Saturday, August 8, 2009

வேணாம்....விட்ரு..வலிக்குது...அழுதுடுவேன்....



கழிவறை ஒன்று புதிதாக திறக்கிறார்கள்
வருகிறாயா?

இல்லை...இங்கேயும் ஒன்று
இரண்டு நாளில் வருகிறது
’இருக்க”வேண்டும்..

அல்சூர் காக்கையும்
அயனாவரம் காக்கையும்
”கா”மெயிலில் சாட்டியது
---------------------------------------------------------------------------------------------------
வள்ளுவருக்கு சிலை
காவிரிக்கு சமாதி
உழவென்னும் தலைப்பில்
உள்ள பத்து குறட்பாக்கள்
நீக்கம்..அரசு உத்தரவு
-------------------------------------------------------------------------------------------------
நண்பரின் மகளை சந்திக்க நேர்ந்தது..அங்கிள் என்று வாய் நிறைய அழைத்து பேசிக்கொண்டிருந்தாள்.”நா சின்ன பிள்ளையா இருந்தப்ப என்று சில நிகழ்ச்சிகளை சொன்னாள்.ஆச்சர்யமாக இருந்தது.இதில்லென்ன வியப்பு என்கிறீர்களா?அவளுக்கு இப்ப வயசு அஞ்சுதான்...குழந்தைகள் எப்போதும் ஆச்சர்யபடுத்துபர்கள்தான்..
-------------------------------------------------------------------------------------------------
பஞ்சாப்பில் சிறைகைதிகளுக்காக புது திட்டம் ஒன்றை அறிமுகபடுத்தி இருக்கிறார்களாம்..அதன் படி சிறை வளாகத்தில் குடில்கள் கட்டப்படும்.கைதிகள் வருடத்திற்கு ஏழு நாட்கள் தங்கள் குடும்பத்தோடு கழிக்கலாமாம்..காவலர்கள் விளக்கு பிடிப்பார்களோ?ஏற்கனவே நம்மூரில் கோழியெல்லாம் போட்டு அசத்துகிறார்கள்..தலைவர் அடுத்து என்ன அறிவிக்க போகிறாரோ?
-------------------------------------------------------------------------------------------------

அனுமாஷ்யமான சூழல்.அடர்த்தியான இருள்.பொட்டல்வெளியில் மரங்கள் உதிர்த்த சருகுகளின் மேல் ஒரு பிரம்ம ராட்ஸசன் நடந்து வரும் பேரோசை..

ஊடுருவி பார்த்தாலும் புலப்படாத விருட்சங்கள் வாழ்வின் பயங்கரத்தை பறைசாற்றுகிறது..பகல் பொழுதுகளில் பொசுக்கிய அக்னி இருள் கவ்வியதும் பொழியும் உமிழ்களில் அந்த நீர்நிலை உறைந்தே கிடந்தது..காரிருளிலும் மேல் வானக்கண்ணாடியாய் நிலாவை ஏரி பிரதி
எடுத்துக் கொண்டிருந்தது எனலாம்.

என்ன செய்கிறான் அவன்..மாலை நேர நிழலைப் போல் நீண்டு உயரமாய் தெரிந்தவன்..அடுத்த வரியில் முரண்படும் எழுத்தாளனாய்,மதிய வெயிலின் நிழலாய் மாறுகிறான்.

இப்போது அவன் உருவன் சுருங்கியது,கர்ப்பத்தில் இருக்கும் சிசுவாய் காட்சியளித்தான்..என்னவோ பிரசவ அவஸ்தை அவன் முகத்தில் அவதானித்தது..அவன் தன் பாய்மர துடுப்பு போன்ற கரங்களால் ஏரி நீரை விலக்குகிறான்..அடடா..இப்போது அவன் தோற்றம் நீரில் முன்னும்,பின்னும் நீந்தும் அன்ன பட்சியாய்....

ஒண்ணுமில்லீங்க...ஒருத்தன் ஏரி கரைல பேண்டுட்டு,கழுவிகிட்டு இருக்கறதைதான் நம்ம நவீனத்துவங்கள் மேஜிக்கல் ரியலிசம் நடைல எழுதியிருக்காங்களாம்...
-------------------------------------------------------------------------------------------------

இந்த இடுகைக்கு இதை தலைப்பா வச்சதுக்கு காரணம், பின்னூட்டம் போடவும் வசதியா இருக்கும் பாருங்க..அப்படியே ஒத்தி போடலாம். வெட்டியும் போடலாம்..வசதிப்படி செய்ங்கய்யா..


