Friday, January 22, 2010

10 தூக்க மாத்திரைகள்


துரத்துவது யார் என்று
திரும்பி பாராமலே
அனுமானிக்க முடிகிறது

அறிந்தும் அறியாமலும்
செய்த அத்தனையும்தாம்
அரூபமாய்!

கடல் மலை தாண்டி
உயிரை பதுக்க
ஓடுகிறேன்

சின்னதாய் தேங்கியிருந்த
கோணமற்ற அந்த
சிறு குளத்தில்
முகம் பார்க்கவும்
சலக்கென்று குதித்து
ஒலியெழுப்பவும்தான்
அதீத ஆசை!

----------------------------------------------

கனவுகள் விற்கலாம்
என்று கடை பரப்பினேன்
விலையென்று ஒரு
நிர்ணயம் இல்லை

வந்தவர் எல்லோரிடமும்
அதுவே இருந்தது.

உனக்காக ஒன்று
கண்டு தருகிறேன்
வாங்குகிறாயா?
காதில்தான் கேட்டேன்!

சினத்தை காட்டி
சீ என்று உமிழ்ந்தான்
வலிக்கவில்லை
அதில் நியாயம்
இருந்ததாலோ என்னவோ?

27 comments:

  1. //அதில் நியாயம்
    இருந்ததாலோ என்னவோ?//

    ஓ... அப்டியும் இருக்குமோ..???

    நல்ல கவிதைகள்...

    ReplyDelete
  2. தலைப்பு புரியவில்லையே...

    துரத்தலும், கனவும் நன்றாகயிருந்தது. கனவு கொஞ்சம் டாப்பே :)

    ReplyDelete
  3. //சினத்தை காட்டி
    சீ என்று உமிழ்ந்தான்
    வலிக்கவில்லை
    அதில் நியாயம்
    இருந்ததாலோ என்னவோ?//

    அப்படி என்ன தல கேட்டீங்க...

    ReplyDelete
  4. முதல் கவிதை சூப்பர்:)

    ReplyDelete
  5. தலைவரே நெஞ்சுகுழி நசுங்கிடிச்சி..!

    ReplyDelete
  6. கவித ! கவித !..

    இந்த மானே தேனே பொன்மானே எல்லாம் எங்க காணோம் .

    ReplyDelete
  7. //சினத்தை காட்டி
    சீ என்று உமிழ்ந்தான்
    வலிக்கவில்லை
    அதில் நியாயம்
    இருந்ததாலோ என்னவோ//

    அண்ணே இரவு நேரக் குவளையின் மீத திரவத்தில் ஒளிரும் நிலா இவ்வரி

    ReplyDelete
  8. கேபிளிடம் நட்பாய் இருப்பவர்களாலும் நல்ல கவிதை எழுத முடியும் என்று தினம் தினம் நிருபித்துக் கொண்டிருக்கும் அண்ணன் தண்டோரா வாழ்க, வாழ்க :))

    ReplyDelete
  9. ஏன் இப்படி கொடுமை மேல கொடுமை பண்றீங்க..?

    ReplyDelete
  10. அண்ணன் தண்டோரா வாழ்க, வாழ்க

    ReplyDelete
  11. கவிஞர் தண்டோரா வாழ்க!

    ReplyDelete
  12. முதல் கவிதை மிக அருமை பாஸ்!

    ReplyDelete
  13. அண்ணே, முடியலை......
    :)

    //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    ஏன் இப்படி கொடுமை மேல கொடுமை பண்றீங்க..?//

    இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க

    ReplyDelete
  14. ரெண்டு கவிதையும் சூப்பர்... ரெண்டாவது கவிதை டாப்

    ReplyDelete
  15. கவிதை நல்லாதான் இருக்கு. ஆனா தலைபுத்தான் புரியல.

    ReplyDelete
  16. /கேபிளிடம் நட்பாய் இருப்பவர்களாலும் நல்ல கவிதை எழுத முடியும் என்று தினம் தினம் நிருபித்துக் கொண்டிருக்கும் அண்ணன் தண்டோரா வாழ்க, வாழ்க :))//3


    வந்தோமா ..கவிதை படிச்சோமா..நல்லாருக்கு. நல்லால்லை எதையாவது சொன்னோமான்னு இல்லாம என்னை ஏன்யா இழுத்திட்டு.. நானெல்லாம் பிற்வி கவிஞன்ய்யா..:)) எலலாத்தையும் எண்டர் போட்டு படிக்கவும்

    ReplyDelete
  17. நல்லாயிருக்கு தண்டோராஜி.

    ReplyDelete
  18. //வலிக்கவில்லை
    அதில் நியாயம்
    இருந்ததாலோ என்னவோ//

    இந்த வரிகள் தான் தல வைர வரிகள்.அருமையான கவிதை.

    ReplyDelete
  19. //வந்தோமா ..கவிதை படிச்சோமா..நல்லாருக்கு. நல்லால்லை எதையாவது சொன்னோமான்னு இல்லாம என்னை ஏன்யா இழுத்திட்டு.. நானெல்லாம் பிற்வி கவிஞன்ய்யா..:)) எலலாத்தையும் எண்டர் போட்டு படிக்கவும்//

    அதானே

    ReplyDelete
  20. முதல் கவிதை நல்லா இருக்கு தண்டோரா...

    ReplyDelete
  21. //Cable Sankar said...
    வந்தோமா ..கவிதை படிச்சோமா..நல்லாருக்கு. நல்லால்லை எதையாவது சொன்னோமான்னு இல்லாம என்னை ஏன்யா இழுத்திட்டு.. நானெல்லாம் பிற்வி கவிஞன்ய்யா..:)) எலலாத்தையும் எண்டர் போட்டு படிக்கவும்//

    கேபிளால மட்டும் இல்லை, அவரோட நண்பர்களாலையும் கூட நல்ல கவிதை எழுத முடியும்னு நான் சொல்ல வந்தேன்னு நீங்க அர்த்தம் எடுத்துக்குங்க :))

    நாலு பேரு நாப்பது சொல்லுவாங்க அதுக்காக நீங்க உங்க தமிழ்த் தொண்டை எப்பவும் கைவிட்டுடக் கூடாது :))

    ReplyDelete
  22. //D.R.Ashok said...

    அதானே//

    எதுதானே? :))

    ReplyDelete
  23. \\வந்தவர் எல்லோரிடமும்
    அதுவே இருந்தது.//

    எதுவாக இருந்தது தலைவரே ... எப்படியும் போல இதுவும் புரியல :(

    ReplyDelete
  24. அன்பின் தண்டோரா

    கவிதை அருமை - தூக்க மாத்திரை போட்டும் கனவு வருகிறதா - கனவுகளைப் பகிரலாம் - விறக இயலாதே - இறுதியில் நச்சென்று இருக்கும் கவிதை

    நல்வாழ்த்துகள் தண்டோரா

    ReplyDelete
  25. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே...

    ReplyDelete