Thursday, April 29, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்..........8


எவ்வளவு நாளாம்மா உங்கப்பா குடிக்கறாரு?

பொறந்ததலேர்ந்தே !

என்ன சொல்றீங்க?

மகள் சொன்னாள்.. நான் பொறந்ததலேர்ந்தே .

அப்படின்னா 20 வருஷமாவா?

சீ..சீ.. எனக்கு பதினெட்டு வயசுதான்

கையில் நரம்பை தேடிக்கொண்டே அந்த நர்ஸ் சொன்னாள். (செவிலிகள் சீருடையில் அவ்வளவு அழகாயிருக்கிறார்கள். காதலாகி, கசிந்துருக வேண்டும் போல் இருக்கிறது)

பார்த்தால் ரொம்ப நல்லவராயிருக்கீங்க?(அடிப்பாவி ! நல்லவேளை !) எவ்வளவு கஷ்டம் பாருங்க.. உங்களுக்கு, உங்க வீட்டுக்கு . அப்படி ஏன் நம்ம குடிக்கணும்? சொல்லுங்க.

சிஸ்டர் நீங்களும் குடிப்பிங்களா?

விளையாடாதீங்க சார். பாருங்க. இப்ப உங்க பிள்ளைக்கு கல்யாணம் செய்யணும் . எவ்வளவு ரூபா ஆகும் . நீங்க குடிச்ச காசு இருந்தா?

இப்ப போய் கேட்டால் திருப்பி கொடுப்பாங்களா?

சிஸ்டர் என்று என்னால் வெறும் வார்த்தைக்கு அழைக்கப்பட்டவளுக்கு எஸ். ஜானகியின் குரல். அவள் குரலில் மழலையும் கொஞ்சியது. அவளுக்காகவே இனி குடிக்க கூடாது என்ற முடிவுக்கு வரும் நிலையில் இருந்தேன்.

இனிமே நல்ல பிள்ளையா இருக்கணும். சரியா? நான் போன் பண்ணி கேப்பேன்.

இன்னிக்கு நிச்சயமா குடிக்க மாட்டேன் சிஸ்.. சாரி உங்க பேர் என்ன?


-------------------------------------------------------------------------------------------------

நண்பரின் தாயாருக்கு ஹியரிங் எய்டு வாங்க போயிருந்தோம்.. தாயாரின் செவித்திறனை பரிசோதிக்க சில கேள்விகள் கேட்டார்கள்.

எங்கயிருந்து வர்றீங்கம்மா?

என் மவன் வீட்டுலேர்ந்து.

எந்த ஊர்?

நானு, என் மவன் எல்லாரும் காரைகுடிதான்

எப்ப ஊருக்கு போவீங்க?

ஏன் ?என் மவன் வீட்டுல எத்தனை நாள் வேணா இருப்பேன் . என்னை யாரும் ஒன்னும் சொல்ல முடியாது( மருமகளை பார்த்துக் கொண்டே)

உங்களுக்கு எத்தனை புள்ளைங்க?

இதோ இவன் மட்டும்தான். ஒரே மவன். அதுக்கப்புறம்தான் அவளுக்கு புருஷன் .

நண்பரின் மனைவி குறுக்கிட்டார். அத்தை உங்களுக்கு காது நல்லாத்தானே இருக்கு. இப்ப எதுக்கு வெட்டி செலவு?

-------------------------------------------------------------------------------------------------

சைதாபேட்டை பேருந்து நிலையத்தில் கண்ட ஒரு காட்சி.ஒரு இளம் தம்பதி..அருகில் அவன் தாய்..அவன் சூழலை மறந்து மனைவியை கொஞ்சி கொண்டிருந்தான்..மற்றவர்கள் பார்ப்பதை அவர்கள் சட்டையே செய்ய வில்லை..அவன் தாய் முகத்தில் ஒரு இனம் புரியாத கவலை இருப்பதாக எனக்கு பட்டது. அவள் மகன் கவனத்தை திசை (மனைவியிடமிருந்து) திருப்பும் வண்ணம் செயல் பட ,அவனுக்கு வந்ததே கோபம். தாயை திட்டி தீர்க்க இளம் மனைவி கண்கள் கலங்க. ஒரு மினி சீரியல் பார்ப்பது போல் இருந்தது. சற்று நேரம் ஆயிற்று. அவர்கள் பஸ் வரவில்லை.இளம் மனைவி ஆட்டோவில் போகலாம் என்றாள். தாய் வெட்டி செலவு என்று மறுக்க மீண்டும் மனைவியின் கண்ணீர். இளமை வென்றது. ஆட்டோ வந்தது. மனைவி முதலில் ஏறினாள். மகன் ஏற முற்படுகையில் தாய் அவனிடம் ஆட்டோவின் பின்னால் எழுத பட்ட வாசகத்தை காட்டினாள்.நானும் அதை படித்தேன்..நீங்களூம் படித்திருப்பீர்கள். "சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்ணை நம்பாதே.." அவர்கள் போய் விட்டர்கள்.

நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஏன் அந்த தாய் அப்படி நடந்து கொண்டாள். ஒரு வித insecurity யா? கணவனை இழந்த அந்த விதவை தாய்க்கு மருமகள் மகனை தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ? என்ற பயம் காரணமா?எப்படி அவர்கள் ஒத்து குடும்பம் நடத்த போகிறார்கள். காலம் காலமாய் இந்த பிரச்சனை இருந்துதான் வருகிறது.

அமரர் சுஜாதா ஒரு முறை வினோதமாக ஒரு விளக்கம் எழுதி இருந்தார்.
"தாய் தன் மகன் உருவில், ஜாடையில் தன் புருஷனை பார்ப்பது போல் உணர்கிறாள்.ஆனால் அவன் இன்னொரு பெண்ணுடன் (மனைவியுடன்) வரும் போது அவளை தன் சக்களத்தியாக பார்க்க தொடங்குகிறாள்.

