கவிஞர் தேன்மொழியின் “ நெற்குஞ்சம்” மீண்டும் ஒரு முறை படித்தேன். பத்து சிறுகதைகளை கொண்ட அற்புதமான நூல். அதில் “தாழி” என்றொரு சிறுகதை. அனுபவம் என்றும் சொல்லலாம். சுனாமிக்கு பின் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக எழுதப்பட்டது.
சுனாமியில் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரு அரசு அலுவலகம். அதில் பணிபுரியும் ஒருவரது பார்வையில் கதை சொல்லப்படுகிறது. நிவாரணம் வாங்க கூட்டம் அலைமோதுகிறது. நாகப்பட்டினம், கோடியக்கரை, வேதாரண்யம், பூம்புகார் இங்கெல்லாம் மாண்டவர்களின் புகைப்படங்கள் கணினியிலும், ஆல்பமாகவும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. வருபவர்கள் அதை பார்த்து இறந்தவர்களை அடையாளம் காணவேண்டும். பின் உறுதி செய்யப்பட்ட பின் அரசுக்கு நிவாரணத்துக்கு பரிந்துரை செய்யப்படும். இதில் அரசின் உதவியை வாங்க வேண்டும் என்பதற்காக வரும் போலிகளும் உண்டு. அதனால் உண்மையில் பறிகொடுத்தவர்களை கூட சந்தேக கண் கொண்டு பார்த்து அவர்களை புண்படுத்தும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் போவதை ஆசிரியர் சொல்கிறார்.
கதையின் மையமாக ஒரு முதியவர் வருகிறார். கையில் நைந்து போன ஒரு பாலீதீன் கவரில் இரு இளம் பெண்ணின் புகைப்படம். ஒரு பொக்கிஷத்தை போல் அதை பாதுகாத்து வருகிறார். அலுவலரிடம் அந்த படத்தை காட்டுகையில் அவர் கண் கலங்குகிறது. ஆனாலும் அவள் இறந்திருக்க மாட்டாள் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். அலுவலர் ஆல்பத்தை கொடுத்து தேடிப்பார்க்க சொல்கிறார்.
“முகங்களும் உடல்களும் புரளகின்றன. மூச்சடைத்து இறந்தவர்களின் முகங்களில் காற்றுக்கான தேடல் இருந்தது. அளவுக்கு அதிகமாக நீரை குடித்து இறந்தவர்களின் முகங்களில் வாந்தி எடுக்கும் உணர்வு படிந்திருந்தது. குழந்தையின் பசித்த வாய், தாயின் மார்பிற்காக உதடுகளை குவித்தபடி ஒரு புறம் கிடக்க, தாயின் ஒற்றை மார்பகம் குழந்தைக்கான பாலை ஏந்தியபடி இன்னொரு புறம் திறந்து கிடந்தது. முள்காடுகளில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட உடல்கள் துணிகளோடு கிழிந்து கிடந்தது. வாழ்வின் அழகியலை அர்த்தமற்றதாக்கி எல்லாவற்றின் கீழும் இருக்கும் அசிங்கங்களை திறந்து காட்டிக்கொண்டிருந்தன அந்த புகைப்படங்கள். இயற்கையை போல் மேடு பள்ளங்களை சமப்படுத்தும் தொழிலாளி வேறு யார் இருக்க முடியும்? எல்லைக்கோடுகளை அழித்து, பேதங்களை கரைத்து , சாவின் மீது சிரிக்கும் பலவான் இயற்கை.”
பெரியவர் “இதுல என் பொண்ணு படம் இல்லை” என்று ஆனந்த குரல் எழுப்பும்போது , அவரிடம் இன்னொரு ஆல்பம் தரப்படுகிறது. நிச்சயம் இதுலையும் இருக்க மாட்டா மகராசி என்றபடி பெரியவர் ஆல்பத்தை புரட்டுகிறார்.
“என் புள்ள இருக்கா என்று முதியவர் அலறுகிறார். முகத்தில் அறைந்து கொண்டு அழுகிறார். அங்கு இருக்கும் பணியாளர்கள் மரத்து போனவர்களாக இருக்கிறார்கள். பெரியவரே ! உங்களுக்கு அரசு நிவாரணம் உண்டு என்று சொல்லும்போது
“பெரியவர் தோளில் கிடந்த துண்டு இப்போது ஆல்பத்தின் மீது கிடந்தது.கண்ணுக்குள்ள பொத்தி வச்சு வளர்த்த புள்ளைய இப்படி அம்மணமா போட்டு வச்சிருக்கீங்களே! குற்றசாட்டாக பாய்ந்து கொண்டிருந்தது அவரது குரல்.
“அள்ளிட்டு போன கடலுக்கும் மனசில்ல, என்னைய விட்டுட்டு போன இவளுக்கும் மனசில்ல: கிழ உசுரு போயிடும் தாயி”
ஆல்பத்தின் மேல் கிடந்த துண்டின் மீது முட்டிமுட்டி கதறுகிறார் கிழவர்.
தேன்மொழி இந்த வரிகளுடன் கதையை முடிக்கிறார்.
“சுனாமிக்கு முன் நிகழ்ந்ததுபோல் மீண்டும் புவிப்பாளம் நழுவத்தொடங்கியது.கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன”
வாசகனை கதையின் பாத்திரமாக்குகிறார் தேன்மொழி. நம் கண் முன் சம்பவங்கள் நடக்கின்ற உணர்வை கொடுக்கிறார்.
படித்து முடித்தவுடன் என் கண்கள் கலங்கியது. அந்த முதியவரின் வேதனை நம்மையும் தொற்றிக்கொள்கிறது எனலாம் !
தேன்மொழியின் கவிதை ஒன்று
பல மரக்கிளைகளில்
அமர்ந்த பறவை
சலித்துப் போய்
சரணடைகிறது
என் ஜன்னல் கம்பிகளில்
சிறுகாற்று வரலாம்
ஜன்னல் கதவுகளை
மீட்டிப் போகலாம்
என் அசைவுகள்
அதன் அமைதியில்
கல்லெறியலாம்
ஆகவே அமர்ந்திருக்கிறேன்
அதன் காட்சிப்புலத்தில்
தவமாய்
தியானமாய்
இல்லை, சிலையாய்!
//என் கண்கள் கலங்கியது. //
ReplyDeleteரொம்ப நேரம் கஷ்டப்பட்டு விழிகளைத் தாண்டி விடாமல் இருக்கவும் முயற்சித்தேன். :(
ஒரு சாம்பிள் மட்டும்தானே இந்த முதியவர், இன்னும் எத்தனை பேர். :(
இதை படிக்கும் போதே கண்ணீர் வந்துவிட்டது.. :(
ReplyDelete:(
ReplyDeleteஅன்னிக்கு தெளிவாத்தானே இருந்தீங்க, போட்டோ ஏன் கலங்கலா இருக்கு ??
ReplyDeleteஇந்த மாதிரி பேசினா எப்படி..?
ReplyDeleteஇதை படித்தாலே கண் கலங்குகிறது.
நெகிழ்ச்சியான பதிவு.
கண் கலங்குது தல
ReplyDeleteதலைவரே,
ReplyDeleteநீங்க மட்டும் எல்லா புத்தகமும் படிங்க. பொறாமையா இருக்கு. இது போல நிறைய எழுதுங்க தல.
இருபது வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ஆற்றில் விழுந்த ரயில் பெட்டியை உடைத்து உயிரிழந்தவர்களை எடுத்த பணியாளர் அதில் தன் ஒரே மகனின் உடலையும் எடுத்து அதிர்ந்த நிகழ்வு நினைவில் வந்தது,
ReplyDeleteசர்ப்ரைஸ் விசிட் தர ஒரு நாள் முன்னாடி வீட்டிற்கு வர நினைத்தவன் முடிவு..
நல்லகாலம் நாளைதான் பிள்ளை இந்த ரயிலில் வருவான் என்று நினைத்த தந்தை, அவனை உயிரற்று தன் கையாலே தூக்கியபோது...
ப்ச் .. கேரளாவில் ஆற்றுப்பாலத்தை ரயிலில் கடக்கும்போதெல்லாம் தடக், தடக்கென்று உள்ளுக்குள் ஓடும் இப்போதும்...
சாவடிக்கிறீங்களே மணிஜி...! நெஞ்சு வேகும் வரை நினைவுகள் வேகாது போல..!
கோரத்தாண்டவத்தையும்... வேதனையையும் கண்முன் கொண்டுவந்துவிட்டார் தேன்மொழி....
ReplyDelete:(
பகிர்வுக்கு நன்றி அண்ணா....
மனம் கனக்கிறது.
ReplyDeleteநல்ல முன்மொழிவு..!
ReplyDeleteபுத்தகத்தை பத்திரமாக வைத்திருந்து எனக்குத் தரவும்..!
பெரியவரின் சோகம் மனதைத் தாக்குகிறது.
ReplyDeleteநல்ல பகிர்வு. நன்றி.
மணிஜி,
ReplyDeleteநானும் ஏற்கனவே படிச்சுட்டேன். கதையெல்லாம் கவிதையா இருந்தது. இந்த புத்தகக்கண்காட்சிக்கு வாங்கிய புத்தகத்தில உடனே வாசிச்ச புத்தகம்.
பகிர்தலுக்கு நன்றி.
பகிர்விற்கு நன்றிண்ணே
ReplyDeleteவந்தா கண்ணு நிறைய வெச்சி மனசு கனக்க வச்சு அனுப்புறீங்க இப்போல்லாம்.:((
ReplyDelete/ வாசகனை கதையின் பாத்திரமாக்குகிறார் தேன்மொழி. நம் கண் முன் சம்பவங்கள் நடக்கின்ற உணர்வை கொடுக்கிறார்.//
ReplyDeleteஉணர்ந்து எழதி இருக்கிறீர்கள்.கவிதையும் சிறப்பு. [நம்ம வீட்டு பக்கமும் செத்த வந்துட்டு போ ராசா.]
