Saturday, August 29, 2009

எத்தனை முறை.....




இனி தைக்க இடமில்லை

இன்றாவது

வாங்கி வருவீர்களா அப்பா ?



என்ன எழவு காரணம்

இன்றும் தாமதமா?



புடுங்கபோகலாம்

உனக்கு எவன் இங்கு

வேலை கொடுத்தான்?



வட்டி யார் கட்டுவார்?

உப்பு போட்டுத்தானே..



ஊரிலிருந்து இருந்து வந்த கடிதம்

பிரிக்கையில் எதிரொலிக்கும்

அம்மாவின் இருமல்....



பசிவேளையில் பாத்திரத்தில்

கரண்டியின் சத்தம்...



ஆடை தூக்கி..

அவசர புணர்தலில்

இயலாமையின் கழிவிரக்கம்



தூக்கம் தொலைத்த அயர்ச்சி

கருவளையமாய்



கண்ணாடியில் காண்கையில்

நீதான் எவ்வளவு விகாரம்



எத்தனை முறை

தொலைக்கிறேன் உன்னை,
------------------------------------------------------------------------------------------------


Friday, August 28, 2009

கொஞ்சம் ரீமிக்ஸ்....




பந்தலிலே பாகற்க்காய்...
தொங்குதடி பாத்தியா??
போகும் போது பறிச்சுக்கலாம்..அடியே....

இது தென் தமிழ் நாட்டின் ஒரு ஒப்பாரி பாடல்...எழவு வீட்டிற்க்கு ஒப்பாரி வைக்க வந்த இருவர் ஊடே அந்த வீட்டில் இருக்கும் பாகற்காய் கொடியை கண் வைத்து பாடுகிறார்கள்.ஓப்பாரி...உண்மையில் அழிந்து கொண்டு வரும் ஒரு அற்புதமான கலை...துக்க வீட்டில் ராகம் போட்டு பெருங்குரலெடுத்து பாடும் போது ....துக்கம் கரைந்து..அழுகை வெளிப்பட்டு மனம் லேசாகிறது.தமிழ் நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஒப்பாரி பாடப்பட்டு வருகிறது..மதுரை,ராமனாதபுரம்,தேனி,திண்டுக்கல்,தூத்துக்குடி,சேலம் என அந்தந்த வட்டார வழக்கில் ஏராளமான பாடல்கள் .இதை பற்றி ஒரு ஆவணப் படம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை.தென்திசை இயக்கம் என்ற ஒரு அமைப்பு சில நண்பர்களால் மதுரையில் தொடங்கபட்டிருக்கிறது.கலை மற்றும் மாற்று ஊடகம் போன்றவற்றை வளர்ப்பதில் பெரும் முனைப்புடன் இருக்கிறார்கள்.அவர்கள் உதவியுடன் விரைவில் ஒப்பாரியை பற்றிய பதிவை தொடங்க உள்ளோம்..

-------------------------------------------------------------------------------------------------

சமீபத்தில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு போக நேரிட்டது..மிக ஆடம்பரமான திருமணம்..அத்தனை லேட்டஸ்ட் மாடல் கார்களும் ஆஜர்.உறவினர் கூட்டத்தை விட நண்பர்கள் கூட்டம்தான் அதிகம் இருந்தது..திருமண வீட்டாருக்கு ஒரு வேலையும் இல்லை.அத்தனையும் காண்ட் ராக்ட்தான்.நெருங்கிய சொந்தங்கள் சிலர் காணும்..ஆஃபிஸ்,மீட்டிங்க்.ஆடிட்டிங்,அப்ராட்,நாள்(அந்த) என்று ஆயிரம் சாக்குகள்...வாண்டுகள் கூட்டம் கம்மி.வந்திருந்த சிலதும் அப்பாவின் மல்டிமீடியா செல்லை நோண்டி போட்டோ,கேம்ஸ் என்று பிஸி...கூட்டம் நிறைய..சத்தம் நிறைய....ஆனாலும் என்னவோ இல்லை..என்ன அது?

என் சொந்த ஊர் தஞ்சை...சிறு வயதில் உறவினர் வீட்டு கல்யாணம் எல்லாம் சென்னையில்தான்(மெட்.. ராஸ்)..கல்யாணம் என்றால் குஷிதான்..தஞ்சையில் விலைகுறைவு என்பதால் வாழை இலை,காய் எல்லாம் வாங்கி கொண்டு சாயந்திரம் 5 மணிக்கு கிளம்பும் செங்கோட்டா பாஸ் பாசஞ்சரில் ஏறினால் காலையில் எக்மோரில் இறங்கி நேராக சத்திரம்....


அப்போதெல்லாம் கல்யாணம் என்பது 3 நாள் கூத்து..(இப்போ அதுவும் பாதியாகி விட்டது).நான்,3 தம்பிகள்,அக்கா,அப்பா,அம்மா(குடும்பதோடு போகலன்னா கோவிச்சுகுவாங்கன்ணே)..சத்திரம் போய் இறங்கினால் அங்கு பெரிய படையே இருக்கும்.மாமா,சித்தி,பெரியப்பா,மற்றும் நம் உறவினர் வீட்டு வாண்டுகள் எல்லாம் சேர்த்து ஒரு 34/40 தேறும்..அப்ப ஆரம்பிக்கும் அமர்க்களம் இருக்கே..அடடா..வாழை பழம் முதல் வடை வரை சமையற்காரருக்கு தெரியாமல் (அவங்க பிசியா ரம்மி ஆடிட்டு இருப்பாங்க..) திருடி பங்கு பிரிப்பதில் சண்டை போட்டு..(சில ஆள்காட்டி எட்டப்பங்களும் செட்டில் உண்டு) வாரி விழுந்து முட்டி சிராய்ச்சு...பின் பக்கத்தில் எதாவது சைக்கிள் கடையை கண்டு பிடித்து வாடகை சைக்கிள்(ஹவர் சைக்கிள்)எடுத்து ஓட்டி,ஊரை சுத்தி..ஆளாலுக்கு ஒரு பக்கம் தேட வச்சு..அத்தனை அமர்க்களமும் நடக்கும்..(அத்தை/மாமா பெண்களிடம் பிலிம் காட்டும் சைடு ரீலும் உண்டு).

இப்போது இருப்பது போல் ஆடம்பரமான மண்டபங்கள் அப்போது இல்லை..எல்லாம் பரிமுனை(parrys)யில் தெலுங்கு செட்டியார் மண்டபங்கள்தான்..அங்கு ஒரு மானேஜர் ..அவர் குடும்பமும் சத்திரத்தின் ஒரு அறையில் இருப்பார்கள்.அங்கும் ஒரு பெண்ணோ,பையனோ சினேகிதமாகி விடுவார்கள்..கல்யாணம் முடிந்து சத்திரம் காலி பண்ணும் போது அவர்களை பிரியும் போது ஒரு மெல்லிய துக்கம் வரும்..

கொஞ்சம் பெரியவனான பின்(நான் வளர்கிறேனே மம்மி??)கல்யாணம் சைட் அடிக்கும் உற்சவமானது..இன்னும் கொஞ்ச நாளானது...மப்பு.... மங்காத்தா..ரம்மி.. என்று ஆரோக்கியமான வளர்சி அடைந்தது...இப்ப நம்மளும் குடும்பஸ்தனாயிட்டோம்...(கொசு வத்தி முடிய போவுது..)

இந்த திருமணத்தில் வாண்டுகளையே காணும்..இருக்கும் சிலரும் பேசினால் அதில் ஒரு சின்ன தற்பெருமையே இருந்தது.(பாட்டு..,கராத்தே..கீ போர்டு..நீச்சல்..(ஒரு தாய் குலம் சொல்கிறார்..விக்கிக்கு யார் கூடவும் விளையாடவும் சரி பேசவும் பிடிக்காது..ஸ்கூல்,கிளாஸ்..கம்ப்யூட்டர்..அதான் அவன் உலகம்)..நான் யோசித்தேன் அவர்கள் எதை இழந்திருக்கிறார்கள்..அல்லது எனக்கு அப்போது எது கிடைக்கவில்லை...(இந்த போலியான பொழுது போக்கும் ஆடம்பரமும்)ஏன் இப்படி பிள்ளைகள் தனித் தனி தீவாய் இருக்கிறார்கள்...
காரணம் ஒன்றுதானாக இருக்கமுடியும்..சமூக,பொருளாதார விழிப்புணர்ச்சி அல்லது நன்கு முன் எச்சரிக்கையுடன் வாழ்வை திட்டமிடுதல்...

