Monday, October 5, 2009

நாட்டு நடப்பு...............சிறுகதை


அப்பா.....

என்னடா மகனே..

நா வேணும்னா அத்தை வீட்டுக்கு போயிட்டு வரட்டா?

போய்..?

கேட்டுப் பார்க்கிறேன்...

தாராளாமா கேக்கலாம்..உனக்கு உரிமை இருக்கு..

மதிப்பாங்களா..?

அதை சொல்லமுடியாது..ஆனா உனக்குன்னு நிச்சயம் பண்ணதுதானே..அப்புறம் நீங்க கேக்கலைன்னு சொல்ல கூடாது

பாரு..போயிட்டு வா...பஸ்சுக்கு காசு இருக்கா..?

ம்ம்..நா போயிட்டு வர்ரேன்..

அத்தை வீடு பட்டணத்தில் இருக்கிறது..பெரிய கதவு வச்சு மாளிகை மாதிரி..

வாசல் காவல்காரன்...தம்பி எங்க இப்படி?

அத்தையை பார்ககணும்..

வரச் சொன்னாங்களா.?

இல்லை..ஆனா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க..

என் பொழைப்பை கெடுத்திடாதீங்க தம்பி..நா உள்ளே போய் கேட்டு கிட்டு வர்ரேன்..

இந்த வீட்டுலதான் எப்படி விளையாடியிருக்கோம்..இப்ப..எல்லாம் விதி..

காவல்காரன் ..தம்பி அத்தை பூஜைல இருக்காங்க..இப்ப பார்க்க முடியாதாம்..

நா வந்திருக்கேன் சொல்லலையா..

சொன்னேன்..

அத்தை என்ன சொன்னாங்க..

அவன் கிடக்கான் சொத்தைன்னாங்க....அந்த சோம்பேறியை இனிமே இந்த பக்கம் வர வேணாம்னு சொல்லிடுங்கன்னாங்க...

அழுகை முட்டிக்கொண்டு வந்தது...செல் அடிக்க ..அப்பாதான்..

என்ன தம்பி ஆச்சு?

பேச்சு வரவில்லை..அழுகைதான் வந்தது..பின்ன இலவு காத்த கிளி கதையா போச்சே..

சரி விடு...வீட்டுல கலந்து பேசி அந்த அகங்காரி அத்தை உறவை முறிச்சிடலாம்

அப்பா..பெரியப்பா வீடு பக்கத்திலதான்..ஒரு எட்டு பாத்துட்டு வரவா?

அவர் உங்க அத்தைக்கு மேல ராங்கி பிடிச்சவர்டா..வேணாம்..நா அப்புறமா அவர் கிட்ட பேசறேன்..மஞ்ச துண்டை போர்த்தி காக்கா பிடிச்சு பார்ப்போம்

இல்லப்பா.. இப்பவே நான் முயற்சி பண்ணி பார்க்கிறென்..

அத்தை வீட்டுலேர்ந்து கூப்பிடு தூரம் தான் பெரியப்பா வீடு..ஆனால் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை...சொத்து தகராறு..

வாடா அன்பு மகனே..பெரியப்பா வரவேற்பில் நக்கல் இருந்தது...அவர் அப்படித்தான் ..யாராயிருந்தாலும் கிண்டல்தான்..டில்லி
பெரிய அத்தை மட்டும்தான் அவருக்கு இப்ப உசத்தி..

நல்ல இருக்கீங்களா பெரியப்பா..?

நீங்க இந்த பக்கம் வர்ரதில்லை இல்ல..நல்லாதான் இருக்கேன்..ஆமாம் காபி,கீபி சாப்புடுறியா??ஆமாம் அத்தையை பார்த்துட்டு
வந்திருப்பே..அங்க விருந்தே ஆயிருக்கும்..உங்கப்பன் எப்படியிருக்கான்..வீட்டுல அடுப்புலாம் எரியுதா??

உங்களை அப்பா பார்த்துட்டு வர சொன்னார்..

எதுக்கு என் முதுகு எப்படியிருக்கு..குத்த இன்னும் இடம் இருக்கான்னா?
பெரியவன் வர்ர நேரம் பொழைச்சு போயிடு..உன்னையை இங்க பார்த்தா பொலி போட்ருவான்.

தெருவில் இறங்கி நடந்தான்..போன் அடித்தது..

மகனே என்னாச்சுடா?பெரியப்பா என்ன சொன்னார்?

அப்பா..குரல் கம்மியது..ஏம்பா நமக்கு இப்படி நடக்குது...


அது வேற ஒண்ணுமில்லடா தம்பி..இப்ப நம்ம சாதி சனத்து கிட்டயே நமக்கு
மதிப்பு போயிடுச்சு..அதான்.. நீ பஸ்சை பிடிச்சு வீடு வந்து சேர்..