பெண் குழந்தைகள் இல்லாத வீட்டிற்கு மருமகளாக வருபவர்கள் மகளாக நடத்த படுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆனால் கணவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. பெண்களோடு வளராததால் அவர்கள் அருமை தெரியாமல் துச்சமாக பெண்டாட்டியை மதிக்கிறார்களாம்.


---------------------------------------------------------------------------------------

எவ்வளவு அழகு அவள்
என்றேன்
ஆமாம் அவன் அழகுக்கு
யாரும் ஈடு இல்லை
என்றாள் மனைவி

Monday, April 26, 2010

சாரி.....கொஞ்சம் ஓவராயிடுச்சு


எனக்கே சற்று சோம்பல்தான்

அந்த வாசம் நாசியை தாக்கும்வரை

பார்வையை கூராக்கி உற்று நோக்கினேன்

தூரத்தில் பளபளத்தது அது

ஆஹா..அருமையான வேட்டைதான்

தனியொருவனாய் தள்ளிக் கொண்டு வர முடியாது

பரிவாரங்களுக்கு தகவல் அனுப்பினேன்

தளபதிகள் அணிவகுக்க பயணம் தொடங்கியது.

நாங்கள் மேலிருந்தோம்

அது கீழே சமவெளியில்

இத்தனை பேரும் பங்கு போட்டாலும்

மிச்சம் நிறையவே இருக்கும்

இதோ இலக்கு நெருங்கி விட்டது

சின்ன அடையாள ஒலி

அதற்கே வந்துவிட்டாள் தோழி

சீ..சீ நான் அதற்கு அழைக்கவில்லை

பின்..

மேலே பார் அணிவகுப்பை

இடமும்,வலமுமாய்

இரு பக்கமும் காத்திருப்போம்

சரியான தீனிதான்..

என்னை பார்க்கும் போதெல்லாம்

மனதிற்குள் மழையடிக்கும்

என்பீர்களே

இப்போதும் அப்படித்தானா?

எட்டாவது திருமண நாள்

முடிந்ததும் மனைவி கேட்டாள்

இல்லையென்று உண்மையை சொன்னால்

புண்படுவாள்-என்று

“ஆமாம்என்று பொய் சொன்னேன்

இதில் எதாவது முரண் இருந்தால்

அதுமுன் நவினத்துவம்

இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்

புரியவில்லையென்றால்

எளக்கியம்


அய்யா இருக்காரா?

அட நீங்களா? உங்களுக்கு கடுதாசி எழுதிகிட்டிருக்காரு. இருங்க போனை கொடுக்கறேன்

அய்யா புள்ளையை எங்க காணலையே. பள்ளிக் கூடம் ஆரம்பிச்சப்ப வந்தது. அப்புறம் கண்லயே பார்க்கலை.

அப்படியா? வெயில் அதிகம்னு பீச்சுக்கு போறேன்னாரு. வந்தாக்க சொல்றேன்.

இந்தி வாத்தியார் கிட்ட சண்டையாம். அதுக்காக பள்ளிக்கூடத்துக்கே வராம இருந்தா எப்படி?

அதில்லை. அவருக்கு அந்த ஸ்கூலு புடிக்கலையாம். இங்க வீட்டிலயே படிக்கிறேன்னு சொல்றாப்ல..

எதையாவது சட்டுபுட்டுன்னு செய்ங்க அய்யா. இல்லைன்னா அவருக்கு பதிலா பொண்ணையாச்சும் சேர்த்து விடுங்க

---------------------------------------------------------------------------

ஐந்து பேர்..சமாளிக்க முடியுமா?

ஐயோ..நிச்சயம் முடியாது..

அட்ஜஸ்ட் பண்ணி பாரேன்..

வேற வழியில்லை..வர சொல்லிட்டேன்

என்னை கேட்க வேண்டாமா?

நீ பெரிய கைகாரியாச்சே..உன்னால முடியும்

ம்ம்.. மானத்தை வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க..வரட்டும் ..பார்க்கலாம்

உள்ளே சென்று டப்பாவை திறந்து இருந்த கொஞ்சம் துவரம் பருப்பை எடுத்து ஊற வைத்தாள்..

ஆறு பேருக்கு சாம்பார் வைக்க இந்த பருப்பு எப்படி போதும்..சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும்.புலம்ப ஆரம்பித்தாள்

(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)

எனக்கொரு வேலை கொடுங்க..

சம்பளம் எவ்வளவு வேணும்?

முத நாள் ஒரு பைசா..

ஒரு பைசாவா?

ஆமாம்..ஆனா அடுத்த நாள் ரெண்டு பைசா..அதுக்கு அடுத்த நாள் நாலு பைசா..அப்புறம் எட்டு..பதினாறு..முப்பத்திரண்டு..

சரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..

(கணக்கு போட்டு பாருங்களேன்)

Saturday, April 24, 2010

கொஞ்சம் பழைய சோறும்,ஒரு பச்சைமிளகாயும்



மெயின் மேட்டர் :

இந்த இடுகையில் உள்குத்து இருக்கிறது என்று பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்கள்..

டிஸ்கி :

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டில் நா‌ய் வள‌ர்‌த்தாலு‌ம் ச‌ரி, நா‌ய் வள‌ர்‌‌க்க ஆசை‌ப்ப‌ட்டாலு‌ம் ச‌ரி இதை முத‌லி‌ல் படியு‌ங்க‌ள்.

பொதுவாக வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களின் ஆயுள் 18 முதல் 20 ஆண்டுகள் வரை.

நாய்கள் தனக்குதானே பிரசவம் பார்த்துக் கொள்ளும். நாய்கள் பிரசவம் முடிந்ததும் ஓரிரண்டு குட்டிகளை தானே சாப்பிட்டு விடுவது‌ம் உண்டு.