"நாம் இருவர்..நமக்கு இருவர்..என்று தொடங்கி..பின் அது "நாம் இருவர்..நமக்கு ஒருவர்" என்று ஆனது..இனி என்ன ஆகும் நாமே இருவர்..நமக்கு எதற்கு இன்னொருவர்.." என்று ஆகிவிடுமோ??

""மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...
” தாய் மாமன் சீர் கொண்டு வாராண்டி...அவன் தங்க கொலுசு....

இந்த பாட்டுக்கு எல்லாம் வருங்கால சந்ததிக்கு பொழிப்புரை எழுதித்தான் புரிய வைக்க வேண்டுமோ?
-------------------------------------------------------------------------------------------------

காந்தி கடன் வாங்கிட்டு திருப்பிகொடுக்காமல் டபாய்த்திருப்பாரோ?பின் ஏன் திரும்பி வராக் கடனுக்கு காந்தி கணக்கு என்று பெயர் வந்தது?

நண்பரும் ,பதிவரும் வண்ணத்துப்பூச்சியார் அழகாக சொன்னார்”

”அதாவது சுதந்திர போராட்ட காலத்தில் சில கடைகளில் கதர் குல்லா அணிந்து வந்து டீ காபி குடிப்பவர்களிடம் காசு வாங்க மாட்டார்கள். சுதந்திரத்திற்காக பாடுபடுபவர்களுக்கு ஒரு மரியாதையும் அவர்களுக்கு ஏதாவது வகையில் உதவிட வேண்டி சிலர் செய்த தருமம்’ என்று என் தாத்தா சொல்ல கேட்டிருக்கிறேன்.

அதையும் கொச்சைப் படுத்தி காசு கொடுக்காமல் ஏமாற்றுபவர்களை இப்படி சொல்கிறது நமது சமூகம்.
-----------------------------------------------------------------------------------------------------------------

நம்புங்கள்
நேற்றோடு ஒழித்துவிட்டேன்

நம்புங்கள்
நாளை முதல்
நிச்சயம் இல்லை

நான் இடுகைகள்
இடுவதை சொன்னேன்
-----------------------------------------------------------------------------------------------------------------

Thursday, August 27, 2009

தொலைந்து போனேன்...... கவிதைகள்



என்னில் பாதியை காணவில்லை
இடுப்புக்கு கீழே

அடுத்தவர் யாரும்
அதை பொருட்படுத்தவில்லை

எனக்குத்தான் இருப்பு
கொள்ளவில்லை

எங்கே போயிருக்கும் ?

வீதியில் இறங்கினேன்
இடம் வந்தது..

இங்குதான் இருக்கவேண்டும்
உள்ளே செல்பவர் வருபவர்
யாவரும்
முழுசாய் வந்தனர்

மரங்கொத்தி மண்டையில் கொத்த..
அதோ அவன்தான்..
இடுப்புக்கு மேலே வெறுமை..

அடையாளம் கண்டு
என்னருகில் வந்தான்

அப்புறமென்ன?
ஆளுக்கு முப்பது போட்டு
”கட்டிங்”அடித்தோம்

முழுதாய் வெளியே வந்தோம்.
------------------------------------------------------------------------------------------------

நில்... என்றால்
நிற்கமாட்டாய்

சொல்லாதே..... என்றால்
சொல்கிறாய்

செய்.... என்றால்
செய்ய மாட்டாய்

வா.... என்றால்
போய்கொண்டே இருக்கிறாய்

எதை சொன்னாலும்
ஏறுக்கு மாறாகவே
செய்கிறாயே

உன் மனதில் என்ன...
”மனசு’ என்ற நினைப்பா?


Wednesday, August 26, 2009

ஒரு நடுசெண்டர் நவீனத்துவ கவிதை.....



காத்திருக்கிறேன்
மரணபயத்தை
அவர்களுக்கு ஊட்ட

வயிற்றிலடிக்கிறார்கள்
சிறுபூச்சிகளை அழிக்கும்
அந்த தெளிமருந்து
தயாரிப்பாளார்கள்

காத்திருக்கிறேன்..
அதற்கு முன்
அறிய வேண்டும்

இடது, வலது புஜம்
சிரமா,,கரமா?
எங்கே விழுந்தால்
மரணம் என்று
பஞ்சாங்கத்தில்
பதிந்திருக்கிறார்கள்..?

Tuesday, August 25, 2009

கிளியுடன் ஒரு இரவு பயணம்......




சின்ன முருகனுக்கு அவன் சொந்த பெயரே மறந்து போய்விட்டது.காரணம் ’கிளி” என்றே அவன் பெரும்பாலும் அழைக்கப்படுவதுதான்.அவனுக்கு சொந்த ஊர் திண்டுக்கல் பக்கமாம்.சித்தி கொடுமை தாங்காமல் 14 வயதில் வீட்டை விட்டு வந்து விட்டான்.பசி தாங்காமல் நின்றிருந்த ஒரு லாரியில் பின்னால் ஏறி படுத்து தூங்கிவிட்டானாம்.லாரி டிரைவர் கன்னியப்பன் பார்த்து சாப்பாடு வாங்கி கொடுத்து தனது லாரியில் கிளினர் வேலைக்கு வைத்து கொண்டார்.அன்று முதல் முருகன் ”கிளி” யானான்.

தாம்பரம் விரைவு பேருந்து நிலையத்தில் நெல்லை போவதற்காக நண்பனுடன் காத்திருந்தேன்.எல்லா வண்டியும் நிரம்பி வழிந்தது.ஆம்னி பஸ் நிற்கவேயில்லை.நண்பன் சொன்னான்.மச்சான் லாரில போலாம்.தாம்பரம் செக்போஸ்ட் அருகில் தான் லாரிக்கு டிக்கெட் ? போடுகிறார்கள்.சின்ன முருகன் என்ற கிளியை அங்குதான் சந்தித்தேன்.நாகர்கோயில் போகும் லாரி அது.(ஆண்டவன் அருள்).அண்ணே ..உள்ள கேபின் 100 ரூபா..5 பேர் ஏத்துவோம்.பின்னால தார்பாய் மேல படுக்கலாம் 25 ரூபா ஆகும்.ஆனா காத்து பிச்சுகிட்டு அடிக்கும் என்றான்.சரி 500 ரூபா நானே தர்றேன்..வேற டிக்கெட் ஏத்தாதே என்றேன்.அவன் சட்டென்று பயந்து போய் டிரைவரை கேளுங்க என்றான்.கன்னியப்பன் என்கிற டிரைவர் செக் போஸ்டில் வரி மற்றும் "தண்டம் "அழுது” விட்டு வந்தவர் எங்களை சற்று சந்தேகித்து பின் சம்மதிக்க என் முதல் லாரி பயணம்(நீண்ட) தொடங்கியது.

ஏற்கனவே கால்புட்டி உள்ளே போயிருந்தாலும்
பயணத்தின் போது இருப்பு வைத்திருப்பது என்
ப(வ)ழக்கம்..கன்னியப்பனிடம் அடிக்கலாமா என்று அனுமதி கேட்க சார் இதை போய் கேட்பாங்களா... என்ன நா அடிக்க மாட்டேன். அடிச்சா வண்டி ஓட்ட மாட்டேன்...சரக்கு உள்ளே போக போக மன நிலை மாற தொடங்கியது.கொடைக்கானல் மலை ஏறும் போது இரண்டு கொண்டை வளைவுகளுக்கு ஒரு முறை சீதோஷ்ண மாற்றத்தை உணர முடியும்.சரக்கும் அதே போல்தான்.பேச்சு கன்னியப்பனின் சொந்த கதைக்கு திரும்பிற்று.சொந்த ஊர் சோழவந்தான்.மனைவி ,2 குழந்தைகள்..மனைவியின் தங்கை வள்ளியூரில் நர்சாக இருக்கிறாள்.போக வர தொடுப்பு ஏற்பட சேர்த்து கொண்டு விட்டார்.குழந்தை இல்லை.அதற்கு அவள் அக்காவின் சாபம்தான் காரணம் என்றார்.வண்டி செங்கல்பட்டு தாண்டி ஒரு ரோட்டு கடையில் சாப்பாட்டுக்கு போட பட்டது.மிச்சமிருந்த சரக்கை நானும் நண்பனும்(ரவி)
ஒரே மூச்சில் காலி செய்து விட்டு அவர்களுடன் சாப்பிட போனோம்.

புரோட்டா,வருத்த கரி பிறை(அப்படித்தான் எழுதி இருந்தார்கள்),கல் தோசை,புல் பாயில் அவர்கள் இருவரும் பின்னி எடுக்க போதையில் பில்லை நாந்தான் கொடுப்பேன் என்று குழற..கிளி யின் முகத்தில் தெரிந்திருந்தால் இன்னும் நாலு புரொட்டாவை தின்னிருக்கலாமே என்ற வருத்தம் ..