நெகிழ்ச்சியான பதிவு.
ReplyDeleteமனசு கனமா இருக்குதுண்ணே.... இதை படிச்ச உடனே... :-(
ReplyDeleteஎன் ஊரில் என் தேசத்தில் எத்தனை நிகழ்வுகளைப் பார்த்தும் கேட்டும் அனுபவித்திருந்தாலும் மனம் கனக்கிறது.இழப்பு...இனி இல்லையெனும்போது வரும் வலி !
ReplyDeleteமிக மிக துக்கமான விசயத்தைப் பற்றிய சிறுகதையைப் பகிர்ந்ததற்கு நன்றி.
ReplyDeleteபெரியவர் கண் முன்னே நிற்கிறார் :(
பகிர்தலுக்கு நன்றிஜி.
ReplyDeleteநல்ல பகிர்வுக்கு நன்றி தலைவரே.
ReplyDeleteபின்னூட்டத்துக்கு பதில் போடமாட்டீங்க. அப்புறம் எதுக்கு பின்னூட்டம் போடனும் ? வாசிச்சுட்டு போயிடவேண்டியதுதான்..
ReplyDeleteRemarkable...thanks for introducing new name - ThenMozhi. I will remember the name when I go to book stall.
ReplyDeleteEssex Siva
நல்ல அறிமுகம்
ReplyDeleteநன்றி @ விதுஷ்
ReplyDeleteநன்றி @ அஷோக்
நன்றி @ சங்கர்
நன்றி @ சூர்யா
நன்றி @ தராசு
நன்றி @ உலக்ஸ்
நன்றி @ ஷங்கர்
நன்றி @ அகல்விளக்கு
நன்றி @ அன்புடன் அருணா
நன்றி @ உண்மைத்தமிழன்
நன்றி @ ராமலக்ஷ்மி
நன்றி @ வாசு
நன்றி @ சென்ஷி
நன்றி @ வானம்பாடிகள்
நன்றி @ ஜெர்ரி
நன்றி @ டிவிஆர் சார்
நன்றி @ ரோஸ்விக்
நன்றி @ ஹேமா
நன்றி @ செந்தில்வேல்
நன்றி @ பா.ரா
நன்றி @ சரவணகுமார்
நன்றி @ சிவா
நன்றி @ கேபிள்
//செந்தழல் ரவி said...
ReplyDeleteபின்னூட்டத்துக்கு பதில் போடமாட்டீங்க. அப்புறம் எதுக்கு பின்னூட்டம் போடனும் ? வாசிச்சுட்டு போயிடவேண்டியதுதான்//
ரவி! நன்றி சொல்லி பதில் போடுவேன். நேரம் இருந்தால் விரிவாக பதிலும் போடுவேன். நான் வாசிக்கும் எல்லாப்பதிவிலும் பின்னூட்டமும் ஓட்டும் நிச்சயம் உண்டு. தமிழ் நதியை பற்றி நீங்கள் எழுதியதை படித்துக்கொண்டிருக்கையில் சிஸ்டம் ஆஃப் ஆகி விட்டது. அப்புறம் ஒரு சிறுகதைக்கு குவார்ட்டர், குரங்குன்னு பின்னூட்டம் போட்டால் என்ன பதில் சொல்றது?
நன்றி செந்தழல் ரவி! பேக் பெயின் எப்படி இருக்கிறது? ஊருக்கு போயாச்சா?
நான் உங்க ஆபிஸ்ல இந்த புக்கை பாத்தேன்.அன்றைக்கே ஆட்டையப் போட்டிருக்கனும்.சனிக்கிழமை வாரேன்.
ReplyDeleteநல்ல பகிர்வு பாஸ்.
இதைப் படித்துவிட்டு என்ன சொல்லது என்றே தெரியவில்லை தல...
ReplyDeleteவாங்கணும் தல!
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றிங்க
ReplyDelete\\படித்து முடித்தவுடன் என் கண்கள் கலங்கியது. அந்த முதியவரின் வேதனை நம்மையும் தொற்றிக்கொள்கிறது எனலாம்//
ReplyDeleteசில நாவல்கள் படிக்கும் போது என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் வரும் தலைவரே . கதையின் சிறு பகுதி படிக்கும் போதே மனசு கஷ்டமா இருக்கு. பதிப்பகம் யார்ன்னு சொன்னிகனா புத்தகம் வாங்கிடுறேன்.
இந்த பதீல்படிக்கும் போதே நான் கலங்கி விட்டேன். புத்தகம் படித்தால்...ஆனால் படிக்க வேண்டும்.
ReplyDeleteஅருமை சார்.
ReplyDelete