Thursday, December 10, 2009

எதிர்...புதிர்...


இடது, வலது
ஏறி, இறங்கி
மேலும்,கீழும்
சரியும்,தவறும்
நடத்தலும்,நிற்றலும்
முன்னும்,பின்னும்
அந்தப்புறம், இந்தப்புறம்
ஆணும்,பெண்ணும்
இதுவரை சரிதான்
ஆனால்
உனக்கும்,எனக்கும்
எனக்கும்,உனக்கும்
என்பதில் உடன்பாடில்லை
அது நான்,நீ என்று
திருத்தப்படுகிறது....
........................................................

அர்த்த ஜாம கனவொன்றில்
தனியனாய் அழுது கொண்டிருந்தேன்
பிணக்குவியல் மத்தியில்
விடிந்த பின் யோசித்தேன்
கனவுக்கான காரணியை
மெல்ல புலப்பட்டது
நான் சுயநலமில்லாதவன்
என்ற லேசான கர்வம்தான்
................................................................

22 comments:

  1. ஒகே.. நான் நேரே வ்ந்து கேட்டுக்குறேன்.

    ReplyDelete
  2. அண்ணே
    ரெண்டும் நல்லாருக்கு...
    எல்லா கவிதையும் இப்படி புரியிற மாதிரி iruntha....
    remba nallarukum

    ReplyDelete
  3. \\Cable Sankar said...
    ஒகே.. நான் நேரே வ்ந்து கேட்டுக்குறேன்.\\

    அருமை, பிடித்திருக்கிறது, வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. எனது இது தல ?? கவிதையா ??

    ReplyDelete
  5. 150 followersku அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. 150 followersku வாழ்த்துக்கள்
    :-))

    ReplyDelete
  7. //நான் சுயநலமில்லாதவன்
    என்ற லேசான கர்வம்தான்//

    அருமை,
    நல்லாருக்கு...
    வேறெதாவது
    வார்த்தையிருந்தா
    சொல்லலாம்...
    யோசிக்கிறேன்...
    ஆயினும்
    அருமை
    என்பதிலேயே
    முடிகிறது என் பின்னூட்டம்.

    ReplyDelete
  8. //நான்,நீ என்று
    திருத்தப்படுகிறது...// Supper Boss..

    ReplyDelete
  9. //ஒகே.. நான் நேரே வ்ந்து கேட்டுக்குறேன்//

    நானும் தான்

    ReplyDelete
  10. நிறுத்தக் குறி.
    தொடர்ச்சிக் குறி(கள்)..
    ஆச்சரியக் குறி!!!

    இவை எதுவுமின்றி..
    வெறும் வரிகளைப்
    படிக்கையில்...

    முதலில்
    எளிதில்
    புரிவதில்லை..!

    தாமதமான
    புரிதலுக்கு
    ஆசிரியரே
    பொறுப்பு..!

    ReplyDelete
  11. கவிதை ரொம்ப நல்லா இருக்கு பாஸ்.

    //நிறுத்தக் குறி.
    தொடர்ச்சிக் குறி(கள்)..
    ஆச்சரியக் குறி!!!

    இவை எதுவுமின்றி..
    வெறும் வரிகளைப்
    படிக்கையில்...

    முதலில்
    எளிதில்
    புரிவதில்லை..!

    தாமதமான
    புரிதலுக்கு
    ஆசிரியரே
    பொறுப்பு..!//

    ஆஹா...இப்ப உண்மைத்தமிழனும் என்டர் தட்ட ஆரம்பிச்சிட்டாரே...கேபிள் அண்ணே பார்த்துக்குங்க.

    ReplyDelete
  12. //நான் சுயநலமில்லாதவன்
    என்ற லேசான கர்வம்தான்//

    நல்லாருக்கு.......

    ReplyDelete
  13. /ஆஹா...இப்ப உண்மைத்தமிழனும் என்டர் தட்ட ஆரம்பிச்சிட்டாரே...கேபிள் அண்ணே பார்த்துக்குங்க.//

    எதோ என்னால முடிஞ்ச சேவை..

    ReplyDelete
  14. அண்ணே வணக்கம்ணே

    ReplyDelete
  15. //நான் சுயநலமில்லாதவன்
    என்ற லேசான கர்வம்தான்//

    இது சூப்பர்!

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  17. அண்ணே செம லொல்லு,சிரிப்போ சிரிப்பு,

    ReplyDelete