திடிரென்று கண் முழிச்சு பார்த்தால் வண்டி ஒரு அத்துவான காட்டின் நின்றிருந்தது.கன்னியப்பனை காணோம்.கிளி மட்டும் கீழ் நின்று பீடியை ரசித்து பிடித்து கொண்டிருந்தான்.என்னை பார்த்ததும் பீடியை அணைக்க ..கிளி..வண்டி ஏன் நிக்குது?டிரைவர் எங்கே?அண்ணே.தோ .உள்ளார போயிருக்காரு ..வந்துடுவாரு..சொல்லும் போது கன்னியப்பன் வந்து விட்டான்.கிளி ..நீ போறியாடா?கிளிக்கு வெட்கம்.இன்னும் கொஞ்ச நாளாவட்டும்னே..நான் புரியாமல் பார்க்க.சார் உள்ள குஜிலிங்க இருக்குது..நீங்க போறிங்களா? இந்த வாட்டி சரக்கு சும்மா கும்முன்னு இருக்கு சார்.அப்பா என்னை விட்டுடு நா இந்த ஆட்டத்துக்கு வரலே..ஆனால் நண்பனுக்கு சபலம்தான்.அவனை அடக்கி வண்டியை கிளப்பினோம்.

சார் 2 மணிக்கு வண்டியை ஓரம் போற்றுவேன்..திரும்ப கிளம்ப 6 மணியாயிடும்.நீங்க நல்லா தூங்குங்க என்றான் கன்னியப்பன்.என் சந்தேகத்தை கேட்டேன்."ஒன்னுக்கு ரெண்டு பொண்ட்டாட்டி இருக்குல்ல.பின்ன ஏன் இப்படி?அட போங்க சார் இது நெதம் வோணும்..நான் உறை கூட போட மாட்டேன்.அருகிலிருந்த கிளி"அண்ணனுக்கு அடுப்புல வைக்கும் போது சூடு உறைக்கணும்.அப்பாதான் திருப்தியாம்.கன்னியப்பன் கையில் கிடைத்த எதையோ எடுத்து கிளியை வெட்கத்துடன் அடித்தான்.

திரும்ப காலை லாரி கிளம்பி நாங்கள் நெல்லை போய் சேர இரவு 8 மணியாகி விட்டது.சுவாரசியமான பயணம்.கேமரா கையில் இல்லாமல் போய் விட்டது.லாரி ஓட்டுனருக்கும்,கிளினருக்கும் உள்ள உறவு ஒரு அன்னியோன்னியமான தாம்பத்யம் போலவே இருக்கிறது.கிளி நிறைய அடி வாங்குகிறான்.ஆனால் கன்னியப்பனுக்கு எதுனா ஒண்ணுன்னா முதல் ஆளாய் இறங்கி விடுவானாம்.கன்னியப்பன் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனையையும் கிளியிடம் சொல்கிறான்.கிளி ஆறுதல் சொல்லும் விதமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது.அண்ணன் அடிச்சா அடுத்த நாள் பிரியாணி,புது துணி, விஜய் படம்னு அன்பை கொட்டி விடுவாரு.அந்த அன்புக்குகாகவே எத்தனை அடியும் வாங்கலாம்.கிளி சொல்லும் போதே மீண்டும் எதையோ எடுத்து வீசுகிறான் கன்னியப்பன்..கன்னியப்பன் அவுட்சைட் போகும் போது கூட அருகில் கிளி இருக்க வேண்டுமாம்..பீடி,கால் கழுவ தண்ணி கொடுத்து சிஷ்ய பணிவிடை..கிளியின் லட்சியம்...ஒரு லாரிக்கு டிரைவர் மற்றும் முதலாளியாவதுதான்.பின் தன்னை போல் ஒரு கிளியை தேடி கண்டு பிடித்து கிளினராக வைத்து கொள்வதுதான்.

நான் விடைபெறும் போது கன்னியப்பன் காசு வாங்க மறுத்து விட்டான்.நான் கட்டாயப் படுத்தி கொடுத்து விட்டு சின்ன முருகா என்று அழைத்து அவன் கையில் ஒரு 100 திணிக்க அவன் கன்னியப்பனை பார்க்க..அவன் தலை அசைக்க சந்தோஷத்துடன் வாங்கி கொண்டான் சின்ன முருகன் என்கிற"கிளி"

பின் குறிப்பு: எங்கு போவதென்று முடிவு செய்யாமல் கிளம்பி, கண்ணில் படும் முதல் வண்டியில் ஏறி, அது நிற்கும் கடைசி இடத்தில் எறங்கி ..பின் அங்கிருந்து தொடங்கி.......யாராவது துணைக்கு வருகிறிர்களா

Monday, August 24, 2009

ஸ்பெஷல் மானிட்டர் பக்கங்கள்(100 வது இடுகை)..24/08/09



நான் ஆஸ்திகனா?நாஸ்திகனா?தெரியவில்லை..பிள்ளையார் பொம்மையெல்லாம் வாங்கி,சுண்டல் கொழுக்கட்டை சகிதம் பூஜையெல்லாம் ஆச்சு.(வீட்ல இருக்குறவங்க செண்டிமெண்டுக்கு மதிப்பு கொடுக்கணுமில்ல..அப்புறம் வருஷம் தவறாம ஐயப்பன் கோவில் நிச்சயம்.பக்தி பரவசம் அப்படிங்கிறத விட,அந்த இரண்டு மாசம் சிகரெட்,தண்ணி எல்லாத்துக்கும் தடா..(போயிட்டு வந்தவுடனே சேர்த்து வச்சு வெளுப்போமில்ல)..உடம்பு சும்மா சொன்னதை கேக்கும்.அது மட்டுமில்லாம சபரிமலைக்கு போயிட்டு வரது ஆனந்தானுபவம்.இப்ப எதுக்குடா நீட்டி முழக்கறான் பார்க்கிறீங்க இல்லையா..?கடவுள் பற்றிய என் சந்தேகங்களை சுவாமி”வாலானாந்தா’சென்னை பட்டறைக்கு வரும்போது ”தீர்”த்து வைப்பதாக சொன்னார்.
-------------------------------------------------------------------------------------------------

சிங்கப்பூர் பதிவர் நண்பர் பிராபகரை சந்தித்தோம்..ஏர்போர்ட்டிலிருந்து நேராக என் அலுவலகத்திற்கு வந்தார்.அவர் எனக்கு பாலோயராகவோ,நான் அவருக்கு பாலோயராகவோ இருப்பதற்கு தகுதி இல்லை.மனுசன் நோ சிகரெட்..நோ தண்ணி..ஆனால் ஒரு லிட்டர் சீமைச்சரக்குடன் வந்தார்.நான்,கேபிள்,வண்ணத்துபூச்சியார் மூவரும் ஒரு காட்டு காட்டி விட்டு அரசப்பருக்கு டின்னருக்கு போனோம்.லக்கிலுக் அங்கு வந்து சேர்ந்து கொண்டார்.பின் கேபிள் பிராபாவை எக்மோரில் ரயில் ஏத்திவிட்டார்.

அன்புத்தம்பி பிராபகர் புது வாழ்வை தொடங்குகிறார்.எல்லாம் வல்ல இறைவனும்,இயற்கையும் அவருக்கு உறுதுணையாய் இருக்கட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்
-------------------------------------------------------------------------------------------------

பெருமை வாய்ந்த” பிள்ளை”யார் என்பதில் சகோதரர்களுக்குள் இன்னும் பனிப்போர் ஓயவில்லையாம்.வள்ளி மணாளனுக்கு இருக்கும் மதிப்பு ஆணைமுகத்தானை டிஸ்டர்ப் செய்து கொண்டே இருக்கிறதாம்.அதனால் தானும் மூலவர் போட்டிக்கு தயாராம்..நான் ஆண்டவர்களை சொன்னேன்.நீங்கள் ஆளுபவர்களை நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல..
-------------------------------------------------------------------------------------------------

ஒரு குறும்படம் பார்த்தேன்..பெயர்’சுயநலம்”.சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியை பற்றிய கதை..ஒரு தெருவில் சாக்கடை அடைப்பு.தொழிலாளிக்கு கடுமையான ஜீரம்.மக்கள் அவனை கட்டாயப்படுத்தி சாக்கடையில் இறக்கி விடுகின்றனர்.அடைப்பை சரி செய்து விட்டு வீடு,வீடாக சுடுதண்ணி கேட்கிறான்..ஒருவரும் உதவாத நிலையில் ஜன்னி வந்து செத்துப் போகிறான்..