நாயின் மூக்குப்பகுதி காய்ந்து இருந்தால் அவற்றுக்கு காய்ச்சல் என்று அர்த்தம்.

நாய்கள் அருகம்புல்லை சாப்பிடும் பழக்கமுடையவை. அவற்றின் உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு அரும்கம்புல் மருந்தாகிறது. ‌வீ‌ட்டி‌ல் வள‌ர்‌க்கு‌ம் நாயை பூ‌ங்கா அ‌ல்லது பு‌ற்க‌ள் இரு‌க்கு‌‌ம் பகு‌திகளு‌க்கு ‌நி‌ச்சய‌ம் அழை‌த்து‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌ம்.

நாய்கள் தினமும் ஒரு வேளை மட்டுமே உணவை உண்ணும் பழக்கம் கொண்டவை. பெரு‌ம்பாலு‌ம் அசைவ உணவுக‌ள்தா‌ன் நா‌‌ய்களு‌க்கு‌ப் ‌பி‌ரிய‌ம்.

தனது குட்டிகளின் மீது அதிக பாசம் கொண்டவை. நாய்கள் பிரியமானவர்களை பிரிந்தால் கண்ணீர் விட்டு அழும்.

நா‌ய் கு‌ட்டியை ஈனு‌ம் வரை ஒரே இட‌த்‌தி‌ல் வ‌சி‌க்கு‌ம். கு‌‌ட்டியை ஈ‌ன்றது‌ம் உடனடியாக ம‌ற்றொரு இட‌த்‌தி‌ற்கு மா‌ற்‌றி‌விடு‌ம் பழ‌க்க‌ம் கொ‌ண்டது.

எப்போதும் நாய்கள் காற்றடிக்கும் திசையை எதிர் நோக்கித்தான் படுக்கும். ஏ‌ன் எ‌ன்றா‌ல், கா‌ற்று மூலமாக வரு‌ம் வாசனையை‌க் கொ‌ண்டு எ‌ந்த ‌விஷய‌த்தையு‌ம் மோ‌ப்ப ச‌க்‌தியாலே க‌ண்ட‌றி‌ந்து கொ‌ள்வத‌ற்காக.

நாய்களுக்கு குளிர் காலங்களில் அதிகமாக முடி கொட்டும். எனவே அதற்கு முன்பாகவே அவற்றுக்கு முடியை வெட்டிவிடுவது நல்லது.

குருவியின் நன்றி உணர்வு

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழருடன் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார்.

அங்கே ஒரு மரக்கிளையில் குருவி ஒன்று கத்திக் கொண்டே இருந்தது.

அதைக் கண்ட தோழர், ஏன் இந்தக் குருவி கத்திக் கொண்டே இருக்கிறது என்று கேட்டார்.

அதற்கு நபிகள், அந்த குருவிக்கு கண் தெரியாது. அதனால் இறைவா, எனக்கோ கண் தெரியவில்லை. நான் எப்படி இரை தேடி உண்பேன் என்று கூறி கத்துகிறது என்றார்.

அந்த நேரத்தில் அந்த பக்கம் பறந்து வந்த வெட்டுக்கிளி ஒன்று குருவியின் வாயில் விழ, குருவி அந்த வெட்டுக்கிளியை கவ்வி விழுங்கியது. வெட்டுக்கிளியை உண்ட குருவி உடனே மீண்டும் கத்தத் துவங்கியது.

இதைப் பார்த்ததும் வியந்துபோன தோழர், இப்போது மீண்டும் ஏன் கத்துகிறது என்று கேட்டார்.

நபிகள், உணவு கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறது என்று பதிலளித்தார்.

உபயோகமாய் எதுவும் எழுதுவதில்லை என்று மின்னஞ்சலிலும், கைப்பேசியிலும் புகார்கள் குவிவதால் , கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தேன். நன்றி..

Wednesday, April 21, 2010


பார்வதி அம்மாள் திருப்பியனுப்பபட்ட விஷயத்தில் எவ்வளவு அரசியல் இருக்கிறது என்பது ஓரளவுக்கு யூகிக்க முடிந்ததே. பத்திரிக்கைகளும் எழுதியிருக்கிறார்கள். வழக்கம் போல் ஜீனியர் விகடன் வைகோவின் பேட்டியை போட்டு கொஞ்சம் அரிப்பை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பதிவுலகம் அதற்கு மேல் பற்றி எரிகிறது. டோண்டு போட்ட ஒரு இடுகை அவருக்கு தமிழ்மண வரலாற்றில் ஒரு நிரந்தர இடத்தை வாங்கி கொடுத்திருக்கிறது. பாம்பையும், சாம்பையும் பார்த்தால் முதல்ல சாம்பை அடி என்பது போல் பின்னூட்டங்களும், எதிர் பதிவுகளும்..

டோண்டு என்ன அத்தாரிட்டியா? அவர் கருத்தை அவர் சொன்னார். ஆனால் சொன்ன தொனியில் தப்பு இருந்ததே தவிர, அதன் உள்ளடக்கம் இங்கு நடக்க கூடியதுதான். இதற்கு முன் கூட நிறைய முறை இதை நாம் அனுபவித்திருக்கிறோம். என்னவோ அந்தாள்தான் திருப்பி அனுப்பியது போல் இங்கு சீன் நடந்தது. மனிதாபிமான அடிப்படை என்று வாய்க்கு வாய் சொல்கிறார்கள். அப்புறம் ஏன்யா ரகசியமாய் வரவேண்டும்? இங்கு தலை யார்? வைகோவா, திருமாவா, நெடுமாறனா? மாநில, மத்திய அரசின் ஒத்துழைப்பு வேண்டுமென்றால் நீங்கள் யாரையா அணுக வேண்டும்? கருணாநிதியை.. அம்மாள் வருவது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் பார்வதியை அம்மையாரின் உடல்நிலையை இவர்கள் அரசியலாக்க நினைத்தார்கள். அது நடந்து விட்டது. ஆம் நண்பர்களே . அவரை அனுமதித்திருந்தால் இவர்களுக்கு என்ன பெயர் கிட்டியிருக்கும்? அந்த கிரெடிட் தமிழினத்தலைவருக்கு அல்லவா போயிருக்கும்? இப்போது பாருங்கள். வைகோ தியாகியாகி விட்டார். முக துரோகியாகி விட்டார். அவர்கள் எதிர்பார்த்தது அதுதான்.

