
மாய மான்களுக்கு
இன்னும் ஏமாந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்
கலியுக பிராட்டிகள்
ராமர்களுக்கு விறகொடிக்க
போக விருப்பமில்லை
சீதை தனியாக இருந்தாலும்
பரவாயில்லை
லட்சுமணர்களும் உடன்
கைகேயிக்கு புண்ணியவதி
பட்டம் கொடுத்தான் தசரதன்
திருமதி.செல்வத்துக்கும்
தங்கத்துக்கும் அவளது
நன்றிகள் உரித்தாகிறது
பாதுகையை விட
காலை கொடுத்திருந்தால்
இன்னும் சிறப்புதானே
சாராயக்கடையில் புலம்பகள்
பரதர்கள் மட்டையாகிறார்கள்
தேன் தடவி வறுக்கப்பட்ட
மீனுக்குள் குகனின்
மேல்சபை கோரிக்கைகள்
தவமிருக்கின்றன
வடை போன வருத்தம்
அனுமனுக்கு
வெயிலுக்கு கொஞ்சம்
வெண்ணெய் வேண்டியவனுக்கு
வாலில் நெருப்பு
கும்பகர்ணன் உண்பது போன்ற
கனவில் , சூர்ப்பனகை
அழகு நிலையத்தில்
விபீஷ்ணர்கள் மதில்
மேல் பூனையாய்
இமாமியின் புதிய சலுகை
ஒன்று வாங்கினால்
ஒன்பது மென் தோ ப்ளஸ்
இலவசமாம்
விடிய , விடிய
கேட்டுக் கொண்டேதான்
இருக்கிறோம்
விளங்கிய பாடில்லை
இன்று போய்
நாளையும் வருவோம்
மணிரத்னம்ஜீ
ReplyDeleteஅண்ணே, இதுதான் மணிஜி ஸ்டைலில் ‘ராவணன்’ விமர்சனமா? அருமை, அருமை. கோவைக்கு போகாமல் இங்கென்ன வேலை?
ReplyDelete//தேன் தடவி வறுக்கப்பட்ட
ReplyDeleteமீனுக்குள் குகனின்
மேல்சபை கோரிக்கைகள்
தவமிருக்கின்றன//
டாப் கிளாஸ்
//விடிய , விடிய
ReplyDeleteகேட்டுக் கொண்டேதான்
இருக்கிறோம்
விளங்கிய பாடில்லை
இன்று போய்
நாளையும் வருவோம்//
பாட்டமும் க்ளாஸ்!!
அப்ப படம் நல்லா இருக்குன்னு வேதாந்தம் பேசறீங்களா ஜீ! :)
ஆமாம்! மணி ‘ரத்னம்” ஜீ:)). ஒன்னாங்க்ளாசாணு. வளர நந்நாயிட்டுண்டு.
ReplyDeleteI am always amazed at the way you interconnect 2 different things and bring a new dimension, though I do not agree with you many a times. Keep going...
ReplyDeleteமணிஜீயா ரத்னம்ஜீயா ஒரே குழப்பமா இருக்கே.
ReplyDeleteஇது 'அவலை' நினைத்து
ReplyDeleteஉரலை இடித்ததா?
அல்லது, "அவளை" நினத்தா?
இல்லை 'அவாளை'த்தானா?
அண்ணன்னா அண்ணந்தான்!!!
ReplyDeleteமுன்னாடி.. ஆ.ஓ போஸ்டுக்கு முத்தம் கொடுக்கனும்னு நினைச்சேன் (ஆனா படத்தை பார்த்தப்ப வேற தோணுச்சி... அது சபையில் வேணாம்).
இப்ப.. இந்த கவுஜைக்கு...!! எப்படியும் ஒரு முத்தம் கணக்கில் இருக்கு!!
Anagram of MANIRATNAM - ANTI RAMMAN SO HE DIRECTED RAVANAN
ReplyDeleteஇப்படி ஒரு ட்வீட் நேத்து
இப்போ உங்க கவிதை
எப்பிடில்லாம் யோசிக்குறாங்கையா ?
:))
ஒரு படம் மனுஷனை என்னவெல்லாம் செய்யச் சொல்லுது..
ReplyDeleteமணிஜி, மணிரத்னம்ஜியா மாறிப் போயாச்சுன்னு நினைக்கிறேன்..!
ReplyDeleteஎன்னால் உங்கள் தளத்தில் சுளுவாக வரப் போக முடியலை மணி..
ReplyDeleteit takes lots of time 2 flo..
மற்றபடி,
இது உங்க brand mark flo.. :-)
நல்லா இருக்கு சில இடங்கள் புரியலை.... இன்னும் நிறைய படிக்க வேண்டியது இருக்கு...
ReplyDeleteha ha....
ReplyDeleteநல்லா ஏத்துராங்கப்பு போதையை :-)
என்னால் உங்கள் தளத்தில் சுளுவாக வரப் போக முடியலை மணிji. right now no probs. kavithai puriyalai.
ReplyDeleteசூப்பரு தலிவா ! நல்லா இரு..
ReplyDeleteமணிரத்னம்ஜீ...
ReplyDeleteஇவன் அதுக்கு சரிப்பட மாட்டான்...
இமாமியின் புதிய சலுகை
ReplyDeleteஒன்று வாங்கினால்
ஒன்பது மென் தோ ப்ளஸ்
இலவசமாம்
///
இந்து தான் மணிஜீ டச்சு