இந்த மாதிரி பிரச்சனைகளை ஆவணப்படமாகத்தான் எடுக்கவேண்டும்.கதையை நுழைக்ககூடாது.ஒரு காட்சி..சாக்கடைக்குள் இறங்குகிறான்.முழங்கால் அளவு,பின் இடுப்பளவு சாக்கடை நீர்.பின் கழுத்து வரை.பச்சையாய் ,நுரைத்துக் கொண்டு மலக்கழிவுகள்...அவன் வாய்க்குள் போகிறது.அப்படியே தலையும் நீரில் மூழ்குகிறது..பரிதாபப் பட்டு ’உச்சு”கொட்டவைக்க வேண்டிய காட்சி...மாறாக பெரும்”கைத்தட்டல்”.பின் இயக்குனரிடம் நான் சொன்னேன்..ஐயா..அந்த கரகோஷம் உமக்கு கிடைத்த வெற்றியல்ல..அவர் அதை ஏற்கவில்லை..

அமுதன் என்பவர் இயக்கிய”பீ”என்ற ஆவணப்படம்.மலம் அள்ளுவோர் பற்றிய பதிவு.பெரும் அதிர்வை உண்டாக்கிய குறும்படம்.யூட்யூபில் இருக்கும் என்று நினைக்கிறேன்.சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்..

அழிந்து வரும் கலை “ஒப்பாரி”இதை ஆவணமாக பதிவு செய்யவேண்டும் என்பது என் ஆசை.விரைவில் தொடங்கவிருக்கிறேன்.பதிவுலக நண்பர்கள்,குறிப்பாக தென்மாவட்ட நண்பர்கள் உதவினால் செய்துவிடலாம்.
-------------------------------------------------------------------------------------------------

அதிமுக கப்பல் கிட்டத்தட்ட மூழ்கும் நிலையில்தான் இருக்கிறது போல.கட்சி பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருந்தார்களாம்.இப்ப அதில் 300 கோடி அளவிற்கு நட்டம் காட்டியிருக்காராம் உடன் பிறவா சகோதரி.ஆனால் அவர் நடத்தும் மிடாஸ் ஆலையில் வியாபாரம் கொடி கட்டி பறக்குதாம்.அடுத்தது அதிமுக ஆட்சிதான்.அதனால் கட்சி பிரமுகர்கள்“தாரளாமாகநிதியுதவிசெய்தால்,ஆட்சி வந்தவுடன் அள்ளிக் கொள்ளலாம் என்று அறிவுரையாம். விளங்கிடுமில்ல...

ஆனால் இனி திமுகவை தோற்கடிப்பது முடியாத காரியம் என்று தோன்றுகிறது.
முதலில் “காந்தியை நீட்டு” காரியம் ஆகலைன்னா “கத்தியை காட்டு”என்ற பாலிசி நீட்டாக ஒர்கவுட் ஆகிறது.பரவாயில்லை..சசிகலா&கோ விற்கு இவர்களே தேவலாம் என்று மனதை தேற்றி கொள்ள வேண்டியதுதான்.
-------------------------------------------------------------------------------------------------
என் கவிதை ஒன்றை தம்பி செல்வேந்திரன் தன்னை ஈர்த்ததாக “பகிர்தலில்”சொல்லியிருந்தார்.அவர் பெருந்தன்மை என்னை கவர்ந்தது.பதிவுலகில் வாசகர்களை விட எழுத்தாளர்கள்தான் அதிகம்.அதிலும் சிலர் எங்கே பாராட்டினால் தங்கள் எழுத்து ஆளுமைக்கு இழுக்கு வந்துவிடுமோ என்று இருக்கும் நிலையில்,செல்வாவின் செயல் என்னை நெகிழ்த்தியது..நன்றி செல்வா..
-----------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------
‘கோலம்” அமைப்பை ஞானி தொடங்கியிருக்கிறார்.நல்ல சினிமாவுக்காக ஏங்கும் மக்கள் ஆளுக்கு 500 ரூ கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டுமாம்.2000 பேர் சேர்ந்தவுடன் படம் எடுத்து டிவிடி கொடுப்பார்களாம்.இவர் நல்ல படம்தான் எடுப்பார் என்று நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.ஏற்கனவே ”ஒற்றை ரீல்”இயக்கம் என்று ஒன்றை ஆரம்பித்திருந்தார்.ஒரு படம்தான் எடுத்தார்.அதற்கு “பிரமீடு”சாமிநாதன்ரூ 3 லட்சம் வரை செலவுசெய்தார் என்று ஞானி சொன்னபோது எல்லாரும் கைத்தட்டினார்கள் இருவரைத்தவிர..

அண்ணன் உண்மைத்தமிழனும்,லக்கிலுக்கும்தான் அவர்கள்..பின்ன... இருவருக்கும் பிரமீடு சாய்மீரா நிறுவனம் சம்பளபாக்கி வைத்திருக்கிறது.

சிறப்பு விருந்தினர்களை தவிர ஞானி மட்டுமே மேடையில்..வேறு இளம் புதிய படைப்பாளிகளே இல்லை போலும்...மக்களிடம் பணம் வாங்கி படம் எடுத்து ஹீம்..இது திரு ஞானியின் மேதாவிலாசத்தை பறைசாற்றி கொள்ள மட்டுமே உதவும்..ஊரான் துட்டில் மஞ்சள் குளிப்பது இதானோ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

மகனே..உருகினாள் அன்னை

அப்பா...அன்பு முத்தம் மகள்

அத்தான்...ஆசையுடன் மனைவி

ஐயா...வயதில் மூத்த வேலைக்காரி

சார்...அண்டைவீட்டுக்காரர்

“சாவுகிராக்கி” தெருவில் லாரிக்காரன்

வம்படியாய் மேலே வந்து விழுந்த குடிகாரான்

“தேவடியாப்பையா”

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, August 21, 2009

நாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்




தலைவரே..நீங்கதான் “ஆப்பரசன்”என் கப்பலை கவுத்துட்டு,உங்க கன்னத்துல

கை வச்சிட்டீங்க...




’திருமதி’ன்னு செல்விக்கு பட்டம் சூட்டியாச்சு..அதை பத்தி “திருமதிகள்’என்ன

நினைக்கிறாங்கன்னு கேட்பமா?




‘நீயின்றி நானில்லை’..அப்படின்னு யாரை சொல்றீங்க?”ரெண்டு”ல ஒன்னு

தெரிஞ்சாகனும்..



அந்த “நவாப் நாற்காலி” யை வாங்கி கொடுங்கப்பா....





ஏய்யா...உங்களுக்கு மந்திரிசபையில இடம் கொடுத்தா பதவி ஏற்பு

விழாவுக்குள்ள அடிச்சிட்டு செத்துடுவீங்களே...





இவர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க

வேண்டியிருக்கு..




சோனியாஜி..நாந்தான் மிஸ்டு கால் கொடுத்தேன்.ஹி..ஹி..பேலன்ஸ்

கம்மியாஇருக்கு.கனிமொழிக்கு ஒரு மந்திரிகொடுத்திங்கன்னா,சமாளிச்சிடுவேன்




தெருவில இருந்த ஒரு வீட்டையும் தானம் கொடுத்தாச்சு..இனிமே இங்கதான் ஜாகை..



Thursday, August 20, 2009

தவிர்க்க முடியாமல்.....கவிதைகள்




நாம் வசிக்குமிடம் எங்கும்
அது காத்துக் கொண்டிருக்கிறது
ஒரு தருணத்திற்காக..

தெரியாமல்
அதற்கு பலியாகிறோம்
தெரிந்து அடுத்தவனை பலியாக்குகிறோம்..

ஒத்த பெயருடைய இருவரில்
ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
குருவையே வீழ்த்தியது

குருஷேத்திரம்’ தொடங்கி
’சுப்ரமண்யபுரம்’ சித்திரம் வரை
எல்லா துரோகங்களின் முடிவிலும்
கேட்கப்படும்
”நீயா’ என்ற கேள்விக்கு
நாமாகவும் இருந்தோம்
என்பது வேதனையின்
வெளிப்பாடாகவே..
-------------------------------------------------------------------------------------------------------

நாளை சந்திப்போம்
நிறைய குடிப்போம்
நாக்குழற பேசிப்பிரிந்தோம்

இன்று..நான் மட்டும்
மதுக்கடையில் தனியே..