இங்கு டோண்டுவும் அப்படித்தான். சோவின் தலையங்கத்தை ஒரு வாரம் முன்னாடியே இவர் போட்டு விட்டார். கிளம்பின ராக்கெட்டுகள். டோண்டுவின் பிறப்பு , வளர்ப்பு, நல்ல சாவா இல்லையா ஆராய்ச்சிகள். ஒருத்தருக்காவது கருணாநிதியையோ, சோனியாவையோ இது போல் சாடும் தைரியம் இருக்குமா என்று தெரியவில்லை.

முத்துகுமார் மரணத்துக்கு பின் யாரும் எழுதுவதை நிறுத்தவில்லை. அதை பற்றி எழுதி விருது வாங்கினவர் உட்பட. இலங்கை பிரச்சனை பற்றி திவீரமாக எழுதும் அதே விரல்கள் தான் இன்ன பிறவும் எழுதுகின்றன. யாரும் உங்கள் தமிழ் பற்றை தவறாக நினைக்க மாட்டார்கள் நண்பர்களே. நீங்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்து எழுதுங்கள். ஒரு நண்பர் எழுதுகிறார் . டோண்டு சிங்கள விருந்தாளிக்கு பிறந்திருப்பாரோ என்று. நன்று நண்பரே.. சிங்கையிலோ, சவுதியிலோ இருந்து எழுதுவதில் வீரம் இல்லை. சென்னைக்கு வாருங்கள். உங்கள் வீரத்தை அதிகாரத்திடம் காண்பியுங்களேன்.

ஒரு விஷயம். நான் மு.கவையோ, ஜெவையோ திட்டி போடும் இடுகைகளில் சிலர் பின்னூட்டம் கூட போட மாட்டார்கள். மாறாக என்னிடம் அலைபேசியில் அதை சொல்வார்கள். அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் எல்லோரும் ஒரே மாதிரி குற்ற உணர்ச்சியில் யோசிப்பதுதான். உங்களால் என்ன தியாகம் இயலும் ? சொல்லுங்கள்.. அதற்கேற்ப நாம் ஒரு போராட்டம் அறிவிக்கலாம்.


Tuesday, April 20, 2010

சும்மா கொஞ்சம் மொக்கை





என்னது ? எம்.ஜி.ஆர் இன்னும் உயிரோட இருக்காரா?



இன்ஸ்டால்மெண்ட்ல வாங்கின ஏர்கூலருக்கு காசு கேட்டு விஜிபி உயிரை வாங்கறாங்களே..மதுரையில போய் “வாங்கிக்க” சொல்லலாமா?



துவரம்பருப்பு தொண்ணுத்தாறு ரூபாயாம். சாப்பாடு எங்கன்னு சொல்லுங்க. சமைச்சு வீணாக்க முடியாது..



நவாப் நாற்காலின்னு புதுப்படம். நான் தான் கதை வசனம். நீ ஒரு பாட்டெழுதறியா?





திடீர்னு எத்தனை சட்டை கிழிஞ்சிருக்கும்னு கேட்டா எப்படி தலைவரே?





இவர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க வேண்டியிருக்கு..




ஐபிஎல் டீம் ஒன்னை வாங்காம விட்டுட்டமோ?






இருந்த ஒரு வீட்டையும் தானமா கொடுத்தாச்சு. இனிமேல் இங்கதான்
ஜாகை





”யாவரும் நலம்”



Monday, April 19, 2010

மானிட்டர் பக்கங்கள்.............19/04/10




கொலையில் நேரடியாக ஈடுபட்ட நளினியையே மன்னிக்கும் மனம் கொண்ட சோனியாவால் பிரபாகரனின் தாயார் மருத்துவ சிகிச்சைக்கு மறுக்கும் மனம் வந்திருக்கும்? இதென்னவோ அதிகாரிகள் மட்டத்தில் செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. கார்கில் யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது கூட அப்பல்லோ மருத்துவமனையில் நிறைய பாகிஸ்தானியர்கள் சிகிச்சை பெற்றார்கள். சில பாகிஸ்தான் தலைவர்கள் உள்பட. வரதராஜ பெருமாளுக்கு பாதுகாப்பு. அவர் மகள் நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்புக்கும் பாதுகாப்பு. சரி . தலைவரின் மூன்று மணிநேர உண்ணாவிரதம் முடிந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. எதாவது பாராட்டு விழா உண்டா?


தமிழக மக்களின் நாடிதுடிப்பு என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஆக்‌ஷன் செல்லுக்கு சொல்லுங்கள் என்கிறார்கள். அது கூட நிறைய பேர் சொல்ல வேண்டும். எது எப்படியோ வாரம் இரண்டு முறை கல்லா கட்டுகிறார்கள். கொஞ்சம் கணக்கு போட்டுப் பார்த்தால் அவர்கள் சம்பாதிக்கும் பணம் நிச்சயம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சுரண்டும் அரசியல்வாதிகளுக்கு குறைந்ததில்லை. செய்திகள் எந்த அடிப்படையில் வருகிறது? சாமியார், சரசம், சல்லாபம் இதெல்லாம்தான் இப்ப செம்ம ஹாட் மச்சி. அப்புறம் பழைய கிளு கிளு சினிமா கிசுகிசுக்கள். மதில் ஏறி குதித்த பூனையின் நேரடி ஒளிபரப்பு. தலைவரின் குடும்பத்தில் நடக்கும் லேட்டஸ்ட் முறைப்பும், விறைப்பும்.

சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. வேலூரில் அரசு அதிகாரியாக பணிபுரியும் ரங்கராஜன். இந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி அவருக்கு பதவி உயர்வு. ஆனால் மார்ச் 26ஆம் தேதி ஒரு விபத்தில் சிக்கினார். அது துரதிர்ஷ்டமென்றால், அதில் அவர் உடனே இறக்காதது இன்னும் துரதிர்ஷ்டவசமே. வேலூரில் பிரபலமான பேருந்து நிறுவனம் பாரதி மோட்டார் சர்விஸ். வழக்கம் போல் அதில் அலுவலகம் போகிறார். இடையில் இரண்டு நபர்கள் ஒரு கேனுடன் ஏறுகிறார்கள். இவர் அமர்ந்திருக்கும் இருக்கையின் கீழ் அதை வைக்கிறார்கள். அதற்கு 100ரூ லஞ்சம் கொடுக்கிறார்கள். (அது தினம் நடக்கும் நிகழ்ச்சியாம். எவ்வளவு ஆபத்து !)அது ஒரு கெமிக்கல் கேன். பேருந்தின் குலுங்கலில் அது வெடிக்கிறது. ரெங்கராஜன் மற்றும் சிலர் தீப்பிடித்து எரிகிறார்கள். விபத்து பதிவு செய்யபடுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட பேருந்து காவல் நிலையத்துக்கே கொண்டுவரப்படவில்லை.. பணம்..

ரங்கராஜன் இறக்கவில்லை. பிழைக்க வாய்ப்பே இல்லை . ஆனால் எப்போது உயிர் போகும் என்று சொல்ல மருத்துவர்களால் முடியவில்லை. உடம்பெல்லாம் எரிகிறது . தன்னை கொன்றுவிடுமாறு மருத்துவர்களிடம் கெஞ்சுகிறார். அதற்கு சட்டம் அனுமதிக்காது என்கிறார்கள். தினப்பத்திரிக்கையில் ஒரு மூலையில் இந்த செய்திவந்தது. ஜீனியர் விகடனை தொடர்பு கொண்டு இந்த செய்தியை பதிவு செய்ய முடியுமா? என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னது.

“இது டெய்லி பேப்பருக்கான நியூஸ் ஆச்சே ! என்றார்கள். பிறகு இதில் மேட்டர் இருக்கிறாப்ல தோணுது. வேலூர் நிருபரை தொடர்பு கொள்ளுங்கள் என்றார்கள். அவர் துணை முதல்வர் விசிட்டில் பிஸியாக இருந்தார். ரங்கராஜனும், இன்னும் ஆறு பேர்களும் இறந்து போகும் வரை யாரும் வரவில்லை. பாரதி பேருந்து உரிமையாளரின் பவர் அப்படி என்று சொன்னார்கள். ” சபாஷ். எவனாவது சாமியார் சரசமாடற போட்டோவோ, செய்தியோ கிடைச்சா, அவங்களுக்கு ஸ்கூப்.. இது தினம் அங்கங்ககே நடக்கறதுதானே என்கிறார்கள். ஆனால் ஒரு கிராமத்தில் எதாவது கற்பழிப்பு நடந்தால் உடனே நியூஸ். பெயரை மாற்றி, முகத்தை மறைத்து. அப்புறம் அதற்கு ஃபாலோஅப் வேறு. அதில் ஒரு கிக் இருக்கும் போல்.


சென்னை காவல்துறை சமீபத்தில் ஒருவனை கைது செய்தார்கள். விசாரித்த போதுதான் தெரிந்ததாம். அவன் மீது 1000 வழக்குகள் இருக்கிறதாம். போலிஸ் தரப்பில் அவனை புகழ்ந்து தள்ளி விட்டார்கள். கன்னம் வைப்பதில், சத்தம் வராமல் ஷட்டரை திறப்பதில், சங்கிலி அறுப்பு, பிக்பாக்கெட் இதிலெல்லாம் பார்ட்டி கில்லாடியாம். விட்டால் கமிஷனர் ஆஃபிசில் சிலையே வைப்பார்கள் போல.

சுறா படத்தின் ஆடியோ ரிலீஸ். தொடர்ந்து ட்ரெயிலர் தாக்குதல். விழாவில் பேசிய அத்தனை பேர்களும் சொல்லி வைத்தாற்போல் விஜய் நடிச்சா வெற்றிதான் என்றார்கள். கூடவே ஒருவர் விஷாலையும் சேர்த்துக் கொண்டார். மீண்டும் சன் டிவிக்கு ஒரு வெற்றிப்படம். இந்த முறை வடிவேல் காப்பாற்றி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. வழக்கம் போல் பார்த்திபன் தமண்ணாவை ஜொள்ளினார். பவர் கட்டின் போது தமனா வீட்டில் மெழுகுவர்த்தி கூட ஏற்ற வேண்டியிருக்காது என்றார். நடக்கட்டும்..

கலைஞர் டிவியில் தசாவாதாரம். ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிடும் காட்சியை கவனமாக தூக்கியிருந்தார்கள். நான் முதல் முறை ஒளிபரப்பியபோது பார்க்கவில்லை. இந்த முறைதான் கவனித்தேன். சீப்பை ஒளித்து வைப்பதில் கில்லாடிகள்.




