Friday, July 31, 2009

மானிட்டர் பக்கங்கள்....4 (31/07/09)



நாயருக்கும்,முகர்ஜிக்கும் முட்டை வியாபாரம் சுத்தமாக படுத்துவிட்டது.கடை திறந்து காத்தாடியது.ஒரு சமயம் தாத்தா இல்லைன்னா பெரியம்மா தயவில் முட்டை விற்று வந்த வரதனும்,பாண்டியனும் இப்ப பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஏன் பாண்டி..இந்த வாட்டி சந்தையில தனியா கடை போட்டிருவோமா? பெரியம்மா கடைதான் போடலயாமே..

வரதா...நம்ம தனியா கடை போட்ட போணியாகுமா?

வேற வழியில்லையா..அடுத்தாப்ல அந்தியூர் குதிரை சந்தைப்ப தாத்தா கால்ல விழுவோம்..

இல்ல,கருப்பு கூட சேருவோமா?

செய்யலாம்..ஆனா அந்த ஆள் பண்ணையை இல்ல எழுதி கேக்கான்..

சரி பாப்போம்.ஆமாம்..ஏன் நம்ம முட்டை விக்கமாட்டேங்குது..

அட..போய்யா..நம்ம எல்லாம் கூமுட்டைன்னு சனங்க தெரிஞ்சுகிட்டாங்க..

பேசாம ‘அரிவாளூம்,சுத்தியும்எடுத்துகிட்டு அறுப்புக்கே போகவேண்டியதுதான்..

டாஸ்மாக்கில் ஒரு ஆளை ரெகுலராக பார்ப்பேன்.பார்ட்டி தண்ணி அடிக்காது..உள்ளே வரும்..2 காலி பாட்டிலை எடுத்து நைசாக பையில் போட்டுகிட்டு வெளியேறிடும்..பின்னால் போய் பார்த்தால் சைக்கிளில் தொங்க விட்டுருந்த பை முழுக்க காலி பாட்டில்..ஒரு கட்டிங் வாங்கி கொடுத்து விசாரித்தால் பார்ட்டிக்கு முழு நேர தொழிலே அதுதான்..ஒரு நாளைக்கு எப்படியும் 200ரூ தேத்திடுமாம்.வீட்டு செலவு இப்படித்தான் ஓடிகிட்டு இருக்காம்.எலேய்..மாட்டினா பின்னிடுவானுகளேன்னா.இது வரைக்கும் மாட்டல.மாட்டினா பார்த்துகிடுவோம்...கிட்ட தட்ட 100 கடை ஒரு நாளைக்கு கவர் பண்றாராம்..சூப்பரப்பு..

கடைசி சொட்டையும்

கவிழ்த்து அடித்த பின்தான்

தெரிந்தது..

காலி பாட்டிலுக்குள்

பொண்டாட்டியின் தாலி..

--------------------------------------------------------------

---------------------------------------------------------------------------

தினத்தந்தி யை படிக்கவே பயமா இருக்கு.விதம்,விதமா கொலை பண்றாங்கப்பா..பணம் இல்லைன்னா கள்ளக்காதல்.அதுலயும் மதுரைல பெத்த புள்ளையையே ஒருத்தி பீஸ் போட்டிருக்கா..சென்னைல ஒரு பெண்..காதல்..வீட்டில் சம்மதிக்கவில்லை..காதலனுடன் வாழ பணம் தேவை..தன் தோழியை மாறு வேடத்தில் வீட்டுக்கு வர சொல்லி தன் தாயின் முகத்தில் மயக்கப் பொடி தூவ வைக்கிறாள்.தானும் மயங்கி விழுவது போல்

நடித்து பின் தாயை உருட்டு கட்டையால் மண்டையை உடைத்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளை தோழியிடம் கொடுத்தனுப்பி விட்டாளாம்..என்ன தவம் செய்திருக்கிறாள் அந்த தாய்....

--------------------------------------------------------------------

உடன்பிறவா உபத்திரத்தின் சாராய ஆலையிலிருந்து டாஸ்மாக்கின் தேவையில் 25% கொள்முதல் செய்யும்படி அரசு உத்தரவாம்..என்னய்யா நடக்குது?

--------------------------------------------------------------------

குடி,பீடி,சிகரெட் பழக்கமெல்லாம் இருந்தா முதுமையே வராதாம்.ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது...(அட சீக்கிரம் டிக்கெட்டாம்).அதனால நான் இனிமேல் வெள்ளிக்கிழமைல மட்டும் குடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்.

--------------------------------------------------------------------


23 comments:

  1. \\‘அரிவாளூம்,சுத்தியும்’ \\
    இங்கனதான் தல இடிக்கிது...!

    \\பார்த்தாள்..”உன்னை இப்படி ஆக்கிட்டு போயிட்டேனே.. என்னை மன்னிச்சிடும்மா” என்று மன்னிப்பு கேட்பதை போல் இருந்தது போட்டோவில் இருந்த கணேசனின் முகம்.\\

    அதாவது, இறந்து ஒரு வருடம் கழித்து தெவசத்துக்கு படையல் போடுவது போலயா தலைவரே..?
    நல்லாருக்கும்.

    \\வெள்ளிக்கிழமைல மட்டும் குடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்.\\

    இதே மாதிரி, எத்தனை அல்லது எத்தனை முறை முடிவெடுத்துருக்கீக்க..?
    :)

    ReplyDelete
  2. /Hilarious

    :-))//

    கடைல போணி பண்ணதுக்கு நன்றி..யாசவி கைராசி வியாபாரம் எப்படின்னு பார்ப்போம்..