நண்பன் நினைவில்
“சாக்பீஸ்”சித்திரமாய்..
--------------------------------------------------------------------------------------------------------

Wednesday, August 19, 2009

பிள்ளையுமானேன்.....சிறுகதை



பார்த்தவுடன் கண்டுபிடித்து விட்டேன்.எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன?கண்டுபிடிப்பது மனசுதானே.அப்படியேதான் இருந்தாள்.என்ன..கொஞ்சம் வயசாயிருந்தது.அந்த கம்பீரம் அப்படியே இருப்பதாய் பட்டது.ஆனால் ஒரு மெலிதான சோகம் முகத்தில்.அவள்?பெயர் தெரியாது.தெரிஞ்சுக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

நான் சென்னையில் இருந்தபோது 8.50 மின்சார ரயிலை பிடிப்பேன்.அப்போதுதான் அவளை பார்த்தேன்.லேடிஸ் பெட்டியில் ஜன்னலோர மலராய் பூத்திருந்தாள்...அடுத்த நாள் அந்த ரயிலை பிடிக்க நான் பரபரத்தபோதுதான் என்னை இழந்துவிட்டதை உணர்ந்தேன்.அன்றிலிருந்து அந்த ரயிலை தவறவிடுவதில்லை.ஜன்னல் தரிசனம் ஆனப்பிறகு அடுத்த ரயிலை பிடிப்பதே வழக்கமானது.தொடர்ந்து அவளை பார்ப்பது,கவனத்தை ஈர்ப்பது..பின் பேசலாம் என்று திட்டம்...ஆனால் திடீரென்று ஒரு வாரம் அவளை காணமுடியவில்லை..

கிட்டதட்ட பைத்தியம் பிடித்தது.ஒருதலைதான்.இருந்தாலும் அந்த வேதனை...அதை அனுபவித்தேன் என்றே சொல்லவேண்டும்.அவளூம் என்னை தீவிரமாக விரும்பி,சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக எங்கோ சென்றாள் என நினைத்து,அவள் வருகைக்காக காத்திருப்பின் சுகத்தை ரசிக்க தொடங்கியிருந்தேன்.

அவள்வந்துவிட்டாள்..தனியாகஇல்லை...கூடஒருவன்....
திருமணமாகியிருந்தது...பாக்கியவான்...என்ன வரம் வாங்கி வந்திருக்கிறான்...அதே 8.50 ரயிலதான்...ஆனால் இருவரும் சேர்ந்து பொதுபெட்டியில்.நான் அவர்கள் எதிரில் தேர்டு பர்சன் சிங்குலரில்(இருவர் அமரும் சீட்டில்”கொஞ்சம் அவர்கள் பெரிய மனதுடன் ஒதுக்கி தரும் அந்த இடம்).அவள் எதோ பேசிக்கொண்டே வருவாள்.மெல்லிய குரல்.அவனுக்கு மட்டுமே கேட்கும்.அவன் வாங்கிய வரத்தை அனுபவிப்பது போல் இருப்பான்.அவன் பேசி நான் பார்த்ததில்லை.தேவி உபாசகன் போல் இருக்கை நுனியில் பவ்யமாக உட்கார்ந்திருப்பான்.மணியன் செல்வத்தின் ஓவியம் என்று நான் அவளை வர்ணிப்பேன்.

இப்பவும் அப்படித்தான் இருந்தாள்.காதோரம் கொஞ்சம் நரை.கூட அவன்.கணவனா?எப்படி இன்னும் இளமையாக?ம்ம்ம்..அவன் இல்லை.அவர்கள் மகன் என்று நினைக்கிறேன்.கல்லூரியில் படிக்கவேண்டும்....அப்படியே அப்பா மாதிரி..ஆனால் அந்த மூக்கு அவள்தான்.மீண்டும் அவளை பார்த்தேன்.அந்த உச்சிப்பொட்டு இல்லை.காலில் மெட்டி இல்லை.அப்ப அவன் ...அடப்பாவி.நீ அபாக்கியவானா?இல்லை அவள் அபாக்கியவாதியா?அவள் மகன் அப்பாவை போலவே அமர்ந்திருந்தான்.அவள் பேசிக்கொண்டே வந்தாள்.அறிவுரையாக இருக்கலாம்.

எக்மோரில் நான் இறங்க வேண்டும்.அவர்களூம் எக்மோரில் இறங்கினார்கள்.ஆனால் நான் மீண்டும் ரயிலில் ஏறினேன்.அவர்கள் இருக்கைக்கு சென்றேன்.முதலில் அவள் அமர்ந்த இருக்கையில் அமர நினைத்தேன்.ஆனால்..என்னமோ தெரியவில்லை மகனின் இருக்கையில்அமர்ந்தேன்...உபாசகன் போலவே.
இப்போது அவள் முகம் எனக்கு பேரன்போடு பிரகாசமாய் தெரிகிறது.ஒரு காற்றில் அலைபாயும் சிறகாய்,திரிந்து வந்தாயா?பரிவு காட்டுகிறாள்...கவலை வேண்டாமடா மகனே என்று உருகுகிறாள்....எனக்கு கேட்கிறது.ஆனந்தமாய் அழ ஆரம்பிக்கிறேன்....

Monday, August 17, 2009

ஒரு முனை மழுங்கிய கத்தியும்,சில முகரைகளும்










மொண்ணை கத்தியுடன்
திண்ணை தடியன்
சுயம்வரம் நோக்கி..

வழியில் காலை பதம்

பார்த்த கூர் கற்களில்
தீட்டி,தீட்டி
கத்தி நீண்டு வாளானது.
"கதை" போல் இருந்த
திண்ணை தடியன்
வில் போலானான்.

அவையோருக்கு ஆச்சர்யம்

அவனா “இவன்” என்று.

அமைதியாய் புன்னகைத்தேன்..

நான் தான் “அவனாயிருந்தேன்”
என்பதுதானே உண்மை
-------------------------------------------------------------------------------------------------


இரு தரப்பிலும்
ஒருவர் மட்டுமே மீதி
சண்டையா..சமாதானமா?

அவகாசம்
தேவைப்பட்டது..
யோசித்து முடிவுக்கு வந்தனர்..

பின்... தனித்து வாழ்வது
எவ்வளவு கொடுமை?
-------------------------------------------------------------------------------------------------

கால் தரையில் படவில்லை
கையில் தாங்கினர்

பல்லக்கில் பவனி
குதிரை ஏறி குஸ்தி

அத்தனை எதிரிகளும்
வீழ்ந்தனர்....
அந்தபுரத்தில்
ஆடு புலியாட்டம்

விண்முட்டும்
புகழ்மாலை
ஒரு நொடியில் மாறியது
அலைவரிசை

கால் காற்றில் துழாவ
கத்தினால் சத்தம் வரவில்லை

தப்பிக்க ஒரே வழி
விழித்து விட வேண்டியதுதான்..
-------------------------------------------------------------------------------------------------

நுணுக்கங்கள் பிடிபடவில்லை
நுட்பங்கள் புரிபடவில்லை..

கலைந்து கிடக்கும்
எழுத்துக்களை
கோர்க்கும் சூத்திரம்
தெரியவில்லை

வார்த்தைகளை வசீகரமாய்
வார்க்கும் விதம்
வசப்படவில்லை

அறையெங்கும்
இறைந்து கிடக்கும்
குப்பைகளின் கேலி

“அங்கொன்றும்,இங்கொன்றுமாய்"

மயிர் துருத்தி கொண்டிருக்க
‘என்னடா சிரைத்தாய்” என்று
-------------------------------------------------------------------------------------------------
என் காற்றாடியை
களவு கொடுத்து விட்டேன்
கற்பனையில் செய்த
அற்புதம்..

அது எனக்கு
காக்கை குஞ்சல்லவா?

வார்த்தைகளின் வீரியம்
காற்றில் அடித்து போனது
காத தூரத்தில் அது
அந்தரத்தில்.. அருகே
அழகான கடற்கரை
தேவரும்,அசுரரும்
அமுதம் கடைய அங்கே
வருகை..நானும்

எனக்கான துளியை
அடையாளம் காண

பின்...என்
காற்றாடியை மீட்டு
வந்து... மீண்டும்
சீவி,சிங்காரிச்சு...