மொண்ணை கத்தியுடன்
சுயம்வரம் நோக்கி..
காலை பதம்
பார்த்த கூர் கற்களில்
தீட்டி,தீட்டி
கத்தி நீண்டு வாளானது.
"கதை" போல் இருந்த
திண்ணை தடியன்
வில் போலானான்.
அவையோருக்கு ஆச்சர்யம்
அவனா “இவன்” என்று.
அமைதியாய் புன்னகைத்தேன்..
நான் தானே“அவனாயிருந்தேன்”










Saturday, April 17, 2010

டாய்............


மூத்தவருக்கு முறைப்பு ஜாஸ்தியாயிடுச்சு
விறைப்புல இளையவரும் சளைச்சவரில்லை
நப்பாசைதான் நடுவில இருக்கிறவங்களுக்கும்
அமைதிக்கு பின்னாடி அணுகுண்டு இருக்குன்னு
அறிஞருக்கு தெரிஞ்சுதாம்ல இருக்கு

இப்பதான் புது வீடு முடிஞ்சுது
அடுத்தாப்ல பெண்சிங்கத்துக்கு
பிரசவம் பார்க்கணும்
ஐம்பாதாண்டு காலமா வாழவச்சவளுக்கு
கோவையில் கொண்டாட்டமாம்
அப்பாக்கள் மேடையில நடிக்க
பிள்ளைகளுக்கும் அரிதாரம் பூசும் ஆசையாம்
மருமகனுங்களுக்கு ஆப்பாம்
பேரம் முடியறவரைக்கும் புது கம்பெனிதான்

மூணு பேருக்கு முத பக்கத்துல
கண்ணீர் அஞ்சலி இந்தியாவின்
நம்பர் ஒன் தமிழ் நாளிதழில்

இன்னும் யாருக்கு விட்டுப்போச்சு பதவி
கொண்டு வா மேல்சபையை
கூட்டுக் களவாணிங்க வாயை அடை
கீழ இருக்கிறவனுக்கு எப்பவும் போல்
டீயும், தினத்தந்தியும்தான்

கதர் சட்டை கிழியுது
சுகர் ஏறுது
வாங்கப்பா உப்பு சத்தியாகிரக
ஊர்வலத்துக்கு

குறையொன்றும் இல்லை
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
இதான் கருப்பு சட்டைகளின்
காலர்ட்யூன்
மேல் சபையில் மானமிகுக்கள்
உண்டா, இல்லையா?
மரம் வெட்டிக்கும் மனசு அடிச்சுக்குது
மைந்தனுக்கு தச்சு வச்ச சூட்டும், கோட்டும்
சும்மாவே இருந்துடுமோ?

தலைவிக்கும் தலைவலிதான்
கால்ல விழுந்து கிடந்தவனெல்லாம்
கரை வேட்டியை மாத்திடுகிறான்
உடன்பிறாவா உபத்திரத்தை கழட்டி விடலாம்னா
இளநி வெட்ட யாரை தேடறது?

கூத்துல கோமாளியாட்டாம் இன்னொரு
தொலைகாட்சியாம்
கொஞ்சநஞ்ச சிண்டையும் பிய்ச்சுக்கிறாருயா
சின்னக்கவுண்டரு

சுத்தி மொக்கயாயிடுச்சு
அறிவாள் சாணை பிடிக்க துட்டு தேத்தணும்
உண்டியல் ஓட்டையை அடைங்கப்பா

ஒரு பொண்ணு ஆனந்தம்
ரெண்டுன்னா பரமானந்தம்
சுத்தி ரவுண்டு கட்டினா
நித்தியானந்தமாம்
ரஞ்சிதாவா, ராகசுதாவா
சந்தேகம் தீர்ந்தாலும்
வயித்தெரிச்சல்தான் அடங்கலை
அவ்வளவு நேரம் எப்படிரா?
வயக்ராவா? இழவெடுத்தவனே

உலை கொதிக்குது பாரு
கொட்டு ஒரு ரூபா அரிசியை
அண்ணி கொழுந்தனோட ஓடினாளா?
மணி எட்டாச்சு பார்
இலவச டிவியை போடு
மண்டை வெடிச்சுட போகுது

கவலை ஜாஸ்திதான்
கட்டிங்க்கு பார்ட்னர் கிடைக்கலை
பணப்புழக்கம் அதிகமாமே

234 லேயும் திருவிழா வரணும்
108 ஐ அவனுக்கு போடு
காலி பண்ணு வவுத்தை
கறி கொடுப்பான்
கூடவே கால் கிலோ மயிறும் கேளு

என்னாது ? எழுத ஒன்னுமே இல்லையா?
கிளறுடா சாதிக்குப்பையை
அடிப்பட்டுச்சா? வைத்தியரைப் பாரு
அதுக்கும் முன்னாடி அவன் வர்ணாசிரமத்தை
தோண்டு.. சுயமரியாதையை சுவாசிச்சு
வளர்ந்தவன் டா நீ
ஊசிகூட போட விடாதே அவனை
இருப்பது ஒரே உயிர்
போனா போகட்டுமே
கொள்கைக்காக..............

Thursday, April 15, 2010

மீதமிருக்கும் கதைகள்.......2


அங்க தேடிப்பாருப்பா
இங்கதானே வச்சிருந்தேன்
அன்னிக்கு கொல்லையில
எரிச்சீங்களே அந்த
பழைய மரப்பொட்டி
அதுல இருந்துச்சோ?
எதுக்கும் பரண் மேல
ஒரு தடவை பாரேன்
கொஞ்சம் மூக்குப்பொடியை
உறிஞ்சியபடி
நிணைவு அடுக்குகளில்
துழாவுகிறார் அப்பா
அவர் தொலைத்தது
எதுவென அறிந்துகொள்ள
இன்னும் கொஞ்சம் நாளாகும்
எனக்கு என்பது மட்டும் புரிந்தது

.........................................................