    ReplyDelete
  3. டக்ளஸ்..அதாவது நாளைக்கு சனிக்கிழமை மட்டும் குடிக்கிறதுன்னு மாத்திடுவோமில்ல....

    ReplyDelete
  4. "நான் தான் முதல்லே..." என்று போட முடியாமே பண்ணிட்டாங்களே..

    ReplyDelete
  5. சரி.. சரி... போய் படிச்சிட்டாவது வாறேன்

    ReplyDelete
  6. குற்றால எபெக்டா..??? கிக் இல்லாம கொஞ்சம் ஜோக்கா இருக்கு.. ஆனாலும் ஒ.கே.


    அடுத்த டிரிப் எப்போ..?? ஆவலா வெயிட்டிங்...

    தல..ஸ்டார்ட் மியூஸிக்..

    ReplyDelete
  7. /*பேசாம ‘அரிவாளூம்,சுத்தியும்’ எடுத்துகிட்டு அறுப்புக்கே போகவேண்டியதுதான்..*/

    ஏன் 'எடைக்கு' கூட போட முடியாமே 'துரு பிடிச்சி' போய் கிடக்கோ???

    ReplyDelete
  8. நல்ல கிக்கான சரக்கு பாசு.

    ReplyDelete
  9. /*கடைசி சொட்டையும்
    கவிழ்த்து அடித்த பின்தான்
    தெரிந்தது..
    காலி பாட்டிலுக்குள்
    பொண்டாட்டியின் தாலி..*/

    அட... அதிஷ்டம்னே... யாருக்கும் தெரியாமே எடுத்து வந்து அடகு வச்சம்னா அடுத்த ரெண்டு நாளைக்கு சிக்கனோட சரக்கடிக்கலாம்னே...

    ஆமா... தாலியோட சரக்கு கொடுத்த கடை எங்கண்ணே இருக்கு???

    ReplyDelete
  10. பழைய ஸ்க்ரிப்ட் நல்லா இருக்கு என்று என் எண்ணம்.

    ReplyDelete
  11. /*தினத்தந்தி யை படிக்கவே பயமா இருக்கு.........தவம் செய்திருக்கிறாள் அந்த தாய்....*/

    ஒன்னும் சொல்றதுக்கு இல்லே...

    ReplyDelete
  12. /*குடி,பீடி,சிகரெட் பழக்கமெல்லாம் இருந்தா முதுமையே வராதாம்.ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது...(அட சீக்கிரம் டிக்கெட்டாம்).*/

    இது தேர்தல் டிக்கட்டா??? அது கூட அப்படிதான் கொடுக்கிறதா கேள்வி பட்டேன்.

    ReplyDelete
  13. /உடன்பிறவா உபத்திரத்தின் சாராய ஆலையிலிருந்து டாஸ்மாக்கின் தேவையில் 25% கொள்முதல் செய்யும்படி அரசு உத்தரவாம்..என்னய்யா நடக்குது//

    அரசியல்ல இதெல்லாம் சகஜம்ணே.

    ReplyDelete
  14. வாங்க கேபிள் அண்ணே... வாங்க....

    ReplyDelete
  15. /குடி,பீடி,சிகரெட் பழக்கமெல்லாம் இருந்தா முதுமையே வராதாம்.ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது...(அட சீக்கிரம் டிக்கெட்டாம்).அதனால நான் இனிமேல் வெள்ளிக்கிழமைல மட்டும் குடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்//

    எந்த வெள்ளிக்கிழமை.. வாரா வாரம் சனிக்கிழமைக்கு முன்னால வருமே அந்த வெள்ளிக்கிழமையா..?

    ReplyDelete
  16. /உடன்பிறவா உபத்திரத்தின் சாராய ஆலையிலிருந்து டாஸ்மாக்கின் தேவையில் 25% கொள்முதல் செய்யும்படி அரசு உத்தரவாம்..என்னய்யா நடக்குது//

    ஒரு வேளை அந்த உபத்திரவமே இவரின் ஏற்பாடாக இருக்குமோ?

    இவண்- சுப்பிரமணியசாமி தொண்டன்,

    ReplyDelete
  17. //நான் இனிமேல் வெள்ளிக்கிழமைல மட்டும் குடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்.//

    நமக்கு எல்லா நாளும் வெள்ளிக்கிழமை தானே!

    ReplyDelete
  18. கவித சூப்பரப்பு...

    ReplyDelete
  19. வண்ணத்துப்பூச்சியார்..
    நையாண்டிநைனா..
    கேபிள்....
    ஸ்ரீ..
    வால்பையன்..
    குறை ஒன்றும் இல்லை..
    அஷோக்...

    நன்றிகள்..

    ReplyDelete
  20. //இது வரைக்கும் மாட்டல.மாட்டினா பார்த்துகிடுவோம்...கிட்ட தட்ட 100 கடை ஒரு நாளைக்கு கவர் பண்றாராம்..சூப்பரப்பு.//
    அடப்பாவி இத்தன நாள் மாட்டிக்காம இருந்துட்டு இப்ப தண்டோராகிட்ட மாட்டிக்கிட்டான். அப்பறம் என்ன ஊரெல்லாம் அடிச்சிற வேண்டியது தானே!

    ReplyDelete