Thursday, August 13, 2009

மானிட்டர் பக்கங்கள்........14/08/09




உரையாடல் அமைப்பின் சிறுகதை போட்டி முடிவுகள்
வெளியாகி இருக்கிறது.வெற்றிபெற்றஎழுத்தாளர்களுக்கு மனமார்ந்தவாழ்த்துக்கள்.இதற்காக கடுமையாக உழைத்த ஜ்யோவ்ராம்சுந்தருக்கும்,பைத்தியக்காரனுக்கும் பாராட்டுக்களும்,நன்றியும்..அடுத்து சிறுகதை பட்டறை நடத்தவிருக்கிறார்கள்..பங்கு கொள்ள ஆசை

தமிழில் சிறந்த 100 சிறுகதை தொகுப்புகள்:

1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு ? கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜிம்மிற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

படிக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------

இருந்தால் தன் குடையின் கீழ் நாடு இருக்க வேண்டும்.இல்லையென்றால் நான் குட நாட்டில்தான் கும்மியடிப்பேன் என்கிறார் புரட்சித்தலைவி.கூடவே இருந்து குடியை கெடுத்து கொண்டிருக்கும் தன் பார்ட்னரை அடையாளம் கண்டு துரத்தியடிக்க வேண்டும்..தன் சொத்துக்களை காப்பாற்றி கொள்ள சசிகலா அம்மையாரை கருணாநிதிக்கு பலி கொடுக்கிறார்.சசிகலாவின் மிடாஸ் ஆலையிலிருந்தும்,ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்க தலைவர் ஜெகத்ரட்சகன் ஆலையிலிருந்தும்தான் டாஸ்மாக்கின் 75%கொள்முதல் நடக்கிறது.

-------------------------------------------------------------------------------------------------



விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆரம்பித்துள்ள புதுமையான இயக்கம் காலில் விழும் இயக்கம்.ஏற்கனவே புழல் சிறையில் கைதிகளின் காலில் விழுந்து திருந்தி விடுமாறு மன்றாடியவர்கள்.இப்போது இடைத்தேர்தல் நடைபெறும் பகுதி வாக்காளர் காலில் விழுந்து கொண்டிருக்கின்றனர்.ஓட்டு போடுங்கள்.ஆனால் அதற்கு அன்பளிப்பு வாங்காதீர்கள் என்று கேட்டு கொள்கிறார்கள்.

நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.அநேகமாக உங்கள் வீட்டுக்கும் வரக்கூடும்

-------------------------------------------------------------------------------------------------
ரகசியமாக சொன்ன கதை:

ஒரு புருஷனுக்கும்,பொண்டாட்டிக்கும் சண்டை வந்துடுச்சு.உன்னைய தள்ளி வச்சுட்டன்.வூட்டை வுட்டு இப்பவே ஓடிடுன்னு புருஷன் சொல்லிபுட்டான்.மழையா கொட்டுது.அவ ஊரு ரொம்ப தொலைவு.எப்படி தனியா போறது?மாமனார் நா துனைக்கு வரேன்னார்.கிளம்பி போனாங்க.

வழியில அவளுக்கு ஒண்ணுக்கு வந்துச்சு.மறைவா போனா.போன இடத்துல எப்படியோ ஒரு நட்டுவாக்கிளி ”உள்ளார”பூந்துடுச்சு.வலி பொறுக்காம கத்துனா.மாமனார் என்னம்மா ஆச்சுன்னு கேட்க விவரம் சொன்னா.சரி கொஞ்சம் நேரம் பார்ப்போம்.அதுவா வெளியில வரும்ன்னாரு.ஆனா வரல.அப்ப அந்த வழியா வந்த ஒரு வைத்தியன் சொன்னான்.நட்டுவாக்கிளி மேல சூடா எதுனாச்சும் பட்டா அது வெளியில வந்துடும்ன்னு.என்ன பண்றது யோசிச்சாங்க.பக்கத்துல வீடும் எதுவும் இல்லை..மழையா ஊத்திகிட்டே இருக்க..அப்புறம் ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு........

வீட்டுக்கு திரும்பி வந்த பொண்டாட்டியை புருஷன் ஏண்டி..வந்தன்னு அடிக்க போனான்.மாமனார் சொன்னாரு”டேய்..இனி அவ உனக்கு சித்திடா”
-------------------------------------------------------------------------------------------------
முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகி கொள்..
----------------------------------------------------------------------------------------
எஸ்.எம்.எஸில் வந்த ஜோக்:

கணவன் : இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் டார்லிங்.

மனைவி : ஆனா.எனக்கு நைட்டுல இதுதான் பர்ஸ்ட்..
-----------------------------------------------------------------------------------------------



Wednesday, August 12, 2009

எந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம்

எல்லா பதிவர்களூம் திரைபட விமர்சனம் எழுதறாங்க..நானும் ஒண்ணு
எழுதலாம்னுதான்..நா ஏற்கனவே எழுதுன ஒரு மேட்டர கொஞ்சம் தூசு
தட்டி..இதோ...


எப்போ? எப்போ? என்று எதிர்பார்த்த எந்திரன் வெளியாகிவிட்டது..ஆனால்ரோபோ? என்ற பெயரில்..(தமிழ் தலைப்புக்கு வரிச்சலுகைகிடையாது..
என்ற புதிய அறிவிப்புதான் காரணம்...(என்ன ஒரு தமிழ்பற்று..)சன் டிவி
பிரமாண்ட தயாரிப்பு(200 கோடி என்று பேச்சு). இன்னும் கண்டு பிடிக்காத இடங்கள் தவிர எல்லா இடங்களிலும் படம்
பிடித்தது.ரஜினி..முன்னாள் உலக அழகி...ஷங்கர்..ஆஸ்கார் ரகுமான்.
அதைவிட சன் குழுமத்தின் 24 சானல்கலிளும் 24 மணி நேரமும் விளம்பரம்

பணம் போடுவதற்க்கு ஆள் கிடைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும்
செலவு செய்வேன்.என்று மீண்டும் நிருபீத்திருக்கிறார் காதல்,கல்லுரி,வெய்யில் போன்ற பட்ஜெட் படங்களின்
தயாரிப்பாளர் ஷங்கர்

8ஹெலிகாப்டர்கள்(ஷங்கரின் ராசி எண்) வானில் வட்டமடிக்க,பூனா
மும்பை சாலையில் 24 பி.எம்.டபிள்யூ கார்கள் பறக்க(எவன் அப்பன் வீட்டுகாசு),ஒரு காரில் ரஜினி உலக அழகியுடன் பறக்க பின்னால் இன்னொரு
ரஜினி துரத்த.படம் சூடு பிடிக்கிறது.

தனது வழக்கமான பார்முலாவை தள்ளி வைத்து விட்டு புதிய பாதையில்
பயணித்திருக்கிறார் இயக்குனர்.சைன்டிஸ்ட் ரஜினி? அவரை துரத்தி
துரத்திகாதலிக்கும் ஐஸ்..ரஜினி தந்தையாக நாட்டின் தலைவராக
சாருஹாஸன்..அவரை கொன்று விட்டு நாட்டை ஆள நினைக்கும்
வில்லன்..வில்லனின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் சாருஹாசன் தான்ஒரு பனிப்புயலில் சிக்கி மறைந்து விட்ட்து போல் ஒரு நாடகம்போடுகிறார்.சந்தானமும்,கருனாசும் இதற்கு உதவுகிறார்கள்...நாட்டின்தலைமை
பொறுப்பு ரஜினியிடம் வருகிறது.ஆனால் ரஜினியோ ஐஸை விட்டு பிரிய மனமில்லாமல்(இருவரும் வேறு நாட்டில் படித்து
கொண்டிருக்கும்போது காதலிக்கின்றனர்) தன்னை போலவே ஒரு
பிம்பத்தை உருவாக்குகிறார்.அதுதான் ரோபோ..???ரோபோவை நாட்டின்
தலைவராக இருக்கும்படி ப்ரொக்ராம் செய்து விடுகிறார்.பின்என்ன?
ஐஸ்வர்யாவுடன் கும்மாளம்தான்?


முதல் டூயட் பாடலான

"ஐஸ்..ஐஸ்.. வர்ரியா..கிஸ்..கிஸ்..தர்ரியா..
மெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்
பாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்..
வாலி எழுதிய இந்த தமிழ் பாடல் 185 நாடுகளில் 186 நாட்கள் படம்பிடிக்க
பட்டது...1500 டான்சர்கள்,1501குதிரைகள்,1502 மான்கள்,1503மயில்கள்...
1000 டன் சாம்பிராணி..2000 டன் தக்காளி
மொத்த செலவு 40 கோடி..