பஸ் வந்தது..ஏறி சீட்டில் அமர்ந்து கொண்டான்..கண்டக்டர் வர “திண்டிவனம்” ஒண்ணு கொடுங்க.இப்படி யாருமே நம்ம கிட்ட ” அன்பு” காட்ட மறுக்கிறார்களே என்ற வேதனையுடன் கடிகாரத்தில் “மணி” பார்த்தான்.கெட்ட நேரம் ஆரம்பமாகியிருந்தது

டிஸ்கி :ஏற்கனவே அர்த்தமில்லாத கதை என்று போட்ட இடுகைதான் இது.இன்றைய செய்தியை படித்ததும்,சில மாற்றங்களுடன் மீண்டும்...

42 comments:

  1. முறிந்தது!

    செய்தி நானும் பார்த்தேன்:-))))))

    ReplyDelete
  2. அண்ணே டின்னு கட்டப்போறாங்க..உடம்பை பாத்துக்கங்க

    ReplyDelete
  3. சரியான நேரத்தில், சரியன் மீள் பதிவு..! அப்படியே ஒரு வருஷமோ ஆறு மாசமோ இன்னோர் தடவை மீள்பதிவும் செய்யலாம்.

    ReplyDelete
  4. /முறிந்தது!

    செய்தி நானும் பார்த்தேன்:-)))))//

    வருகைக்கு நன்றி துளசி மேடம்

    ReplyDelete
  5. /அண்ணே டின்னு கட்டப்போறாங்க..உடம்பை பாத்துக்கங்க//

    அதுக்காக?மெளனமா இருக்க முடியுமா?

    ReplyDelete
  6. /சரியான நேரத்தில், சரியன் மீள் பதிவு..! அப்படியே ஒரு வருஷமோ ஆறு மாசமோ இன்னோர் தடவை மீள்பதிவும் செய்யலாம்//

    வா..ராஜா...வா..

    ReplyDelete
  7. அதனால என்னங்க... ஆனது ஆயிடுச்சு... வருந்தி என்ன பிரயோசனம்?

    மறுபடி விறகு வெட்டி பொழச்சுக்கலாம். ஆனா அடிபட்டா "AIIMS"ல எல்லாம் சேத்திக்க மாட்டாங்க...

    ReplyDelete
  8. உங்க “டச்” இல்லை. இன்னும் எதிர்பார்தேன்.

    ReplyDelete
  9. இந்த பதிவெல்லாம் பொக்கிஷம் மாதிரி, அப்பப்போ தேவைப்படும்... பத்திரமா வெச்சிக்கோங்க. மாத்தி போட்டு எப்ப வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம்.

    கலக்கல் அண்ணே,,,,

    பிரபாகர்,

    ReplyDelete
  10. அண்ணே டின்னு கட்டப்போறாங்க..உடம்பை பாத்துக்கங்க

    ReplyDelete
  11. இப்பத்தானே கொஞ்ச நாள் முன்னாடி "அன்புமணி ராமதாசிடம் ஏடாகூடமான கேள்விகள்"ன்னு ஒரு படிவு போட்டீங்க, அதன் தொடர் விளைவோ இது?

    ReplyDelete
  12. பின்னூட்டம் பாத்தாத்தான் உங்க பதிவுகளையே புரிஞ்சுக்க முடியுது. நாம இன்னும் அந்த அளவுக்கு வரலைன்னு நினைக்கிறேன். ம்ம்ம்...
    இதுல மீள்பதிவு வேறயா?

    //butterfly Surya said...
    உங்க “டச்” இல்லை. இன்னும் எதிர்பார்தேன்.//
    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே....

    :)

    ReplyDelete
  13. //மஞ்ச துண்டை போர்த்தி காக்கா பிடிச்சு பார்ப்போம்//

    அய்யோ... இந்த வரியைப்படிக்கும் வரை நான் ஏதோ கதைனு தானே நினைச்சேன்...

    ரொம்ப கொழந்தப்பையானா இருக்கேனுங்க நானு!!!

    ReplyDelete
  14. நேரம் சரியில்லையின்னு நினைக்கிறேன். அப்பால மீட் பண்றேன்.

    நல்ல கதை.....

    ReplyDelete
  15. எங்கேயோ கேட்ட ஞாபகம்

    ReplyDelete
  16. எப்படிங்க இப்படியெல்லாம்!!

    ReplyDelete
  17. //அதனால என்னங்க... ஆனது ஆயிடுச்சு... வருந்தி என்ன பிரயோசனம்?

    மறுபடி விறகு வெட்டி பொழச்சுக்கலாம். ஆனா அடிபட்டா "AIIMS"ல எல்லாம் சேத்திக்க மாட்டாங்க...//

    மகேஷ் நன்றி..எய்ம்ஸ் மேட்டரும் சூப்பர்

    ReplyDelete
  18. //story super//

    அன்பு சகோதரனை நான் நைனா என்று அழைக்கிறேன்

    ReplyDelete
  19. //உங்க “டச்” இல்லை. இன்னும் எதிர்பார்தேன்.//

    அப்படியா? சூர்யா...

    ReplyDelete
  20. //Super..
    Super.....
    super.//

    வினோ..
    நன்றி..
    நன்றி..
    நன்றி...

    ReplyDelete
  21. //இந்த பதிவெல்லாம் பொக்கிஷம் மாதிரி, அப்பப்போ தேவைப்படும்... பத்திரமா வெச்சிக்கோங்க. மாத்தி போட்டு எப்ப வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம்.

    கலக்கல் அண்ணே,,,,

    பிரபாகர்,//

    நன்றி தம்ப்ரி....(வெ.ஆ)

    ReplyDelete
  22. //அண்ணே டின்னு கட்டப்போறாங்க..உடம்பை பாத்துக்கங்க//

    நன்றி பித்தன்..(நீங்க தஞ்சைதானே)

    ReplyDelete
  23. //இப்பத்தானே கொஞ்ச நாள் முன்னாடி "அன்புமணி ராமதாசிடம் ஏடாகூடமான கேள்விகள்"ன்னு ஒரு படிவு போட்டீங்க, அதன் தொடர் விளைவோ இது?//


    அது அப்படித்தான்..நன்றி

    ReplyDelete
  24. //பின்னூட்டம் பாத்தாத்தான் உங்க பதிவுகளையே புரிஞ்சுக்க முடியுது. நாம இன்னும் அந்த அளவுக்கு வரலைன்னு நினைக்கிறேன். ம்ம்ம்...
    இதுல மீள்பதிவு வேறயா?

    //butterfly Surya said...
    உங்க “டச்” இல்லை. இன்னும் எதிர்பார்தேன்.//
    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.//

    நன்றி..விஸ்கி..சாரி பெஸ்கி

    ReplyDelete
  25. ///மஞ்ச துண்டை போர்த்தி காக்கா பிடிச்சு பார்ப்போம்//

    அய்யோ... இந்த வரியைப்படிக்கும் வரை நான் ஏதோ கதைனு தானே நினைச்சேன்...

    ரொம்ப கொழந்தப்பையானா இருக்கேனுங்க நானு!!!//

    பீடியாஷுர் அனுப்பவா? கதிர்

    ReplyDelete
  26. //நேரம் சரியில்லையின்னு நினைக்கிறேன். அப்பால மீட் பண்றேன்.

    நல்ல கதை.//


    பாலாஜி..கதையில்லை.நிஜம்

    ReplyDelete
  27. //எங்கேயோ கேட்ட ஞாபகம்//

    நன்றி கிறுக்கன்

    ReplyDelete
  28. சிரிப்புக்கு நன்றி ச்சின்னப்பையன்

    ReplyDelete
  29. //எப்படிங்க இப்படியெல்லாம்//

    நீங்கதான் வைத்தியம் பார்க்கணும் தேவா

    ReplyDelete
  30. சரியான நக்கல் பார்ட்டிங்க நீங்க.அசத்தல்.

    ReplyDelete
  31. சூப்பர் இடி ...

    ReplyDelete
  32. அருமை.. ஆனா, கடைசி பத்தி படிக்குபோதுதான் எனக்கு புரிந்தது.. :-(

    //.. பீடியாஷுர் அனுப்பவா? ..//

    அப்படின என்னாங்க..?? எனக்கு வேற ஏதாவது அனுப்புங்க..!!

    ReplyDelete
  33. அப்பாவுக்கு பதிலா அய்யா-னு போட்டிருக்கணுமோ?

    சரியான நேரத்துல பதிஞ்சுருகிங்க!!

    ReplyDelete
  34. nalla kadhai... :))

    sulnilaikku etravaaru :)

    ReplyDelete
  35. irudi..உனக்கு இருக்குது..

    ReplyDelete
  36. அல்டிமேட் நக்கலாளர் தண்டோரா வாழ்க.=))

    ReplyDelete
  37. நன்றி ஸ்ரீ..

    நன்றி ரோமியோ

    நன்றி பட்டிக்காட்டான்

    நல்வரவும் நன்றியும்.வானம்பாடிகள்

    நன்றி செந்திலநாதன்

    நன்றி கனகு

    கேபிள்ஜி நன்றி

    ReplyDelete
  38. டக்டர பார்த்தா பாவமா இல்லையா?

    மணிஜி உங்க குசும்பு கொஞ்சம் ஓவர்...எதுக்கும் மாவீரன் காடுவெட்டியாரை, உம்மை வந்து பார்க்கசொல்றேன்.

    ReplyDelete
  39. பெரியப்பா திரும்பவும் கூப்பிட்டுகுவார் மாதிரி தெரியுதே!

    ReplyDelete