Saturday, September 19, 2009

நானும்....நீயும்....நாமும்.............



அடிவயிற்றை
தடவிக்கொள்கிறாள்
ஆதங்கத்துடன்
ஒவ்வொரு முறையும்

கைகுழந்தையை
போட்டு விட்டு
தாய் ஓட்டம்
செய்தியை படிக்கும்
போதெல்லாம்....

அடர்ந்த போக்குவரத்து
நெரிசலில்
ஆம்புலன்ஸின்
அலறல்...
அறுக்கிறது உயிரை...

ராணுவத்தை
அனுப்புவேன்
புரட்சி அறிவிப்பாளினி..

புறாவின் காலில்
மட்டும்தான்
கட்டி அனுப்பவில்லை
கடிதத்தை
கழகத்தலைவர்

வதைமுகாமில்
குமுறல்தான்
குறையவில்லை

எடைக்கு போட
ஒரு கூடுதல்
செய்திதாள்
வேறு ஒன்றுமில்லை




15 comments:

  1. //ஆம்புலன்ஸின்
    அலறல்...
    அறுக்கிறது உயிரை...//

    பலமுறை உணர்ந்திருக்கிறேன்

    கவிதைகள் அருமை

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //புறாவின் காலில்
    மட்டும்தான்
    கட்டி அனுப்பவில்லை
    கடிதத்தை
    கழகத்தலைவர்
    //

    :))

    ஆட்டோ வந்தாலும் வரும்....

    ReplyDelete
  4. அருமை.

    புறா கிடைக்கவில்லை போலும்..

    ReplyDelete
  5. அருமையான கவிதை.......பூங்கொத்து!!!

    ReplyDelete
  6. //ராணுவத்தை
    அனுப்புவேன்
    புரட்சி அறிவிப்பாளினி..
    //

    கண்டுப்பிடிக்கவே முடியல

    ReplyDelete
  7. ஒன்னும் சொல்வதற்கில்லை.. கலக்கிட்டு இருக்கீங்க..

    ReplyDelete
  8. ஒரு ரூபாய்க்கு ஒலகம் ஃபுல்லா பேசலாமாமே..!

    ReplyDelete
  9. நல்ல கவிதை.

    //எடைக்கு போட
    ஒரு கூடுதல்
    செய்திதாள்
    வேறு ஒன்றுமில்லை//

    உண்மை:(!

    ReplyDelete
  10. நன்று ..!

    ///ராணுவத்தை
    அனுப்புவேன்
    புரட்சி அறிவிப்பாளினி..///

    அடுத்த தேர்தலில் என்ன சொல்லி ஓட்டு பிச்சை கேட்பாரோ ???

    ReplyDelete
  11. பேப்பர் கிலோ எவ்வளவு?

    ReplyDelete
  12. பின்றீங்க பின்னுங்க :)

    கேபிளார் கேலிய பாத்திங்களா...

    ReplyDelete
  13. வலிமையான வரிகள்.

    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  14. போட்டுத் தாக்குறீங்க! அற்புதம்!!

    ReplyDelete
  15. கவிதையில் உண்மைகள் சுடுகின்றன. கடைசி வரியில் வலி அறுக்கிறது...

    ReplyDelete