உனக்கு ஒன்னுமே தெரியலை
அப்பா என்கிறான் மகன்
உனக்கு இப்போது
புரிந்திருக்குமே
என்பது போலிருந்தது
அப்பாவின் பார்வை

Tuesday, April 13, 2010

இப்படியும் ஒரு காதல் கதை.......


அண்ணா நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்

யாருடா அந்த துரதிர்ஷடசாலி என்றேன்.

உங்களுக்கு காமிக்கிறேன் என்றான் ராஜாராமன். என் நண்பனின் தம்பி. என் அறையில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறான். கல்லூரி மூன்றாம் ஆண்டு.

ராஜா உங்க சொந்தக்காரங்க வகையறாவில் நிறைய முறைப்பெண்கள் இருப்பது எனக்கு தெரியும். உங்கப்பாவுக்கு தெரிஞ்சா உன்னை வெட்டி போட்ருவாரே.. உங்கண்ணன் கூட காதலிக்காததற்கு அதானே காரணம்.

அண்ணா அவளுங்க எல்லாம் அட்டை கருப்பு. தொட்டு நெத்தியில் இட்டுக்கலாம். என் உமாவை நீங்க பார்க்கணுமே. பவுன் கலர். நான் முடிவு பண்ணிடேன். நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்.

அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டியா? சம்மதிச்சுட்டாளா?

இல்லை . இனிமேல்தான் சொல்லணும். நேத்திக்குத்தான் அவளை முதல்முறையா பார்த்தேன்.

பாவி கண்டதும் காதலா? அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போயிட்டியா? அவ உன்னை லவ் பண்ணலைன்னா?

நிச்சயம் பண்ணுவா. எத்தனை பொண்ணை பார்க்கிறோம். ஆனா உமாவை பார்த்தவுடனே மணியடிக்குதே.

உங்கப்பா அடிக்க போறாரு. அது மட்டும் இப்ப தெரியுது. முதல்ல படிப்பை முடி. வேலைக்கு போ. மயிர் வெட்ட கூட அப்பாதான் காசு கொடுக்கணும்.அதுக்குள்ள ஏண்டா?

அண்ணா நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா? என்றான் ராஜா.

அன்றிரவு ஒரு பெண்ணுடன் நான் கோயிலுக்கு போவது போல் கனவு வந்தது. அவளை முத்தமிடுகிறேன். சிரிக்கிறாள். அழகாக.. விடிந்தவுடன் அவள் முகம் நினைவுக்கு வரவில்லை.

ராஜாவின் முயற்சி பலித்து விட்டது. உமா அவனை பார்க்க ஆரம்பித்து விட்டாளாம். இரண்டொரு வார்த்தைகளும் பேசி விட்டாளாம். பக்கத்து கிராமத்திலிருந்து கல்லூரிக்கு வருகிறாளாம். ராஜாராமன் ஆளே மாறிவிட்டான். என் பாடிஸ்ஃப்ரேவை தீர்க்க தொடங்கியிருந்தான்.

அண்ணா . சாரி. உங்க அனுமதியில்லாமல், உங்க பிரோவை திறந்து பார்த்தேன். நிறைய கவிதைகள் எழுதியிருக்கீங்களே. நிச்சயமா நீங்க காதலிச்சிருக்கணும் .

அதெல்லாம் காலேஜ் படிக்கும்போது எழுதினதுடா. காதல்ன்னு முடிவு பண்ணிடாதே.

சும்மா சொல்லி விட்டேனே தவிர, வாழ்க்கையில் அந்த அனுபவத்தை மிஸ் பண்ணி விட்டேனோ என்று தோன்றியது. அன்றும் ஒரு கனவு. அதே முகம் தெரியாத பெண். என் அடுத்த நாள் காலை ஒரு சுகத்துடன் விடிந்தது. முட்டாள் ! இரண்டு தங்கைகள் கல்யாணத்துக்கு ரெடியாக இருக்கிறார்கள். நினைவிருக்கட்டும்.

ஒரு நாள் மாலை. சீக்கிரம் வேலை முடிந்தது. சினிமாவிற்கு போய் எவ்வளவு நாள் இருக்கும் என்று எண்ணிக் கொண்டே தியேட்டரை நோக்கி வண்டியை செலுத்தினேன். ராஜாராமன் நின்றுக் கொண்டிருந்தான். அருகில் ஒரு பெண். பேரழகியாய் இருந்தாள். பாவி...கொஞ்சம் பொறாமையாய் இருந்தது. ராஜாராமன் மாநிறம்தான். அவள் ..அவன் சொன்னது போல் பவுன் கலர்தான்..

அண்ணா.. உமா என்றான்.

உமா நான் சொல்லியிருக்கேன் இல்ல..எங்க அண்ணனோட ஃப்ரெண்டு..

அவள் கண்களை பார்த்து என்னால் பேசவே முடியவில்லை.அப்படியொரு தீட்சண்யம் அவள் முகத்தில். கழுத்துக்கு கீழ் பார்வை அலைபாய்வதை தவிர்க்க முடியவில்லை.

ராஜா நான் சினிமாவிற்கு வரவில்லை. இந்த வழியா போகும்போது ,உன்னை பார்த்தேன். அதான் நிறுத்தினேன். சீக்கிரம் அவங்களை அனுப்பிட்டு வந்திடு..

இரண்டாவது பீர். வழக்கத்துக்கு மாறாக நிறைய சிகரெட்கள். மனசு அலைபாய்ந்து கொண்டே இருந்தது. இரவு ராஜாராமன் ஒரு கேக் கொண்டு வந்தான்.

இன்னிக்கு உமாவுக்கு பர்த்டே அண்ணா..உங்களுக்கு கொடுத்தா என்றான்.