30 comments:

  1. \\குழந்தைகள் பல சமயஙக்ளில் ஆச்சர்யமும், ஆனந்தமும் கொடுக்கத்தான் செய்கிறார்கள்.

    கவிதை அருமை.

    அந்த மேஜிகல் ரியலிசம் மேட்டர் சூப்பரோ சூப்பர்..\\

    ஹலோவ்....இங்க என்ன நடக்குது.
    :)

    ReplyDelete
  2. அண்ணே, லேபிள்தான் அசத்துறீங்க..!

    ReplyDelete
  3. தண்டோரா.. குழந்தைகள் பல சமயஙக்ளில் இப்படிததான் ஆச்சர்யமும், அதிர்ச்சியையும் கொடுக்கிறார்கள்.

    அந்த மேஜிகல் ரியலிஸம் மேட்டர் சூப்பர்..

    அந்த ஜெயில் மேட்டர் பிரேசில் படம் கெரெண்டோவை ஞாபகபடுத்தியது..

    ReplyDelete
  4. \\கழிவறை ஒன்று புதிதாக திறக்கிறார்கள்
    வருகிறாயா?

    இல்லை...இங்கேயும் ஒன்று
    இரண்டு நாளில் வருகிறது
    ’இருக்க”வேண்டும்..

    அல்சூர் காக்கையும்
    அயனாவரம் காக்கையும்
    ”கா”மெயிலில் சாட்டியது\\

    எப்பிடியா யோசிக்கிறீங்க...?
    தொறந்துட்டாங்களாமே...!

    ReplyDelete
  5. \\அந்த ஜெயில் மேட்டர் பிரேசில் படம் கெரெண்டோவை ஞாபகபடுத்தியது..\\

    அப்போ, பஞ்சாப்ல ஒலகப்படம் போட்ருப்பாங்களோ..!

    ReplyDelete
  6. ஆமா, இங்க ஒரு சிலர் மேஜிகல் ரியலிஸம்னு எதோ பேசிக்கறாய்ங்களே, அப்டீன்னா இன்னாங்கோ????

    ReplyDelete
  7. தலை.. நீங்க எங்கேயோயோயோ.. போய்டீங்க..

    வலிக்குது...அழுதுடுவேன்....

    ReplyDelete
  8. மேஜிக்கல் ரியலிசம் என்பது என்ன என்பதை தங்களைவிட விரிவாக விளக்கம் தந்த உங்கsளை அசைக்க யாராலும் முடியாது... முடியாது... முடியாது...


    ஹா... ஹா....

    ReplyDelete
  9. //விளக்கு பிடிப்பார்களோ?//

    படம் எடுத்து நெட்ல ரிலீஸ் பண்ணாம இருந்தா சரி...

    ReplyDelete
  10. எத்தனை பதில் போடறது...ஒரு வார்த்தை “நன்றி” டக்ளஸ்

    ReplyDelete
  11. ஒவ்வொரு வார்த்தையிலும் பயங்கர கோபம் தெரிகிறது

    ReplyDelete
  12. //தண்டோரா.. குழந்தைகள் பல சமயஙக்ளில் இப்படிததான் ஆச்சர்யமும், அதிர்ச்சியையும் கொடுக்கிறார்கள்.

    அந்த மேஜிகல் ரியலிஸம் மேட்டர் சூப்பர்..

    அந்த ஜெயில் மேட்டர் பிரேசில் படம் கெரெண்டோவை ஞாபகபடுத்தியது//

    இதான் கேபிள்..

    ReplyDelete
  13. //ஆமா, இங்க ஒரு சிலர் மேஜிகல் ரியலிஸம்னு எதோ பேசிக்கறாய்ங்களே, அப்டீன்னா இன்னாங்கோ????//

    அதை “எடை”போட்டு தராங்களாம்..வேணுமா “தராசு”அண்ணே

    ReplyDelete
  14. வண்ணத்துபூச்சி இது
    வஞ்சபுகழ்ச்சியா?

    ReplyDelete
  15. மேஜிக்கல் ரியலிசம் என்பது என்ன என்பதை தங்களைவிட விரிவாக விளக்கம் தந்த உங்கsளை அசைக்க யாராலும் முடியாது... முடியாது... முடியாது...//

    தினம் காலைல அந்த அவஸ்தையும்,சுகமும்...

