Friday, October 9, 2009

மேற்கொண்டு...... கவிதை



அடி மாடுகளை
பார்க்கும் போதெல்லாம்
மனதை ஏனோ
பிசைகிறது

சுரக்கும் வரை
கறந்துவிட்டு
மடி வற்றிய பின்

அடிமாடாக்கி
அண்டை மாநிலத்துக்கு
அனுப்புவதை
நினைத்தால்

ஒரு குறிப்பு:

ஆறு மாசமாச்சு
அன்பு இல்லத்தில்
இருக்கும்
அப்பாவை பார்த்து

ஒரு நடை
போய் வந்தபின்
மேற்கொண்டு
தொடர உத்தேசம்

17 comments:

  1. /ஆறு மாசமாச்சுஅன்பு இல்லத்தில் இருக்கும்அப்பாவை பார்த்து
    ஒரு நடைபோய் வந்தபின்மேற்கொண்டுதொடர உத்தேசம்/

    அடின்னா இது அடி. அசத்துறீங்க.

    ReplyDelete
  2. எப்படின்னே? முதல் பாதிய படிச்சுட்டு ரொம்ப சாதாரணமா இருக்கேன்னு நினைச்சிட்டு... மறு பாதிய படிச்சிட்டு கலங்கிட்டேன். கலக்குறீங்கண்ணே...

    ஓட்டுக்கள போட்டாச்சு.

    பிரபாகர்.

    ReplyDelete
  3. அஹா... பின்றாரப்பா.. பின்றாரப்பா..

    ReplyDelete
  4. கவிதையின் கரு மிகப்பழையது.
    இன்னும் நல்லா எழுதியிருக்கலாம் மணிஜி.

    ReplyDelete
  5. /கவிதையின் கரு மிகப்பழையது.
    இன்னும் நல்லா எழுதியிருக்கலாம் மணிஜி.//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  6. //அடிமாடாக்கி
    அண்டை மாநிலத்துக்கு
    அனுப்புவதை
    நினைத்தால்//

    கவிதை நன்றாயிருக்கிறது...

    ReplyDelete
  7. செவிட்டில் அறைந்த கவிதை.....

    ReplyDelete
  8. கரு மிகப்பழையது

    but the way u express is intresting

    :)

    ReplyDelete
  9. //மேற்கொண்டு
    தொடர உத்தேசம்//

    இதற்காகவே ஓட்டுக்கள்.

    ReplyDelete
  10. சூப்பர் தல... ஒரு எதிர் கவுஜ போடுறேம். கண்டுக்காதீங்க... :))

    ReplyDelete
  11. அதிர்ந்து போயிருக்கிறேன்!
    'அடடா'காச கவிதை!

    ReplyDelete
  12. சாமி! என்ன இதெல்லாம்! அசத்துங்க!

    ReplyDelete
  13. ம்ம் எதிர்காலம் பயமாத்தான் இருக்கு

    ReplyDelete