அந்த கேக்கில் இருந்த செர்ரியை பார்க்கும் போது அவள் நினைவுதான் வந்தது.ஏனோ ராஜாராமனை அடிக்க தோன்றியது. பளாரென்று ஒரு அறை விட்டேன்.

ராஸ்கல்.. என்னை நம்பித்தான் உங்கப்பா அனுப்பியிருக்காரு. நீ கண்டவங்க கூட ஊரை சுத்தறே. உங்கப்பாவுக்கு போன் போடறேன்.. நீ வேற இடம் பார்த்துக்க.

காலில் விழுந்தான் ராஜாராமன். அண்ணா இன்னும் நாலு அடி கூட அடிங்க.. வெளியே போன்னு சொல்லாதீங்க.. எங்க கல்யாணத்தை நீங்கதான் நடத்தி வைக்கணும்.. அழ ஆரம்பித்தான்.

எனக்கு வெட்கமாக இருந்தது. என்னவாயிற்று எனக்கு..குற்றவுணர்வில் கிளம்பி வெளியில் வந்தேன்... திரும்ப வரும்போது ராஜாராமன் தூங்கி விட்டிருந்தான்...

உமாவின் தந்தைக்கு விஷயம் தெரிந்து விட்டது. படிப்பை நிறுத்தி விட்டார். சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் கூட ஆகிவிட்டது. ராஜாராமன் பித்து பிடித்தாற் போல் திரிந்தான். அவ இல்லைன்னா நிச்சயம் செத்துடுவேன் அண்ணா..அவ கல்யாணத்தன்னிக்கு... அவளே சம்மதிச்சுட்டாளே.. அவ கூட சாகிறதுக்கும் நான் ரெடியா இருக்கேனே.. அவ ஃப்ரெண்டு கிட்ட சொல்லி விட்டிருக்கா அண்ணா.. அவளை மறந்துடணுமாம்..

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவ்வளவுதானா காதல்.. என்னமோ தோன்றியது... ராஜா நான் இருக்கேன்.. எதாவது செய்யறேன் ..பைத்தியக்காரத்தனமா எதுவும் பண்ணிடாதே..

அதற்க்கப்புறம் கொஞ்சம் ஜேம்ஸ்பாண்ட் வேலைகள் செய்தேன்.. அவளை சந்திதேன்.. அழுதாள். அவள் அப்பா ராஜாராமனை கொலைசெய்து விடுவதாக மிரட்டியதால்தான் அப்படி சொன்னேன் என்றாள். இப்போதே வந்து விடுகிறேன் என்றாள்..

இப்ப வேண்டாம். கல்யாணத்துக்கு முதல் நாள்... நிசார் ஆட்டோவில் காத்திருப்பான். நேராக என் அறைக்கு வந்துவிடுங்கள்.. ஒரு காரில் திருச்சி.. சமயபுரத்தில் கல்யாணம்..

நடந்தது எதையும் நான் ராஜாவிடம் சொல்லவில்லை. சர்ப்ரைசாக இருக்கட்டும். நான் கொஞ்சம் புத்தி பேதலித்ததற்கு பரிகாரமாக.. ராஜாராமனும் கொஞ்சம் உற்சாகமாக தெரிந்தான். உமா எதையாவது சொல்லி விட்டிருப்பாளோ.. நாளை மறு நாள் கல்யாணம். நாளை அவள் வந்துவிடுவாள்.. காதலிப்பதை விட ,காதலுக்கு உதவுவதில் ஒரு அலாதி சுகம் இருப்பதாய் தோன்றியது.

மறுநாள் ராஜாராமை காணவில்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. ஊருக்கு போன் பண்ணினேன். அங்குதான் போயிருக்கிறான்.. ராஜா நைட்டுக்குள்ள வந்துடு.. உனக்கு ஒரு பரிசு என்றேன்.. குழப்பமாய் போனை வைத்தான்..

நிசார் ஒன்னும் பிரச்சனையில்லையே..

இல்லை.. அவங்க வந்துட்டாங்க.. எல்லாரும் கோயிலுக்கு போயிருக்காங்க.. இன்னும் ஒன் அவர்ல வந்துவேன்.

நிசார் உமா நகை எதுவும் போட்டு கிட்டு வரலையே.

இல்லை அண்ணா.. கட்டின புடவைதான்.

உமா வந்துவிட்டாள்.. நுழையும்போதே ராஜா என்றபடிதான்..என்ன சொக்குபொடி போட்டான் இந்த சின்னப்பையன். இப்படி உருகிறாளே என்று எனக்கு வியப்பு.

எங்கப்பா நிச்சயம் போலிசுக்கு போவார் . உடனெ இந்த ஊரை விட்டு கிளம்பிடலாம். ராஜா எங்கே?

நீ வரப் போறதை அவன் கிட்ட சொல்லலை.. சஸ்பென்ஸா வச்சிருக்கேன். உன்னை இங்க பார்த்தவுடனே ,அவன் சந்தோஷத்தை நான் அனுபவிக்கணும்..

காலிங் பெல் அடித்தது.

உமா நீ உள்ளே இரு. நான் கூப்பிடும்போது வா..

கதவை திறந்தேன்.. ராஜாராமன். ஆனால் தனியாக இல்லை..

அவளுக்கு மட்டும்தான் முடியுமா? அண்ணா.. நான் செத்துடுவேன்னு நினைச்சீங்களா? இவளும் என்னை உயிரா காதலிச்சா.. அவளுக்காகத்தான் இவளை அலட்சியப்படுத்தினேன்.. இப்ப போய்.. என்கூட வர்றியான்னு கேட்டேன்.. வந்துட்டா ..கட்டின புடவையோட..நாளைக்குத்தான் எங்க கல்யாணமும்..

நான் என்ன செய்யட்டும் ? ஒரு வழி சொல்லுங்களேன் ப்ளீஸ்..