    ReplyDelete
  16. ///விளக்கு பிடிப்பார்களோ?//

    படம் எடுத்து நெட்ல ரிலீஸ் பண்ணாம இருந்தா சரி//

    ம்ம்ம்..செஞ்சாலும் செய்வாங்க..

    ReplyDelete
  17. //ஒவ்வொரு வார்த்தையிலும் பயங்கர கோபம் தெரிகிறது//

    அக்னி..எங்க ஆளையே காணும்..கோபமா?

    ReplyDelete
  18. தண்டோரா said...
    வண்ணத்துபூச்சி இது
    வஞ்சபுகழ்ச்சியா?/////////////


    ஆமா, வெறும் புகழ்ச்சிய கூட இப்படி சொல்லலாமா..??


    கடவுளே...

    ReplyDelete
  19. நல்லாதான்யா... எழுதராங்க...

    ReplyDelete
  20. /நல்லாதான்யா... எழுதராங்க//

    நொம்ப நன்றி அஷோக்...

    ReplyDelete
  21. அருமையான பதிவு,

    குழந்தைகள் மேட்டரை நானும் என்னோட நொறுக்குத் தீனி பதிவிற்கு எழுதிவைத்திருக்கிறேன்.நீங்க முந்திட்டீங்களே.

    ReplyDelete
  22. /அருமையான பதிவு,

    குழந்தைகள் மேட்டரை நானும் என்னோட நொறுக்குத் தீனி பதிவிற்கு எழுதிவைத்திருக்கிறேன்.நீங்க முந்திட்டீங்களே//

    வாங்க நாடோடி இலக்கியன்..முதல் கருத்துக்கு நன்றி.வந்தனம்..

    ReplyDelete
  23. மேஜிக்கல் ரியலிசம் - ஹா ஹா.

    ReplyDelete
  24. /மேஜிக்கல் ரியலிசம் - ஹா ஹா//

    வேலரே..ஊருல இல்லியா?வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  25. //குழந்தைகள் எப்போதும் ஆச்சர்யபடுத்துபர்கள்தான்..//
    நல்லா இருக்கு அங்கிள்

    ReplyDelete
  26. //இந்த இடுகைக்கு இதை தலைப்பா வச்சதுக்கு காரணம், பின்னூட்டம் போடவும் வசதியா இருக்கும் பாருங்க..அப்படியே ஒத்தி போடலாம். வெட்டியும் போடலாம்..வசதிப்படி செய்ங்கய்யா..//

    தண்டோரா.... பதிவு சூப்பர்.....

    அதோட இந்த கடைசி இரண்டு வரிகள்..... ஹ்ம்ம்..... இதுதான் பின்னுது......

    ReplyDelete
  27. //ஒண்ணுமில்லீங்க...ஒருத்தன் ஏரி கரைல பேண்டுட்டு,கழுவிகிட்டு இருக்கறதைதான் நம்ம நவீனத்துவங்கள் மேஜிக்கல் ரியலிசம் நடைல எழுதியிருக்காங்களாம்...//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  28. /
    //குழந்தைகள் எப்போதும் ஆச்சர்யபடுத்துபர்கள்தான்..//
    நல்லா இருக்கு அங்கிள்//

    அடப்பாவி..

    ReplyDelete
  29. //இந்த இடுகைக்கு இதை தலைப்பா வச்சதுக்கு காரணம், பின்னூட்டம் போடவும் வசதியா இருக்கும் பாருங்க..அப்படியே ஒத்தி போடலாம். வெட்டியும் போடலாம்..வசதிப்படி செய்ங்கய்யா..//

    தண்டோரா.... பதிவு சூப்பர்.....

    அதோட இந்த கடைசி இரண்டு வரிகள்..... ஹ்ம்ம்..... இதுதான் பின்னுது.

    நன்றி கோபி

    ReplyDelete
  30. ///ஒண்ணுமில்லீங்க...ஒருத்தன் ஏரி கரைல பேண்டுட்டு,கழுவிகிட்டு இருக்கறதைதான் நம்ம நவீனத்துவங்கள் மேஜிக்கல் ரியலிசம் நடைல எழுதியிருக்காங்களாம்...//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//


    ஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete