Tuesday, January 12, 2010

நான்


எழுத்துக்களை கலைத்துப் போட்டு
வார்த்தைகளை வார்க்கும்
சிறுபிள்ளை விளையாட்டை
திரும்ப ஆடும் ஆசை

இக்கணம் தோன்றிய
அத்தனையும் இங்கு
தனித்தனி எழுத்துக்களாய்தான்

இதுவரையிலான நிகழ்வுகளிலிருந்து
சில எழுத்துக்கள்
சிதறி கிடந்தது

பொருத்தமான வார்த்தைக்கு
கொஞ்சம் மெனக்கெடத்தான்
வேண்டியிருந்தது

இறுதியில் எஞ்சிய ஐந்து வார்த்தைகள்

4.திமிர்
1.ஆணவம்
3.அகம்பாவம்
2.தற்பெருமை
5.நான்

இரண்டெழுத்தில் ஒரு
வார்த்தையை

“நான்” தேர்ந்தெடுத்தேன்.

40 comments:

  1. நல்ல கவிதை... அருமை...

    ReplyDelete
  2. அன்பின் தண்டோரா,

    வெகு நுட்பமான கவிதை.

    கொஞ்சம் எடிட் செய்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  3. மானிட்டர் பக்கங்களின் தொடர்ச்சியோ ?

    ReplyDelete
  4. தலை கொஞ்சம் வித்தியாசமான, அழகான கவிதை

    உங்களுக்கும் உமது குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. நல்லா இருக்கு ஜி

    ReplyDelete
  6. கவிதை அருமை.
    (என்ன ஒரு ஒற்றுமை......தற்பெருமை பற்றி இன்று காலைதான் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்)

    ReplyDelete
  7. "நான்" "நீ" தேர்ந்தெடுப்பேன்..

    ReplyDelete
  8. சிக்கலில்லாத நூல் போல் எளிய வரிகள்!!

    ReplyDelete
  9. எப்போது புத்தக வெளியீடு?

    ReplyDelete
  10. மூன்றெழுத்தில் ஒரு வார்த்தையை தேர்ந்தெடுத்தேன்.

    "அருமை".

    ReplyDelete
  11. நல்லாருக்கு . வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. கவிதை நல்லாருக்கு.. :))

    ReplyDelete
  13. திரும்ப ’ஆடும்’ ’ஆசை’ ’நான்’ என்பதையே எப்போதும் தேர்ந்தெடுக்கும்.::)

    ReplyDelete
  14. ஒ.. இதுக்கு பேர் தான் தன்னிலைவிளக்கமோ, நன்று

    ReplyDelete
  15. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னால் என் பேச்சிருக்கும். கடமை.. அது கடமை..!!!

    ReplyDelete
  16. //கொஞ்சம் எடிட் செய்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.//

    சரிதான்.

    ReplyDelete
  17. பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
    எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
    www.radaan.tv

    http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

    ReplyDelete
  18. கவிதை நன்று.

    நான் நீ என்று சொனால் உதடுகள் கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் ஒட்டும்.

    ReplyDelete
  19. //நான் நீ என்று சொனால் உதடுகள் கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் ஒட்டும்.
    //

    அது பழசு தலைவரே....

    அசின் த்ரிஷா என்றால் உதடுகள் ஒட்டாது
    நமீதா மாளவிகா என்றால் உதடுகள் ஓட்டும்......

    ReplyDelete
  20. அருமை மணிஜி.....

    ReplyDelete
  21. ///நாம் என்று சொன்னால் தான் ஒட்டும்.///

    இதனால்.. கிடைக்கும்.. பலன் என்னவோ குருவே? :)

    ReplyDelete
  22. அடடா இது கவித...எப்படி இப்படி..?
    தோள்ல கெடக்கா இன்னமும்?

    ReplyDelete
  23. நல்லாருக்குங்க..

    ReplyDelete
  24. கடமையை செய்.. பலனை எதிர்பார்க்காதே..

    ReplyDelete
  25. அதையே அண்ணன் உ.த முன்னரே சொல்லிட்டார்.

    ReplyDelete
  26. ஜெட்லி... நீங்க தான் ரியல் யூத்து..

    ReplyDelete
  27. நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது... நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்....

    யாரோ ஒரு மூதறிஞர், போதையில் இல்லாதபோது சொன்னது....

    ReplyDelete
  28. பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete