Thursday, August 20, 2009

தவிர்க்க முடியாமல்.....கவிதைகள்




நாம் வசிக்குமிடம் எங்கும்
அது காத்துக் கொண்டிருக்கிறது
ஒரு தருணத்திற்காக..

தெரியாமல்
அதற்கு பலியாகிறோம்
தெரிந்து அடுத்தவனை பலியாக்குகிறோம்..

ஒத்த பெயருடைய இருவரில்
ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
குருவையே வீழ்த்தியது

குருஷேத்திரம்’ தொடங்கி
’சுப்ரமண்யபுரம்’ சித்திரம் வரை
எல்லா துரோகங்களின் முடிவிலும்
கேட்கப்படும்
”நீயா’ என்ற கேள்விக்கு
நாமாகவும் இருந்தோம்
என்பது வேதனையின்
வெளிப்பாடாகவே..
-------------------------------------------------------------------------------------------------------

நாளை சந்திப்போம்
நிறைய குடிப்போம்
நாக்குழற பேசிப்பிரிந்தோம்

இன்று..நான் மட்டும்
மதுக்கடையில் தனியே..

நண்பன் நினைவில்
“சாக்பீஸ்”சித்திரமாய்..
--------------------------------------------------------------------------------------------------------

45 comments:

  1. இரண்டாவது கவிதைக்கு எதிர்கவிதை போட முடியாதுன்னு நினைக்கிறேன்

    தல இன்னைக்கு நான் எழுத போற பதிவுல நீங்க தான் இயக்குனர்

    ReplyDelete
  2. இரண்டாவது கவிதைக்கு எதிர்கவிதை போட முடியாதுன்னு நினைக்கிறேன்

    தல இன்னைக்கு நான் எழுத போற பதிவுல நீங்க தான் இயக்குனர்

    ReplyDelete
  3. ந‌ல்லா இருக்கு த‌ண்டோரா... கூட‌வே ரொம்ப‌ சோகமும்....

    ReplyDelete
  4. அண்ணே, யாரந்த சாக்பீஸ் சித்திரம்..?
    சேஷூ வா..?

    ReplyDelete
  5. படமும்,கவிதைகளும் அருமை.

    முதல் கவிதை ரொம்ப பிடித்திருந்தது

    ReplyDelete
  6. கவிதைகள் அருமை நண்பரே.

    ReplyDelete
  7. தண்டாரோ,
    உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது. இது வெறும் புகழ்ச்சிக்கு அல்ல. தொடர்ந்து எழுதுங்கள்.
    முதல் கவிதையின் கருத்து மிக அருமையானது. presentation வேறு வடிவில் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இரண்டாம் கவிதை உணர்வு ரீதியானது. அதை feel செய்தால் மட்டுமே ரசிக்க முடியும். நான் ரசித்தேன்.

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  8. கவிஞர் மணிபாரதி.. கலக்கல்..

    ReplyDelete
  9. கழகத்தில் எப்பொழுது சேரப்போகிறாய் கண்"மணி"!!

    ReplyDelete
  10. தவிர்க்க முடியாமல் - வந்தேன்; வாசித்தேன்ல் சென்றேன்.....

    ReplyDelete
  11. பிடித்திருக்கிறது நண்பா.

    ReplyDelete
  12. சுருக்கென தைக்கிறது நண்பரே

    ReplyDelete
  13. நல்லாயிருக்குங்க இரண்டுமே

    ReplyDelete
  14. /இரண்டாவது கவிதைக்கு எதிர்கவிதை போட முடியாதுன்னு நினைக்கிறேன்

    தல இன்னைக்கு நான் எழுத போற பதிவுல நீங்க தான் இயக்குனர்//
    படமும்,கவிதைகளும் அருமை.

    முதல் கவிதை ரொம்ப பிடித்திருந்தது//

    அரவிந்த் நன்றி...கலக்குங்க...

    ReplyDelete
  15. /ந‌ல்லா இருக்கு த‌ண்டோரா... கூட‌வே ரொம்ப‌ சோகமும்//

    நன்றி கோபி....

    ReplyDelete
  16. கவிதைகளும், அகநாழிகையின் பின்னூட்டமும் நன்றாக இருந்தன.

    ReplyDelete
  17. /அண்ணே, யாரந்த சாக்பீஸ் சித்திரம்..?
    சேஷூ வா..//

    டக்ளஸ்..அப்புறம் சொல்றேன்

    ReplyDelete
  18. /கவிதைகள் அருமை நண்பரே//

    நன்றி ரஹ்மான்...

