. சக்தி கொடு என்று கேட்கலாம்.. அவ்வளவுதான். ஆமாம் தேசிய கட்சியில் ஏன் சேரவில்லையாம் ? பின்ன இட்லிதானே தமிழனின் தேசிய உணவு
டிஸ்கி: இட்லிக்கு மாவரைக்கும் போது நல்ல வழுக்கை இளநீரை போட்டு அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.அரிசி ஊற வைக்கும் போது கொஞ்சம் அவல் சேர்த்தாலும் மிருதுவாக இருக்கும் (ஈரோடு குப்பண்ணா மெஸ் தகவல்)

28 comments:

  1. கிண்டல் தெறிக்கிறது ஒவ்வொரு வார்த்தையிலும்.

    ReplyDelete
  2. படத்தில இருக்கிறது "குஷ்பூ இட்லி இல்லப்பு..குக்கர் இட்லி."

    ReplyDelete
  3. இனிமே தலைவருடன் மானாட மயிலாட குஷ்புவும் ஆடுவார்.

    ReplyDelete
  4. ஜெரி.இட்லி இளைச்சு போச்சு

    ReplyDelete
  5. திமுகவின் கொள்கைகள் தனக்கு ஒத்து போவதாக குஷ்பூ சொல்லியிருக்கிறார். அது தெரிந்த விஷயம்தான்.. பாவம் திருமாதான்..முட்டியில் அடி விழும்

    ReplyDelete
  6. இனி எல்லோரின் சதைகளும் ஆடும்..பாசம்தான்

    ReplyDelete
  7. ஜெர்ரி சார் நல்ல குக்கிங் அனுபவம் தான் .
    குஷ்பு ரொம்ப அழகா இருக்காங்க மணிஜி.
    இது உங்களுக்கு தெரியாததா என்ன ? நா போய் சொல்லிக்கிட்டு

    ReplyDelete
  8. பொங்கலு பொங்கலு வைக்க...! மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி..! தங்கச்சி..!தங்கச்சி...!

    புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் பூமியும் இனி நம் கட்சி...நம் கட்சி ...நம் கட்சி...!

    பூ பூக்கும் மாசம் தை மாசம்....
    ஊரெங்கும் வீசும் (குஷ்)பூ வாசம்...

    (வருஷம் 16 -குஷ்புவின் முதல் படம்)

    ReplyDelete
  9. ithenna thirumavukku puthusanne..

    avar adipparu parunga anthar palti..

    ReplyDelete
  10. தூங்கப் போறப்போ இதென்ன லொள்ளு:))

    ReplyDelete
  11. கற்புக்கரிசி குஷ்பு வாழ்க

    ReplyDelete
  12. இடலியை மென்று தின்கிற போது வலப்பக்க பற்களால் கடித்தால் இன்னும் மிருதுவாக இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு நன்றி குப்பண்ணா!

    ReplyDelete
  14. அடடா எப்பூடீ இப்பூடியெல்லாம்...

    படத்திலதான் கொஞ்சம் கான்பீஸ் ஆயிட்டேன்... எது குஷ்பூ.. எது இட்லின்னு கண்டுபுடிக்கவே கஷ்டமாகீது..

    ReplyDelete
  15. அண்ணே இந்த இட்லி நைட்டு கடையில கிடைக்கும்??

    ReplyDelete
  16. தண்டோரா சார்,

    நான் இப்பத்தன் ஓர் இட்லிக்கடை போட்டேன்.

    அட உங்கக் கடையிலயிலயும் மல்லிப்பூ!

    ReplyDelete
  17. என்ன...
    மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு புதிய நடுவர் கிடைத்துவிட்டாரா...

    நடக்கட்டும் நடக்கட்டும்...

    ReplyDelete
  18. //எது குஷ்பூ.. எது இட்லின்னு கண்டுபுடிக்கவே கஷ்டமாகீது..//

    கல கல பிரியா இளைத்த இட்லிக்கும் கொழுத்த குஷ்பூவுக்கும் உங்களுக்கு வித்யாசம் தெரியவில்லை என்றால், கவலைபடாதீங்க நாங்க இருக்கோம்---------------- வாசன் ஐய் கேர்..

    :)))

    ReplyDelete
  19. சரி, ஜெயா டிவியில் குஷ்பூ ஆத்தா, விதவிதமாக ஜாக்கெட் போட்டு நடத்தும் ஜாக்பாட் என்னாகும்??

    ReplyDelete
  20. திமுகவின் மேலவை உறுப்பினர் ரெடி.... எதையும் தாங்குவான் டமிலன்..

    ReplyDelete
  21. செம்மொழி மாநாட்டில் குஷ்பூவின் தமிழ் போற்றப்படுமா?

    ReplyDelete
  22. இத்தன இட்லியா!!!!!!!???

    ReplyDelete
  23. இன்னொரு பிளேட் ....

    ReplyDelete
  24. விழி ,மொழி குறியீடு சபாஸ்

    ReplyDelete
  25. //அரிசி ஊற வைக்கும் போது கொஞ்சம் அவல் சேர்த்தாலும் மிருதுவாக இருக்கும்//

    அப்டித்தான் செஞ்சிருப்பாங்களோ..!!!!

    ReplyDelete
  26. ரோஸ்விக் கேள்வி கொஞ்சம் ஏடாகூடமா இருக்கு..

    இட்லி சாப்பிட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  27. ரெண்டு டஜன் குஷ்பூவும் நாலு இட்லியும் பின்னே கொஞ்சம் சட்னியும்ன்னு தலைப்பு வச்சிருந்தா ஜூப்பரா இருந்திருக்கும் மணிஜீ:-))

    ReplyDelete
  28. "மிசா"வை பார்த்த திமுககாரன் இன்னிக்கு இந்த "சாமி"யை(திருச்சி கோவில் புகழ்)யும் பார்க்க வேண்டி இருக்கு!

    ReplyDelete