சரி ..கதைக்கு வரலாம்...நாட்டை கைப்பற்ற நினைக்கும் வில்லன்
ரோபோவை ரஜினி என்று நினைத்து கொல்ல முயற்சிக்கிறான்.. ஹாலிவுட்டை அசால்ட்டாக முந்தியிருக்கிறார் இயக்குனர்..திடீர்
திருப்பமாக ரோபோவின் சாப்ட்வேர் கரப்ட் ஆகி மனிதனை போல் காதல்
உணர்வு வந்து விடுகிறது..வில்லன் ஒரு பெண் ரோபோவை(ஐஸ்வர்யாவை போலவே)உருவாக்கி ரஜினி ரோபோவுடன் நெருங்கவிடுகிறார்கள்..நாட்டுக்கு ஐஸூடன் ரகசியமாக வரும் ரஜினி இரண்டுரோபோக்களும்நெருக்கமாக இருப்பதை பார்த்து விடுகிறார்....தான் செய்த ப்ரொக்ராம் மாறிவிட்டது என்று உணருகிறார்...(முதல் பாதி முடிவு)

இடைவேளை வரை ரோபோ விமர்சனம் பார்த்திருப்பீர்கள்..மன்னிக்கவும்
நண்பர்களே.நான் அதுவரைதான் படம் பார்த்தேன்..அதன் பின்......கறுப்பு
சட்டை அணிந்த குண்டர்களின் தடியடி,ஆசிட் முட்டை வீச்சு.....பெட்ரோல்குண்டுகள் வீச்சு..எங்கும் கலவரம்.....ரத்த ஆறு...????காரணம்..அஞ்சாநெஞ்சன் அழகிரி....

மதுரைமாநகராட்சிபொறுப்புகுழுஉறுப்பினர்
மாண்புமிகு "அட்டாக்" பாண்டி தலைமையில் வந்த கும்பல்...ரோபோ
திரையிடப்பட்டிருந்த அத்தனை இடங்களிலும் இந்த கதிதான்...இந்த
சம்பவத்தில் மதுரை ஆட்கள் யாரும் ஈடுபவில்லை...கோர்ட் மூடி
விட்டதால் வக்கீல்களுக்கு இந்த பணியை கொடுத்து விடுமாறு அண்ணன்பெருந்தன்மையுடன் கூறி விட்டதாக அவர் மேலும் கூறினார்.

சம்பவ இடத்தில் பேட்டி அளித்த காவல் துறை தலைவர்..."அனைவரும்
அமைதியாக அலறிக் கொண்டே" கலைந்து விட்டதாகவும்,நிலைமை
இப்போது கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் அட்டாக்பாண்டி" அண்ணன் ஆணையின்படி 1500 மொபைல் ஹோம் தியேட்டர்கள்
தமிழ் நாடு முழுவதும் உலவிக்கொண்டிருக்கும்..பொது மக்கள்
இலவசமாக ரோபோவை பார்க்கலாம்...மேலும் படம் பார்க்கும்
அனைவருக்கும் ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்..என்றும் அவர் மேலும் கூறினார்.மீறி படத்தை யாராவது திரையிட்டால் அவர்கள்
மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் கூறினார்.காவல் துறை
தலைவரும் அதை ஆமோதித்தார்.

காற்று கூட எங்கள் இடையில் இனி நுழையாது என்று அழகிரி, மாறன்
சகோதரர்களை பற்றி சொன்னது என்னவாயிற்று??கலவரம் எப்படி
நுழைந்தது??பின் வரும் ரோபோ உருவாக்கம்...பரபரப்புசெய்திகளில்...................

ரோபோ.....திரைக்கு பின்னால்.....
முதலில் மீண்டும் எப்படி பிரிவு/பிளவு ஏற்பட்டது..
இதற்கு மூலக் காரணம் ஷங்கர்தான் எங்கின்றனர்..தகவலறிந்தவர்கள்..
சன் பிக்சர்ஸ் லோகோ வை சூரியனில் போய் ஷுட் பண்ணலாம் என்று
ஷங்கர் பிரியப்பட்டிருக்கிறார்..இதற்காக திரு. மயில்சாமி அண்ணாதுரை,திரு.அப்துல் கலாம் ஆகியோரிடமும் ஆலோசனைகேட்கபட்டிருக்கிறது..ஆனால் அருகிலிருந்த தயாநிதிஎன்னது?சூரியனுக்கா..நாங்க இங்கிருந்தே சூரியனை(உதய)சுடுவோம்..தெரியுமில்லே..என்று வாய்த் துடுக்காக
சொல்லிவிட்டாராம்..இது அழகிரி காதுக்கு போக ..வந்தது வினை...

"நாங்கள் சிறியவர்கள்தானே, எங்களை மன்னிக்கக் கூடாதா..என்று
செல்விமூலம் தூது அனுப்பியதாக ஒரு தகவல்???

ஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....
ஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....
டைனமைட்…. என் மடியில் ....
அண்டார்டிகாவில் செய்வோம்...லவ் ஃபைட்.
பிப்பெட் நீதான்.... பீயுரெட்.நாந்தான்..
டெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை
யூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....
கூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...
பிளாக்குகளில் பாடி.....பாரடைஸ் போகலாம்...
என் பிளாக் பெர்ரி நீ வாடி....

கலைமாமணி,வித்தக கவிஞர் பா.விஜய் ..எழுதிய இந்தப் பாடல்
பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் நடை பெற்றது...இப்பாடலுக்கு 5000குளிர்சாதன பெட்டிகள் கொண்டு செட் அமைக்க வேண்டும்என்றுஷங்கர்பிரியப்பட....உடனே கொரியாவிலிருந்து சாம்சங்க்கம்பெனியிலிருந்துவரவழைககபட்டது.

இங்கு பிரிட்ஜ் விற்ற முதல் கம்பெனி நாங்கள்தான் என்று
அக்கம்பெனியின்தலைமை நிர்வாகி சூ சென் பெருமையுடன் கூறினார்..
படபிடிப்பு முடிந்தவுடன் 5000 குளிர் பெட்டிகளையும் அங்கிருந்த
எஸ்கிமோக்களுக்கு இலவசமாகவே வழங்க வேண்டுமென்று ரஜினி கூறிவிட கலாநிதி மாறன் மிகவும் பெருந்தன்மையுடன் சம்மதித்து விட்டார்.

கரு விழி..குரு பார்வை
சுரு..சுரு நாசி..என் பெயரை நீ சுவாசி
செவ செவ அதரம்..நீ என் மதுரம்...
பழ ..மலை...கீழே நூலிடை
அதன் பின் ஆலிலை..

வாலி எழுதிய இந்த பாடலும் சீரோ டிகிரி குளிரில் படமாக்கபட்டபோது
ரஜினி எவர் சில்வரில் செய்யபட்ட முழு ஆடை அணிந்திருந்தார்(மனிஷ்
மல் ஹோத்ரா)..ஐஸ் புதுமையாக(3) இலைகளினால் வடிவமைக்கபட்ட
இலக்கிய நயம் சொட்டும் உடை அணிந்திருந்தாராம்.


ஒரு முக்கிய செய்தி...
இயக்குனர் ஷங்கரின் அடுத்த சொந்த படத்தை அவர் உதவியாளர்
இயக்குகிறார்.படபிடிப்பு முழுவதும் "எஸ்" பிக்சர்ஸ் அலுவலகத்திலேயே நடைபெறும்...என்று ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.






Monday, August 10, 2009

சேஷூ...சிறுகதையாய் முடிந்த ஒரு நாவல்..........








விடாமல் மொபைல் அடித்துக் கொண்டேயிருந்தது.கண்ணை திறக்கமுடியாமல் எரிச்சல்.நைட்டு அடிச்சது கொஞ்சம் ஓவர்தான்.மீண்டும் ஒலிக்க எடுத்தால் “சேஷு” calling.. என்ன இந்த நேரத்துல..கரகரப்பாய் ஹலோ என்றேன்..அண்ணா..பாரதி பேசறேன்..குரல் உடைந்து இருந்தது.பாரதி சேஷுவின் மனைவி.

என்னம்மா?சேஷு இன்னும் வரலையா?

அண்ணா..அவர் போயிட்டார்.

குப்பென வியர்த்தது..வாட்..என்னம்மா சொல்றே?

ராத்திரியெல்லாம் தூக்கம் வராம அவஸ்தை பட்டு கிட்டிருந்தாரு..டீ வேணூம்னு கேட்டாரு..போட்டு எடுத்துகிட்டு வர்ரதுக்குள்ள.....அழ ஆரம்பித்தாள்.

சேஷு ஒரு விளம்பர காப்பி ரைட்டர்.பெரிய ஏஜன்சிகளின் ஆபத்பாந்தவன்.கான்செப்ட்டும்,ஒரு மணி நேரமும் கொடுத்தால் போதும்..பின்னி விடுவான்..அந்த பெயிண்ட் விளம்பரமும்,மசலா விளம்பரமும் ஹிட் ஆனதுக்கு முழு காரணம் சேஷூதான்.குடி,சிகரெட் எல்லாம் ஓவர்டோஸ்தான்.குழந்தை இல்லை.”பாரதிதான் எனக்கு குழந்தை.என்ன... அவதான் குழந்தை இல்லைன்னு பித்து பிடிச்சு பேசுவா.

பாரதி..நா கிளம்பிட்டேன்.நீ தைரியமா இரு..

அண்ணா..அவர் வீட்டுல சொல்லிடுங்க.

இருவரும் காதல் திருமணம்.பாரதிக்கு அப்பா,அம்மா யாருண்ணே தெரியாது.ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவள்..சேஷூவின் வீட்டில் எதிர்ப்பு.மீறி பதிவு திருமணம்.நான் தான் கையெழுத்து போட்டேன்.” இனி அந்த பெண் என்ன செய்யப் போகிறாள்..

ரெண்டாவது ஒலிப்பில் போனை எடுத்து விட்டான் ராஜூ..சேஷூவின் தம்பி.ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஒரு பாங்கில் வேலை..

என்னன்னா?இந்த நேரத்தில்..

விவரம் சொன்னேன்...

நா வர்ர வரைக்கும்???

பாவி நீதான் கொள்ளி போடணும்..சீக்கிரம் வா..ஃப்ரிசர் பாக்ஸ் அரேஞ்ச் பண்ணிடறேன்..

லிண்டாஸ் வைத்தி,ஓ அண்ட் எம் காத்ரீன் சொன்னவுடன் வெடித்து அழ ஆரம்பித்தாள்.நைட்டு மப்பு இன்னும் இருக்கும் போல.போன வாரம் அவள் வீட்டில் ஒரு பார்ட்டி..குறையொன்றும் இல்லை என்று சேஷூ பாட,அவள் ஒன்ஸ் மோர் கேட்டது ஞாபகம் வந்தது.நெருங்கிய அனைவருக்கும் தகவல் சொல்லி நான் சேஷூவின் வீட்டை அடைந்தபோது யாரும் வந்திருக்கவில்லை.வாசலில் பாரதி விலகி வழிவிட ஹாலில் அது ஒருக்களித்து இருந்தது.திடுக்கிட்டு பாரதியை கேள்விக்குறியுடன் பார்த்தேன்..

இப்பதான் அண்ணா..திரும்பி படுத்துகிட்டார் என்றாள்

தலை சுற்றுவது போல் இருந்தது..பாரதி வெறித்த பார்வையுடன் இருக்க உலுக்கினேன்

இல்லண்ணா..ஒரே பக்கமா படுத்து உடம்பு வலிக்குமேன்னு நாந்தான் திருப்பிபடுக்க வச்சேன்..எழுப்பட்டுமா?

சேஷூவை தொட்டு பார்த்தேன்.உடல் சில்லிட்டு சர்வ நிச்சயமாக செத்து போயிருந்தான்.

அண்ணா ..அவருக்கு போட்ட டீ ஆறி போய் அப்படியே இருக்கு.சூடு பண்ணி கொண்டு வரட்டுமா?


கடவுளே.என்ன கொடுமை இது..என்ன ஆச்சு ?இவளுக்கு? மனசிதைவு? நொடியில் மனம் பிறழுமா என்ன?

பாரதி..நீதானே சொன்ன..சேஷூ போயிட்டான்னு..அதுதான் உண்மை...உனக்கு அழுகை வரலையா?வாய் விட்டு கதறுடி..

தெளிஞ்சவுடனே அவரே எழுந்திருப்பார் விடுங்கண்ணா..

தகவல் தெரிந்த நண்பர்கள் வர ஆரம்பித்திருந்தனர்..காத்ரீன் பாரதியை ஆறுதலாக அணைத்து விசும்ப ஆரம்பித்திருந்தாள்..அநேகமாக வரும்போது லேசாக குடித்திருக்க வேண்டும்.ஃப்ரிசர் பாக்ஸ்காரன் மொபைலில் அழைத்து விலாசம் சரி பார்த்துக் கொண்டான்.எனக்கு குடிக்க வேண்டும் போல் இருந்தது.காத்ரீனிடம் இருக்கா என்று கேட்டேன்..கார் சாவியை கொடுத்தாள்.

சேஷூ....எனக்கு தாமதமாகத்தான் அறிமுகம்..நமக்கு மிகவும் பிடித்தமானவர்கள் தாமதமாக அறிமுகமாகி,சீக்கிரம் பிரிந்து விடுவது எவ்வளவு வேதனையை தருகிறது.தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருந்தது.இருந்தாலும் அந்த எரிச்சல் எனக்கு தேவையாயிருந்தது.சிகரெட் பற்ற வைத்து கொண்டேன்..சேஷூவுக்கும்,எனக்குமான நட்பு ஒரு எட்டு வருடம் இருக்கலாம் முதல் சந்திப்பே ஒரு மதுக்கடையில்தான்..யாருடனோ விவாதித்து கொண்டிருந்தவன் என் கவனத்தை இழுத்தான்..தீப்பெட்டி இருக்குமா?என்ற சாதாரண கேள்வியுடன் அவர்கள் உரையாடலில் நுழைந்தேன்..அவன் பேச,பேச என்னை அவனிடம் இழந்தேன்.ம்ம் சேஷூவிற்கு இப்படி எதுகை,மோனை பிடிக்காது .அது ஆர்டிபிஷியலாக இருக்கும்..நேரா சொல்லணும் என்பான்..மொபைல் அடித்தது.ராஜு..

அண்ணா..திருச்சி தாண்டிட்டேன்.இன்னும் அஞ்சு மணிநேரம் ..வந்துர்றேன்..

மரணத்தை பற்றி சேஷூவிற்கு சிலாகித்து பேச பிடிக்கும்.அதுவும் சாராயம் குடித்து விட்டால் சாவை கொண்டாடியே விடுவான்.இதற்கென்று திருநீர்மலைக்கு போவோம்...வா அய்யரே..வரவேற்று சொம்பில் கொடுப்பார்கள்.சேஷூ முதலில் பியுரிட்டி செக் பண்ணனும்னு சொல்லி பத்து ரூபாய் நோட்டை நனைத்து கொளுத்துவான்..ஸ்பிரிட் வரைக்கும் எரியும் பாரும்பான்..பின் பேச ஆரம்பித்தால் அருவிதான்.ஆங்கிலமும் தமிழும்அருவியாய்கொட்டும்உலகசினிமா,இலக்கியம் எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள்களுடன்...சிகரெட் கையை சுட இன்னொன்று பற்ற வைத்துக் கொண்டேன்..

செத்தா அழறது எனக்கு பிடிக்கலை.எதுக்கு அழனும்?ஒரு போராட்டத்துக்கு அப்புறம் கிடைக்கிற விடுதலை..அதை அனுபவிக்கனும்டா..படுக்க வச்சு,மெலிதாக பகவத்கீதை,கண்ணதாசன் பாடல்கள்,எம்.எஸின் பஜகோவிந்தம் அப்புறம் குறையொன்றும் இல்லை ஒலிக்கணும்.

சே..நினைச்சாலே எவ்வளவு ஆனந்தமா இருக்கு..அதுவும் கண்ணதாசன் மரணத்தை வென்றவன்..அவன் பாட்டு சாவு வீட்டில ஒலிக்கிறது எவ்வளவு பொருத்தம்..ஆனா அவன் தான் “பாவி..அல்பாயுசல போயிட்டியேடா?போதை தலைக்கேற சேஷூ அழ ஆரம்பித்தான்.

மழுங்க வழிக்கப்பட்டு குளிப்பாட்டி திருமண்,ஸ்ரீசூர்ணம் இட்டு சேஷூ என்ற சேஷாத்திரி அய்யங்கார் ஹாலில்கிடத்தப்பட்டிருந்தார்..மெல்லியதாக எம்.எஸின் குரல் கேட்டுக் கொண்டிருக்க அருகில் சென்றேன்...

காலையில் பார்த்த சவக்களை இல்லை.ஒரு வித பரவசம்..தேஜஸ்.. சொல்லிக்க முடியலைடா..திடீர்னு அழைப்பு வந்துடுச்சு..என்று அவன் முகத்தில் உறைந்திருந்த மர்மபுன்னகை சொல்வது போல் இருந்தது

என் பிரிய சிநேகிதா..சேஷா...போ..வருகிறேன்.. சந்திப்போம்...குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டேன்...துக்கமும்,போதையும் தலைக்கேறியிருந்தது..

அவனுக்கு மிகவும் பிடித்த,இந்த பாட்டுக்காக சாகலாம்டா என்று அவன் உருகிய.....

"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல

வளரும் விழி வண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே!

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளந்தென்றலே - வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே!'

சத்தமாக வாய் விட்டு பாடி...

“பாவி கண்ணதாசன் மட்டுமா?நீயும்தாண்டா....அடக்க மாட்டாமல் வெடித்து...........