    ReplyDelete
  19. /தண்டாரோ,
    உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது. இது வெறும் புகழ்ச்சிக்கு அல்ல. தொடர்ந்து எழுதுங்கள்.
    முதல் கவிதையின் கருத்து மிக அருமையானது. presentation வேறு வடிவில் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இரண்டாம் கவிதை உணர்வு ரீதியானது. அதை feel செய்தால் மட்டுமே ரசிக்க முடியும். நான் ரசித்தேன்.
    //

    வாசு..கருத்துக்கு நன்றி..முடிந்தால் மாற்றி எழுதி மினஞ்சல் செய்யவும்

    ReplyDelete
  20. /கவிஞர் மணிபாரதி.. கலக்கல்//

    நன்றி சூர்யா

    ReplyDelete
  21. /கழகத்தில் எப்பொழுது சேரப்போகிறாய் கண்"மணி"//

    கலை நாங்க எப்பவுமே”கலக”காரர்கள்தான்

    ReplyDelete
  22. /தவிர்க்க முடியாமல் - வந்தேன்; வாசித்தேன்ல் சென்றேன்..//


    நன்றி ஐயா...

    ReplyDelete
  23. /பிடித்திருக்கிறது நண்பா//

    நன்றி நர்சிம்..

    ReplyDelete
  24. /சுருக்கென தைக்கிறது நண்பரே//

    நன்றி கவிஞரே.(கதிரே)

    ReplyDelete
  25. /நல்லாயிருக்குங்க இரண்டுமே//

    அஷோக்..கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  26. //ஒத்த பெயருடைய இருவரில்
    ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
    குருவையே வீழ்த்தியது//

    அருமை..

    ReplyDelete
  27. ///ஒத்த பெயருடைய இருவரில்
    ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
    குருவையே வீழ்த்தியது//

    அருமை..//


    கார்த்திகைபாண்டியன்..நன்றி

    ReplyDelete
  28. R.Gopi said...
    //ந‌ல்லா இருக்கு த‌ண்டோரா... கூட‌வே ரொம்ப‌ சோகமும்...//
    நா சொல்ல நினைத்தேன். R.Gopi சொல்லிட்டாரு

    ReplyDelete
  29. //நண்பன் நினைவில்
    “சாக்பீஸ்”சித்திரமாய்..//

    சேஷூ வா..?

    ReplyDelete
  30. // நல்ல ஃபீல்//

    நன்றி முரளி..

    ReplyDelete
  31. //R.Gopi said...
    //ந‌ல்லா இருக்கு த‌ண்டோரா... கூட‌வே ரொம்ப‌ சோகமும்...//
    நா சொல்ல நினைத்தேன். R.Gopi சொல்லிட்டாரு//

    ஈஷ்வரி ..வாங்க ..நன்றி..

    ReplyDelete
  32. //கவிதைகளும், அகநாழிகையின் பின்னூட்டமும் நன்றாக இருந்தன//


    செல்வா..சிறப்பு நன்றிகள்

    ReplyDelete
  33. ////நண்பன் நினைவில்
    “சாக்பீஸ்”சித்திரமாய்..//

    சேஷூ வா..?//

    வாங்க புன்னகை இளவரசே//

    ReplyDelete
  34. ரெண்டாவது கவிதை அருமை

    ReplyDelete
  35. /ரெண்டாவது கவிதை அருமை//

    வாங்க 449 ஒன்லி..

    ReplyDelete
  36. //இன்று..நான் மட்டும்
    மதுக்கடையில் தனியே..//

    இது தினம் படிக்க வேண்டிய கவிதையா!?

    ReplyDelete
  37. ///இன்று..நான் மட்டும்
    மதுக்கடையில் தனியே..//

    இது தினம் படிக்க வேண்டிய கவிதையா!//

    ஆமாம் வால்
    நீயும்,நானும் மற்றும்..???

    ReplyDelete
  38. நாக்குழற--zha alla la. enru ninaikkiren. neengal thamizhil pulavar aayitre.. naanthaan thavaraaga ninaitthu vitteno.. :)

    kavithai sirappaaga ulladhu. neengal oru kavithai putthagame veliyidalaam.
    valthugal

    ReplyDelete
  39. /நாக்குழற--zha alla la. enru ninaikkiren. neengal thamizhil pulavar aayitre.. naanthaan thavaraaga ninaitthu vitteno.. :)

    kavithai sirappaaga ulladhu. neengal oru kavithai putthagame veliyidalaam.
    valthugal//

    அருண்.பட்டறை எப்படியிருந்தது?

    ReplyDelete
  40. //இன்று..நான் மட்டும்
    மதுக்கடையில் தனியே..

    நண்பன் நினைவில்
    “சாக்பீஸ்”சித்திரமாய்..//

    அருமையான வரிகள்...! பின்னி பிணைந்த உணர்வுகள்! கலக்கிட்டிங்க, கவிஞரே..!

    ReplyDelete
  41. ///இன்று..நான் மட்டும்
    மதுக்கடையில் தனியே..

    நண்பன் நினைவில்
    “சாக்பீஸ்”சித்திரமாய்..//

    அருமையான வரிகள்...! பின்னி பிணைந்த உணர்வுகள்! கலக்கிட்டிங்க, கவிஞரே..//

    நன்றி..நெல்லை சரவணகுமார்...

    ReplyDelete
  42. தவிர்க்க இயலாத கவிஞன்!நிறைய அன்பு நண்பா..

    ReplyDelete
  43. /தவிர்க்க இயலாத கவிஞன்!நிறைய அன்பு நண்பா//


    நன்றி ராஜாராம்...

    ReplyDelete